06/05/2026
மீராவோடை அல் ஹிதாயா மஹா வித்தியாலயத்தின் மாணவர்தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு - 2026
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் மீராவோடை அல் ஹிதாயா மஹா வித்தியாலயத்தில் மாணவர்தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு 04.05.2026 அன்று சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.சி.எம். அஜ்மீர்(SLPS-II) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.எம். மீராசாஹிப் ஹலால்தீன்(JP) அவர்கள் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதியாக பிரதேச சபை உறுப்பினர் கே.பி.எஸ். ஹமீட், NCC லெப்டினன்ட் MB. ஜெமீல் (SLPS-II), NCC 2nd லெப்டினன்ட் RAM. பா(b)ஸித் அவர்களும் ஏனைய அதிதிகளாக பாடசாலையின் SDEC யின் செயலாளர் M. தஜ்ஹீர் (மௌலவி) மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய தவிசாளர் எம்.எம்.மீராசாஹிப் ஹலால்தீன், மாணவத்தலைவர்கள் பதவியேற்கும் நிகழ்வு இப்பிரதேசத்தில் முதன்முறையாக இவ்வளவு நேர்த்தியாகவும் முன்மாதிரியாகவும் அல் ஹிதாயா மஹா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பெருமைக்குரியது. மாணவர்கள் கல்வியுடன் கூடிய ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் எதிர்கால சமூகத்தின் தலைவர்களாக உருவாக வேண்டும் எனும் நோக்கிலான இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அவசியமானவை. இளம் தலைமுறைக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும்.
கல்வி மட்டுமன்றி, நல்ல பண்புகள், சமூகப்பொறுப்பு, ஒற்றுமை உணர்வு ஆகியவை மாணவர்களிடம் வளர்க்கப்பட வேண்டியது முக்கியம். மாணவத்தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து, பிற மாணவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்பட வேண்டும். ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பங்காற்ற முடியுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் பங்குபற்றுதளுடன் இனிதே நிறைவடைந்தது.
~ 𝙃𝙈𝙑 𝙈𝙚𝙙𝙞𝙖 𝙐𝙣𝙞𝙩 ~ | Mohamed Rifnas