Dr Alavi Sheriffdeen School for Pioneers DASSP

Dr Alavi Sheriffdeen School for Pioneers DASSP Dr Alavi Sheriffdeen School for Pioneers DASSP
கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகள் பாடசாலை

Evening school for year 7-11 students, preparing leaders of tomorrow focussing on moral and academic development aiming to achieve excellence

16/06/2026
இன்று எமது சகல கல்வி நிலையங்களிலும் 2026 ஆம் வருடத்திற்கான முதலாம் பருவ பரீட்சை (semester exam) ஆரம்பமாகியது.
13/06/2026

இன்று எமது சகல கல்வி நிலையங்களிலும் 2026 ஆம் வருடத்திற்கான முதலாம் பருவ பரீட்சை (semester exam) ஆரம்பமாகியது.

https://www.virakesari.lk/article/249623
12/06/2026

https://www.virakesari.lk/article/249623

A special Hajj festival event commemorating Prophet Ibrahim's sacrifice was held at Dr. Alavi Shareefdeen Pioneers' School, DASE Campus in Manjanthoduwai.

ஹஜ் பெருநாள், துல்ஹஜ் மாதம் மற்றும் இப்ராஹிம் (அலை) அவர்களின் குடும்பத்தை நினைவுகூறும் சிறப்பு நிகழ்வு.🌙புனித ஹஜ் மாதத்த...
10/06/2026

ஹஜ் பெருநாள், துல்ஹஜ் மாதம் மற்றும் இப்ராஹிம் (அலை) அவர்களின் குடும்பத்தை நினைவுகூறும் சிறப்பு நிகழ்வு.

🌙

புனித ஹஜ் மாதத்தை, ஹஜ்ஜுப் பெருநாளைச் சிறப்பிக்கவும், ஹஸரத் நபி இப்ராஹிம் (அலை) அவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் எமது மாணவர்களுக்கு உணர்வுபூர்வமாக நினைவூட்டவும் என விசேட பெருநாள் நிகழ்வொன்று கலாநிதி அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையின் மஞ்சந்தொடுவாய் DASE வளாகத்தில் 10.06.2026 அன்று புதன்கிழமை இனிதே இடம்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

எமது பாடசாலை மாணவர்கள் ஒழுங்கு செய்த உணவுகள், பழங்கள், இனிப்புப் பண்டங்கள், குளிர்பானங்கள் பரிமாறப்பட்ட இவ்வினிய நிகழ்வு, சகோதரத்துவத்தையும், நட்புறவையும் மேம்படுத்தஉவதனை நோக்காகக் கொண்டவை.

நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் இருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ளக் கூடிய வகையில், அவர்களின் வரலாற்றை உணர்வுபூர்வமாக உணர்த்துவதற்காக தத்ரூபமான காணொளியொன்றும் காட்சிப்படுத்தப்பட்டது.

உணவுகள், பழங்கள், இனிப்புப் பண்டங்கள், குளிர்பானங்கள், காணொளி மற்றும் தர்பிய்யா ஆகிய அனைத்திலும் எமது மாணவர்களும், ஆசிரியர்களும், ஊழியர்களும் மிக மகிழ்ச்சியாகக் கலந்து சிறப்பித்தனர்.

பெரும் வரலாற்றைச் சுமந்து நிற்கும் துல்ஹஜ் மாத மகத்துவத்தை, பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் தொண்டர்கள் என எல்லோரும் இணைந்து மகிழ்ச்சியுடன் சிறப்பிக்க அருள்புரிந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

மேற்படி முன்மாதிரி நிகழ்வைச் சிறப்புற நடாத்துவதற்கு ஊக்கமும், ஆதரவும், அனுமதியும் அளித்த எமது ஸ்தாபகத் தலைவர் கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்களுக்கும், இந்நிகழ்வுக்குப் பங்களிப்புச் செய்த பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், ஏற்பாட்டில் உதவிய ஊழியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது தூய முயற்சிகளைக் கபூல் செய்து அதன் பலன்களை நம் அனைவருக்கும் ஈருலகிலும் அருள்வானாக. ஆமீன்.

ஏற்பாட்டுக்குழு.
கலாநிதி அலவி ஷரீப்தீன்
முன்னோடிகளின் பாடசாலைகள் (DASSP)
மஞ்சந்தொடுவாய்.

08/06/2026

மஹ்ரிப் தொழுகையின் பின்னர் எமது மாணவர்கள் குர்ஆன் ஓதும் வேளை இது

Address

68 North Boundary Road, Manchanthoduwai
Batticaloa
30100

Alerts

Be the first to know and let us send you an email when Dr Alavi Sheriffdeen School for Pioneers DASSP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dr Alavi Sheriffdeen School for Pioneers DASSP:

Shortcuts

Share

Category