03/02/2026
🍎 ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு: விடுமுறை விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள்! 📝
உங்களது விடுமுறை உரிமைகள் மற்றும் அவற்றை முறையாகப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் திட்டமிடலுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!
✅ விடுமுறை வகைகள் மற்றும் கால அளவு:
🔹 அமைய விடுமுறை (Casual Leave):
ஆண்டுக்கு 21 நாட்கள்.
ஒரு தடவையில் அதிகபட்சம் 06 நாட்கள் வரை எடுக்கலாம்.
(அனுமதி: பாடசாலை அதிபர்)
🔹 மருத்துவ விடுமுறை (Sick Leave):
ஆண்டுக்கு 20 நாட்கள்.
02 நாட்களுக்கு மேல் எடுப்பதாக இருந்தால் மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பித்தல் அவசியம்.
(அனுமதி: பாடசாலை அதிபர்)
🔹 பிரசவ விடுமுறை (தாய்மாருக்கு):
முழுச் சம்பளத்துடன் 84 வேலை நாட்கள், அரைச் சம்பளத்துடன் 84 நாட்கள் மற்றும் சம்பளமின்றி 84 நாட்கள் என சலுகைகள் உண்டு.
(அனுமதி: வலயக் கல்விப் பணிப்பாளர்)
🔹 தந்தைக்கான பிரசவ விடுமுறை:
குழந்தை பிறந்து 3 மாதங்களுக்குள் 03 நாட்கள் விசேட விடுமுறை பெறலாம்.
🔹 கற்கை விடுமுறை (Study Leave):
தேர்வுகளுக்குத் தயாராக: டிப்ளோமா மாணவர்களுக்கு 10 நாட்களும், B.Ed மாணவர்களுக்கு 20 நாட்களும் வழங்கப்படும்.
🔹 குறுகிய கால விடுமுறை (Short Leave):
மாதம் இரு தடவைகள் (தலா 1 மணித்தியாலம்) பெற்றுக்கொள்ளலாம்.
⚠️ கவனிக்க வேண்டிய கடமை நேர விதிமுறைகள்:
📍 தாமதமாக வருதல்: காலை 7:30 முதல் 8:00 மணிக்குள் மூன்று முறை தாமதமாக வந்தால், அது அரை நாள் விடுமுறையாகக் கருதப்படும்.
📍 8:00 மணிக்கு பின்: முற்பகல் 8:00 மணிக்கு மேல் வரும் ஒவ்வொரு முறையும் அரை நாள் விடுமுறையாகவே கணக்கிடப்படும்.
📍 அரை நாள் விடுமுறை: அரை நாள் விடுமுறை எடுப்பவர்கள் குறைந்தபட்சம் 3 மணிநேரம் கடமையாற்றியிருக்க வேண்டும்.
01/02/2026
Please share 🙏
📌👉📝 மாணவர்களுக்கானது..........‼️
உலக மற்றும் இலங்கைப்படங்கள்
🎯வரலாறு
🎯புவியியல்
பலர் பயனடையலாம்.
20/01/2026
தற்கால மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் மாட்டித்தவிர்பதை சித்தரிக்கும் படம்…
13/01/2026
புதிய கல்வி சீர்திருத்தம் தரம் 6 க்கு 2027 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைப்பு - அமைச்சரவை.
08/01/2026
எச்சரிக்கை பதிவு ‼️‼️‼️
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
அத்துடன் 9,10 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டம் மிக அதிக மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் தாக்கம் டித்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க முடிகின்றது.
எனவே பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை அவதானத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
21/12/2025
📌👉தனது எதிர்கால கல்விக்கு என்ன நடக்கும் என்று கடுகளவேனும் சிந்திக்காமல் ஒட்டுமொத்த பாடசாலை நிர்வாகத்தையே புரட்டிபோட்டு அநீதிக்கு எதிராக நின்ற
Gen Z தலைமுறையின் சூப்பர் கேர்ள் பற்றிய தேடல் தான் இது.
இலட்சியங்கள் சமூகமயப்படுத்தபடும்
அதே நேரத்தில் முரைகேடுகளும் துர்நடத்தைகளும் சமூகமயமாக்கப்பட்டால், அந்த சமூகம் பழமைவாதத்துக்கு
இன்னும் ஆழமாக தள்ளப்படுகிறது என்று பொருள் படும்.
இந்த படுபாத செயல்கள் ஒரு நாட்டின் உயரிய சபை பாராளுமன்றத்தை மாத்திரமல்ல இன்று கல்வி போதிக்கும் பாடசாலைகளை கூட விட்டு வைக்கவில்லை.
உண்மையில் பிள்ளைகளின் உணர்வு, புரிதல், சுய கெளரவம், சிந்தனை,உள்ளம், செயல் என அனைத்தையும் சலவை செய்து அவர்களுக்கு அறிவுரைகளையும் புத்திமதிகளையும் கூறி முன்னுதாரணமாக இருந்து குறிக்கோள் உள்ள ஒரு பிள்ளையை உருவாக்க வேண்டிய பாடசாலை கட்டமைப்பு உணர்ச்சி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் (Emotionally and physiologically affected )பாதிக்கப்பட்ட ஒரு பிள்ளையை சமூகமயப்படுத்தி விடுகிறது.
பெரும்பாலான நேரங்களில் இந்தப் பாடசாலை கட்டமைப்புக்குள் பாரிய அநீதி இழைக்கபடுகிறது.
ஆனால் தமக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றும் தெரிந்தும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் பயத்தால் வாய் திறப்பதில்லை.
ஆனால் இந்த Gen Z தலைமுறை என்பது வேறு. படு பயங்கரமானது. இதனால் தான் இந்த தலைமுறை பிள்ளைக்கு பின்னால் இருந்த அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் தாம் அசிங்கப்பட போகிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் நடந்த கலர்ஸ் நைட் நிகழ்வு தான் இது.
பிள்ளையின் பெயர் சனித்மா சினாலி.
கடந்த 2023 இல் பாடசாலையின் விளையாட்டு தலைவியாக இருந்து இருக்கிறார்.
அவர் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இறுதிப் போட்டி வரை சென்று இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பல வருடங்களாக பாடசாலைக்கு புகழை ஈட்டிகொடுத்து இருக்கிறார். இனி இல்லையென்று திறமையான மாணவி என்று அவரது கடந்த காலம் சொல்கிறது.
கலர்ஸ் நைட் அன்று காலை Rehearsal க்கு செல்லாமையால் சனித்மாவுக்குரிய விருது பிறிதொரு மாணவிக்கு சென்றிருக்கிறது.
காலையில் பரீட்சை ஒன்றிருக்கிறது தன்னால் Rehearsal க்கு வர முடியாது என சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு அறிவித்தும் அநியாயம் நடந்து இருக்கிறது சனித்மாவுக்கு.
ஆனால் அதனை பாடசாலை நிர்வாகம் வேண்டுமென்றே புறகணித்து இருக்கிறது. ஏன் ஒரு திறமையான மாணவி பாடசாலை நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு இருக்கிறார்?
தகுந்த காரணம் இருந்தும் தனக்கு கிடைக்கவேண்டிய பாராட்டு பிறிதொருவருக்கு வழங்குவது எவ்வளவு பெரிய அநியாயம்?
நானோ நீங்களோ சும்மா இருப்போமா இல்லை தானே.
இங்கு தான் இருக்கிறது ட்விஸ்ட்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை சனித்மா மைக்கை எடுத்து வெளி உலகுக்கு சொல்வாள் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
உரத்து சொன்னால் சனித்மா. அவளது கையில் இருக்கும் மைக்கை ஓஃப் செய்யுங்கள் என்று அதிபர் கூறும் வரை. அது மட்டுமா இது இப்போது எட்டுதிக்கும் காட்டுத்தீயை விட அசுர வேகத்தில் பரவி இருக்கிறது.
இனியாவது பாடசாலைகளில் இடம்பெறும் ஊழல், மோசடி என்பவற்றுக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாடசாலை கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த முனையும் எவரையும் விட்டு வைக்க கூடாது.
அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இல்லையேல் சனித்மாவின் இந்த முயற்சி பிரயோசனமற்றதாக மாறி விடும்.
எது எப்படியோ அநீதி ஆட்சி செய்யும் உலகில்,
நீதிக்காக தனித்து எழுந்து நின்ற சானித்மாசினாலியும் இந்த நாட்டிற்கு ஒரு சொத்து அவ்வளவு தான்.
ஹெட்ஸ் ஒஃப் சனித்மா. ❤️🫡
Copy
எழுத்தும் தேடலும் - எம்.வை.எம்.சியாம்
14/11/2025
#தேசிய_கல்வியியற்_கல்லூரிகளுக்கு
#புதிய_பாடநெறிகள்
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு க.பொ.த (உ/த) பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்காக 2025.11.07 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி பத்திரிகையில் இம்முறை இரண்டு புதிய பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
1. பாடநெறி இலக்கம் : 50
#இஸ்லாம்_சிங்கள_மொழி_மூலம்
இந்த பாட நெறிக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை தகைமைகள்.
சிங்கள மொழி மூலம் உயர்தரம் கற்று இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம் மற்றும் அரபு போன்ற பாடங்களில் ஒன்றுடன் மூன்று பாடங்களில் சித்தி அமைந்திருப்பது டன்
க.பொ.த.(ச/த) பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் சாதாரண சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தி இதில் குறைத்தது மூன்று திறமைச் சித்தி இருத்தல் வேண்டும்
2. பாடநெறி இலக்கம்: 52
#மாணவர்_ஆலோசனை_மற்றும்_வழிகாட்டுதல்.
அடிப்படை தகைமைகள்.
க.பொ.த(உ/த) பரீட்சையில் எவையேனும் மூன்று பாடங்களில் சித்தி
க.பொ.த.(ச/த) பரீட்சையில் கணிதப் பாடத்தில் திறமைச் சித்தியுடன் ஆறு பாடங்களில் சித்தி இதில் குறைத்தது மூன்று திறமைச் சித்தி இருத்தல் வேண்டும்.
வர்த்தமானி அறிவித்தல்களை முறையாக வாசித்து தகைமை உள்ளவர்கள் 2025.11.28 ஆம் திகதிக்கு முன் நிகழ் நிலை முறை (Online System) மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
இணையத்தள முகவரி
ncoe.moe.gov.lk
13/11/2025
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம்
-----------------------------------------------------------------------
தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரிய பயிலுநர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
கற்பித்தலில் தேசிய டிப்ளோமா எனும் இப்பாடநெறியானது சேவை முன் பயிற்சிப் பாடநெறியாகும். இப்பாடநெறியைப் பூர்த்தி செய்பவர்கள் அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் பெறுவர்.
பாடநெறிக் காலம்
---------------------------------
இப்பாடநெறி மூன்று ஆண்டுகளாகும். தேசிய கல்வியியற் கல்லூரியில் இரண்டு வருடங்கள் வதிவிடக் கற்கை. அதன் பின் பாடசாலையொன்றுக்கு இணைப்புச் செய்யப்பட்டு அங்கு ஒரு வருட காலம் கட்டுறுப் பயில்வு.
நிபந்தனைகள்
------------------------
2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒரே தடவையில் பிரதான மூன்று பாடங்களிலும் சித்தியடைந்திருத்தல் வேண்டும். (Z புள்ளி – மைனஸ் ஆக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.)
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி, கணிதம் உள்ளிட்ட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அவற்றில் ஏதேனும் மூன்று பாடங்களில் திறமைச் சித்தி இருக்க வேண்டும்.
2025.01.01 அன்று 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும். (சமய பாடநெறிக்காக விண்ணப்பிக்கும் மதகுருமார் ஆயின் 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்)
விவாகமாகாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
-------------------------------------------
விண்ணப்பங்கள் நிகழ்நிலை முறை (Online System) மூலம் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
லிங்க்: https://ncoe.moe.gov.lk/NCOE
ஒருவர் அதிகபட்சமாக மூன்று பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப முடிவுத் திகதி நவம்பர் 28 ஆகும்.
ஆட்சேர்ப்பு முறை
---------------------------------
மொத்த வெற்றிடங்களில் 50% தேசிய அடிப்படையிலும் மீதமுள்ள 50% மாவட்ட அடிப்படையிலுமாக ஆட்சேர்ப்பு இடம்பெறும்.
விண்ணப்பதாரிகள் பெற்றுள்ள Z புள்ளிகளின் அடிப்படையில் அவர்களுக்கான வாய்ப்புகள் நிர்ணயிக்கப்படும்.
தெரிவு செய்யப்படும் முறை
----------------------------------------------------
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் முதலாவது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். அதன் போது நடைமுறைத் தேர்வு இடம்பெறும். அதில் தகைமைகள் பரீட்சிக்கப்படும். அத்தோடு குறித்த விண்ணப்பதாரி ஆசிரியர் தொழிலுக்குள் நுழையத் தேவையான உடல் மற்றும் மன ஆற்றல்களைக் கொண்டுள்ளாரா என்பது குறித்தும் பரிசோதிக்கப்படும்.
அதில் சித்தியடைபவர்கள் இரண்டாவது நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர். அதன் போது அவர்களது உடல் மற்றும் மன ஆற்றல்கள் தொடர்பான பரிசோதனை முடிவுகள் இரண்டாவது தடவை பரீட்சிக்கப்பட்டு உறுதி செய்யப்படும்.
இரண்டு நேர்முகப் பரீட்சைகளிலும் சித்தியடையும் விண்ணப்பதாரர்கள் கல்வியியற் கல்லூரியில் பதிவு செய்யத் தேர்ந்தெடுக்கப்படுவர். எனினும் பதிவு செய்வதற்கு முன்பாக அவர்கள் தமது உடல், உள ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக வைத்திய பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
பாடநெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள்
--------------------------------------------------
உதாரணம் – 01
ஆரம்பப் பிரிவு பாடநெறிக்கு விண்ணப்பிப்பதாயின்,
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழ்மொழியில் சித்தியும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தியும் ஆங்கிலத்தில் சாதாரண சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழ்மொழி பாடம் எடுக்காதவர்களாயின், க.பொ.த. சாதாரண தரத்தில் தமிழில் அதிதிறமைச் சித்தியும் கணிதத்தில் திறமைச் சித்தியும் ஆங்கிலத்தில் சாதாரண சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.
ஆரம்பக் கல்வி பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் கல்வியியல் கல்லூரிகளில் ஏதேனுமொன்றில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
தர்காநகர் தே.க.க.
அட்டாளைச்சேனை தே.க.க.
மட்டக்களப்பு தே.க.க.
யாழ்ப்பாணம் தே.க.க.
ஆரம்பப் பிரிவு பாடநெறிக்கு தேசிய மட்டத்தில் 96 பேரும் மாவட்ட மட்டங்களில் 96 பேரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
உதாரணம் – 02
தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநெறிக்கு விண்ணப்பிப்பதாயின்,
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தமிழ்மொழி பாடத்தில் திறமைச் சித்தியும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தமிழ்மொழியில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநெறிக்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் கல்வியியல் கல்லூரிகளில் ஏதேனுமொன்றில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
தர்காநகர் தே.க.க.
ஶ்ரீபாத தே.க.க.
மட்டக்களப்பு தே.க.க.
பேராதெனிய தே.க.க.
தமிழ்மொழியும் இலக்கியமும் பாடநெறிக்கு தேசிய மட்டத்தில் 23 பேரும் மாவட்ட மட்டங்களில் 22 பேரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
உதாரணம் – 03
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பப் பாடத்திற்கு இம்முறை ஆங்கில மொழி மூலம் மட்டுமே ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதாயின்,
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் த.தொ.தொ. பாடத்தில் திறமைச் சித்தியும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலத்தில் திறமைச் சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் த.தொ.தொ. பாடத்தில் சாதாரண சித்தியும் க.பொ.த. சாதாரண தரத்தில் த.தொ.தொ. பாடத்தில் திறமைச் சித்தியும் ஆங்கிலத்தில் சாதாரண சித்தியும் பெற்றிருக்க வேண்டும்.
தகவல் தொடர்பாடல் தொழினுட்பப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் கல்வியியல் கல்லூரிகளில் ஏதேனுமொன்றில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
தர்காநகர் தே.க.க.
றுவன்புர தே.க.க.
யாழ்ப்பாணம் தே.க.க.
பஸ்துன்ரட தே.க.க.
மஹரகம தே.க.க.
தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் பாடநெறிக்கு தேசிய மட்டத்தில் 65 பேரும் மாவட்ட மட்டங்களில் 65 பேரும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
மேலதிக தகவல்கள் சில:
தமிழ் மொழிமூல பாடங்கள் இடம்பெறும் கல்லூரிகள்
-----------------------------------------------------------------------
தர்காநகர் தே.க.கல்லூரி
மட்டக்களப்பு தே.க.கல்லூரி
ஶ்ரீபாத தே.க.கல்லூரி
பேராதெனிய தே.க.கல்லூரி
யாழ்ப்பாணம் தே.க.கல்லூரி
அட்டாளைச்சேனை தே.க.கல்லூரி
மகாவலி தே.க.கல்லூரி
வவுனியா தே.க.கல்லூரி
தர்காநகர் தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள்
-----------------------------------------------------------------
ஆரம்பக் கல்வி
சமூக விஞ்ஞானம்
தமிழ்மொழியும் இலக்கியமும்
உணவு நுகர்வுத் தொழினுட்பவியல்
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பம் (ஆங்கில மொழிமூலம்)
அட்டாளைச்சேனை தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள்
-----------------------------------------------------------
ஆரம்பக் கல்வி
விஞ்ஞானம் (ஆங்கில மொழிமூலம்)
கணிதம் (ஆங்கில மொழிமூலம்)
இஸ்லாம்
விசேட தேவைக் கல்வி
முயற்சியாண்மையும் நிதியியல் அறிவும்
மட்டக்களப்பு தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள்
---------------------------------------------------------------------
ஆரம்பக் கல்வி
விஞ்ஞானம் (ஆங்கில மொழிமூலம்)
கணிதம்
சமூக விஞ்ஞானம்
தமிழ்மொழியும் இலக்கியமும்
சித்திரம்
நாடகமும் அரங்கியலும்
உடற்கல்வி
வடிவமைப்புக் கலைகள் உற்பத்தித் தொழினுட்பவியல்
வடிவமைப்பும் பொறியியல் தொழினுட்பவியலும்
யாழ்ப்பாணம் தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள்
-----------------------------------------------------------------------
ஆரம்பக் கல்வி
விஞ்ஞானம் (ஆங்கில மொழிமூலம்)
நடனம் (பரதம்)
சங்கீதம் (கர்நாடகம்)
உடற்கல்வி
விசேட தேவைக் கல்வி
மாணவர் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்
வவுனியா தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள்
----------------------------------------------------------------
விஞ்ஞானம் (சிங்கள மொழிமூலம்)
கணிதம் (சிங்கள மொழிமூலம்)
இந்து சமயம்
கத்தோலிக்க, கிறிஸ்தவ சமயம்
உடற்கல்வி (சிங்கள மொழிமூலம்)
உணவு நுகர்வுத் தொழினுட்பவியல் (சிங்கள மொழிமூலம்)
விவசாயத் தொழினுட்பவியல் (சிங்கள மொழிமூலம்)
இரண்டாம் மொழி தமிழ்
ஶ்ரீபாத தே.க.கல்லூரியில் உள்ள பாடநெறிகள்
-------------------------------------------------------------
ஆரம்பக் கல்வி (சிங்களம்)
விஞ்ஞானம்
கணிதம் (ஆங்கில மொழிமூலம்)
சமூக விஞ்ஞானம் (சிங்கள மொழிமூலம்)
தமிழ்மொழியும் இலக்கியமும்
சித்திரம்
நடனம் (பரதம்)
சங்கீதம் (கர்நாடகம்)
குறிப்புகள்:
தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி பெண் விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமானது.
ஶ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் 75% இந்திய வம்சாவளி தமிழ் விண்ணப்பதாரர்களும் 25% சிங்கள இன விண்ணப்பதாரர்களும் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவர்.
தொகுப்பு
எம்.யூ.எம். ஸபீர் (SLTES)
விரிவுரையாளர்,
தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி
மேலதிக தகவல்களுக்கு (07.11.2025) வெளியான வர்த்தமானப் பத்திரிகையைப் பார்வையிடவும்.