BT/BW/Mahilavaddawan Maha Vidyalayam

BT/BW/Mahilavaddawan Maha Vidyalayam Official page of BT/BW/Mahilavaddawan Maha Vidyalayam.

🕊️ ஆழ்ந்த இரங்கல் 🕊️எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கேசவமூர்த்தி ஆசிரியர் அவர்களின் அன்புத் தாயார் இறைபதம் அடைந்த செ...
24/09/2026

🕊️ ஆழ்ந்த இரங்கல் 🕊️

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கேசவமூர்த்தி ஆசிரியர் அவர்களின் அன்புத் தாயார் இறைபதம் அடைந்த செய்தி அறிந்து மிகவும் கவலையடைகிறோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் ஆசிரியர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம். 🙏🕊️

🤲 ஆழ்ந்த இரங்கல்.

🌹 புதிய அதிபருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌹14.09.2026 அன்று எமது மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு....
15/09/2026

🌹 புதிய அதிபருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🌹

14.09.2026 அன்று எமது மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திரு. நாகலிங்கம் இளங்கோ sir அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அனுபவமும் ஆற்றலும் நிறைந்த சிறந்த ஆளுமையான தங்களின் தலைமையின் கீழ், எமது பாடசாலை மேலும் பல சாதனைகளைப் படைத்து, பெருமை சேர்க்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

புதிய பொறுப்பில் தங்களது பணி சிறப்பாக அமையவும், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்த வழிகாட்டியாகத் திகழவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 💐

இன்றைய தினம் மாணவர்கள் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் புதிய அதிபரை வாழ்த்தி வரவேற்ற அழகிய தருணங்கள்... ❤️🎓

புதிய தலைமுறை • புதிய பயணம் • புதிய சாதனைகள் ✨

வாழ்த்துக்கள் Sir! 💐






கிழக்கு மாகாண மட்டப் போட்டியில் எமது பாடசாலை மாணவி P. வினோதா,  நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 3ஆம் இடத்தையும், தட்டெறி...
14/09/2026

கிழக்கு மாகாண மட்டப் போட்டியில் எமது பாடசாலை மாணவி P. வினோதா, நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 3ஆம் இடத்தையும், தட்டெறிதல் போட்டியில் 4ஆம் இடத்தையும் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். 🎉👏

மேலும், மாகாண மட்டப் போட்டியில் குண்டு எறிதலில் 2ஆம் இடமும் 🥈, ஈட்டி எறிதலில் 3ஆம் இடமும் 🥉 பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

மகிழவட்டவான் மகா வித்தியாலயத்திற்கு கிடைத்த ஆளுமைமிகு தலைமைத்துவம் இடம் மாறுகிறது...சீர்மிகு தலைமைத்துவம்மாணவர்களது உயர்...
13/09/2026

மகிழவட்டவான் மகா வித்தியாலயத்திற்கு கிடைத்த ஆளுமைமிகு தலைமைத்துவம் இடம் மாறுகிறது...

சீர்மிகு தலைமைத்துவம்

மாணவர்களது உயர்விற்கே முதலிடம்

ஒழுக்கமே உயிர்மூச்சு

பாராபட்சம் ஓரம் கட்டு

சுத்தமான கறைபடியா கைகள்

துணிவான முன்னெடுப்பு

தூரநோக்கு பார்வை

இலட்சிய சிந்தனை

தன்னிகரில்லா ஆளுமை

தொடர்ச்சியான சாதனைகள்

இவை வெறும் புகழ் மொழிகளல்ல
உண்மையின் நிதர்சனங்கள்

எமது வலயத்தின் சிறந்த கல்வியலாளன்
மயில்வாகனம் கருணதாசன்
அதிபர் (SLPS 11)
தனது சிறந்த பணியின் வெற்றித்தடங்களோடு மகிழவட்டவானில் இருந்து இடம் மாறிச்செல்கிறார்.
பாடசாலை சமூகமாய் பெற்றோராய் ஆசிரியனாய் மனமார்ந்த நன்றியையும் செல்லும் இடத்தில் சிறந்த பணிசெய்ய வாழ்த்தையும் கூறி வழி அனுப்புகிறோம். நெருடும் மனதுடன்.

🏆 பெருமைக்குரிய சாதனை! 🥈🎯 P. Vinotha – 2nd Place🏃‍♀️ Shot Put – U20 Girls📍 Eastern Province LevelBT/BW/Mahilavaddawan Ma...
09/09/2026

🏆 பெருமைக்குரிய சாதனை! 🥈

🎯 P. Vinotha – 2nd Place
🏃‍♀️ Shot Put – U20 Girls
📍 Eastern Province Level

BT/BW/Mahilavaddawan Maha Vidyalayam மாணவி P. Vinotha, குண்டெறிதல் (Shot Put) போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார். 🎉👏

இந்த சிறப்பான சாதனைக்காக மாணவியை மனமாரப் பாராட்டுவதுடன், அவரை வழிப்படுத்தி பயிற்றுவித்த Sir Faslan அவர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 👏🏆

🌟 Congratulations Vinotha!
உங்கள் எதிர்கால சாதனைகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்! ❤️💪

🥇 பெருமைக்குரிய சாதனை! 🔬🎉வலய மட்ட விஞ்ஞானக் கண்காட்சி போட்டியில் எமது பாடசாலை மாணவன் இ. கிஷான் அவர்கள் முதலாம் இடத்தை பெ...
11/07/2026

🥇 பெருமைக்குரிய சாதனை! 🔬🎉

வலய மட்ட விஞ்ஞானக் கண்காட்சி போட்டியில் எமது பாடசாலை மாணவன் இ. கிஷான் அவர்கள் முதலாம் இடத்தை பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். 🏆👏

இச்சிறப்பான வெற்றிக்காக மாணவரை அர்ப்பணிப்புடன் வழிப்படுத்தி, ஊக்குவித்து பயிற்றுவித்த ஆசிரியர்களான,

🌸 திருமதி லோ. நிரோசன்
🌸 திருமதி ந. ராமராஜா

ஆகியோருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்.

மாணவனின் விடாமுயற்சியும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் இணைந்த இந்த வெற்றி, அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சிறப்பான சாதனையாகும்.

மாணவன் இ. கிஷானுக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேலும் பல வெற்றிகள் கிட்ட வாழ்த்துகிறோம். 🌟🎊

#விஞ்ஞான_கண்காட்சி #முதல்இடம்

11/07/2026

🤖 எமது மாணவன் இ. கிஷான் – புதுமையின் பாதையில்! 🌟

இளம் வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மையுடனும், தொழில்நுட்பத்தில் ஆர்வத்துடனும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அவரது முயற்சி பாராட்டத்தக்கது.

மேலும் பல சாதனைகளைப் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்! 👏💙

🤖 வலய மட்ட ரோபோட்டிக்ஸ் போட்டியில் எமது மாணவர்கள்! 🎉எமது பாடசாலை மாணவர்கள் வலய மட்ட ரோபோட்டிக்ஸ் போட்டியில் ஆர்வத்துடனும...
11/07/2026

🤖 வலய மட்ட ரோபோட்டிக்ஸ் போட்டியில் எமது மாணவர்கள்! 🎉

எமது பாடசாலை மாணவர்கள் வலய மட்ட ரோபோட்டிக்ஸ் போட்டியில் ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் பங்கேற்றுள்ளனர்.

அவர்களின் முயற்சி, புதுமையான சிந்தனை மற்றும் தொழில்நுட்ப திறன்கள் மேலும் வளர வாழ்த்துகிறோம். 🏆

வெற்றி பெறுவதைக் காட்டிலும், கற்றலும் அனுபவமும் மிகப் பெரிய சாதனையாகும்.

எமது மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 💙👏

Address

Ayithiyamalai
Batticaloa

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when BT/BW/Mahilavaddawan Maha Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category