பழைய மாணவர் சங்கம் - மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம்

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • பழைய மாணவர் சங்கம் - மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம்

பழைய மாணவர் சங்கம் - மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் இது எமது பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கம் ❤️

கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தர பாடத்திட்டம் தெரிவு மற்றும் கணித விஞ்ஞான பிரிவில் கல்வி க...
02/03/2026

கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தர பாடத்திட்டம் தெரிவு மற்றும் கணித விஞ்ஞான பிரிவில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களிற்கான எதிர்கால செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது இதற்கு வளவாளர்களாக கலந்து கொண்ட பழைய மாணவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள் ❤️

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💚
16/02/2026

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் 💚

எமது பாடசாலையில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் எமது பழைய மாணவர் சங்க...
23/01/2026

எமது பாடசாலையில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் எமது பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பிரபல பாடசாலை ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட ஆறு கட்டாய பாடங்களுக்கான வினாத்தாள்கள் மற்றும் புள்ளி திட்டங்கள் பாடசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டன. இதனை ஏற்பாடு செய்துதந்த விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அவர்களுக்கும்
அனுசரணை வழங்கிய மனித நேயம் நம்பிக்கை நிதியம். அவர்களுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்ந்த மனமார்ந்த நன்றிகள்

மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களின் எதிர்கால திட்டமிடல்கள் மற்றும் அவர்களின் ஆளுமையை வளர்க்கும் வித...
23/01/2026

மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களின் எதிர்கால திட்டமிடல்கள் மற்றும் அவர்களின் ஆளுமையை வளர்க்கும் விதமாக பாடசாலை அதிபரும் பழையமானவர் சங்கத் தலைவருமாகிய திரு.க.அரசரெத்தினம் அவர்களின் தலைமையில் பழைய மாணவர் சங்கத்தின் ஒத்துழைப்பிலும் நடைபெற்றிருந்த "அக விழிப்புனர்வு மூலம் சுயகற்றலை மேம்படுத்தல் செயற்பாடுகள் 02.01.2026 -03.01.2026 ஆகிய தினங்களில் நடைபெற்றன. இச் செயற்பாட்டிற்கான முழு அனுசரணை வழங்கிய அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த தற்போது கனடாவில் வசிக்கும் ஆசிரியை திருமதி ச.கவிதா அவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதோடு . இக் கருத்தரங்கை ஒழுங்கமைத்த பழைய மாணவர் ஆசிரியர் திரு. அ.தனுராஜ் (அழகு தனு) அவர்களுக்கும் வளவாளர்களாகச் செயற்பட்ட ஆசிரிய ஆலோசகர் திரு.த.விஸ்வஜிந்தன் , ஆசிரியர் திரு,அ.தனுராஜ் (அழகு தனு ) மற்றும் திரு.ச.ஜெய்சங்கர் ஆகியோருக்கும் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை கல்விச் சமூகம் சார்பான நன்றிகள்

எமது பாடசாலையின் ஆங்கில ஆசிரியை திருமதி.துசாரா ரஜனிகாந்த் நேற்று இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிர...
16/01/2026

எமது பாடசாலையின் ஆங்கில ஆசிரியை திருமதி.துசாரா ரஜனிகாந்த் நேற்று இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.😢🙏

தேசிய கல்வியியல் கல்லூரி விண்ணப்பம் பூர்த்தி செய்வது தொடர்பான விசேட கருத்தரங்கு - 2025
19/11/2025

தேசிய கல்வியியல் கல்லூரி விண்ணப்பம் பூர்த்தி செய்வது தொடர்பான விசேட கருத்தரங்கு - 2025

இன்றைய தினம் க.பொ. த.(உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ செல்வங்கள்  அனைவருக்கும்  எமது பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் மன...
09/11/2025

இன்றைய தினம் க.பொ. த.(உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ செல்வங்கள் அனைவருக்கும் எமது பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️🙏

08/11/2025
🎓💐 எங்கள் அன்பு மா.ஜீவரெத்தினம் ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 💐🎓இன்று எங்கள் கல்விக் குட...
06/11/2025

🎓💐 எங்கள் அன்பு மா.ஜீவரெத்தினம் ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 💐🎓

இன்று எங்கள் கல்விக் குடும்பத்திற்கு ஒரு மறக்கமுடியாத நாள்…
37 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, எண்ணற்ற மாணவர்களின் இதயங்களில் ஒளி ஏற்றிய
மா.ஜீவரெத்தினம் ஆசிரியர் அவர்கள் இன்று தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

அவரின் கல்விச் சேவை என்பது வெறும் ஒரு வேலை அல்ல — அது ஒரு பணி, ஒரு வழிகாட்டல், ஒரு உயிரூட்டும் ஒளி.
மாணவர்களின் வளர்ச்சிக்காக தினமும் உழைத்து, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு தடம் பதித்தவர்.

📘 அவரது வழிகாட்டுதல், ஒழுக்கம், அன்பு, மற்றும் உறுதியான செயல்பாடு எங்களுக்கெல்லாம் ஒரு சிறந்த உதாரணம்.
அவரைபோல ஒரு ஆசிரியரைப் பெறுவது என்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியம், அவர் வழிகாட்டிய பாதை எங்கள் எதிர்காலத்திற்கான ஒளிவிளக்காக இருக்கும்.

அவரின் ஓய்வு என்பது ஒரு நிறைவு அல்ல — புதிய பயணத்தின் தொடக்கம். 🌅
அவருக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மற்றும் மனநிறைவு பெற்ற வாழ்க்கையை இறைவன் அருளட்டும். 🙏

கலைமகளில் தொடங்கிய உம் சேவை கலைமகளிலே இனிதே முடிவுற்றது❣️

மிகுந்த மரியாதையுடன்,
எங்கள் மாணவர்கள், பழைய மாணவர்கள், மற்றும் சக ஆசிரியர்கள் சார்பாக
💖 நன்றி, மா.ஜீவரெத்தினம் ஆசிரியரே 💖

எமது பாடசாலையின் உப அதிபரும் சிரேஷ்ட ஆசிரியரும் ஆகிய திரு மாமாங்கம் ஜீவரெத்தினம் sir அவர்கள் நேற்றைய தினம் தனது 37 வருட ...
29/10/2025

எமது பாடசாலையின் உப அதிபரும் சிரேஷ்ட ஆசிரியரும் ஆகிய திரு மாமாங்கம் ஜீவரெத்தினம் sir அவர்கள் நேற்றைய தினம் தனது 37 வருட ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர் ஆசிரியராக பல்வேறு பாடசாலைகளிலும் மிகவும் நேர்த்தியான பணியைப் புரிந்து எமது பாடசாலையிலும் சேவையை ஆற்றிருக்கின்றார். அந்த வகையில் இன்றைய தினம் அவருடைய பிறந்தநாள் எமது பாடசாலையில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Address

Ampilanthurai , Kokkaddicholai
Batticaloa
30162

Alerts

Be the first to know and let us send you an email when பழைய மாணவர் சங்கம் - மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category