BD/ Sir Razik Fareed College - Bandarawela

BD/ Sir Razik Fareed College - Bandarawela

Share

Sir Razik Fareed Maha Vidyalaya is a reputed Muslim school in the Bandarawela Zone which derives strength&power to our community through education.

21/06/2026
20/06/2026

The Fareedians Cricket Fiesta is now streaming live.

Photos from BD/ Sir Razik Fareed College - Bandarawela's post 12/06/2026

🌹 புதிய அதிபர் வரவேற்பும் முன்னாள் அதிபருக்கான பிரியாவிடை நிகழ்வும் 🌹

அல்ஹம்துலில்லாஹ்!

எமது பாடசாலையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திரு. J.A.M. நஸீர் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்கும் நிகழ்வும், மிகக் குறுகிய காலம் அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் அதிபராகப் பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் முன்னாள் அதிபர் திரு.S
M. நாஸர் அவர்களுக்கு நன்றியுடனான பிரியாவிடை நிகழ்வும் நேற்று பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு புதிய அதிபருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, முன்னாள் அதிபரின் சேவைகளைப் பாராட்டி நன்றியையும் தெரிவித்தனர்.

அல்லாஹ் (ஸுப்ஹானஹு வ தஆலா) புதிய அதிபருக்கு ஞானம், பொறுமை மற்றும் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி, எமது பாடசாலையை மேலும் முன்னேற்ற அருள் புரிவானாக. மேலும் இடமாற்றம் பெற்றுச் செல்லும் முன்னாள் அதிபரின் எதிர்காலப் பணிகளிலும் வெற்றியும் பரக்கத்தும் வழங்குவானாக.
ஆமீன் 🤲

"நன்றியுணர்வுடன் பிரியாவிடை அளித்து, மகிழ்ச்சியுடன் வரவேற்போம்."

🤝 Best Wishes for the New Principal
🌹 Heartfelt Thanks and Farewell to the Former Principal

– பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள்

SRFMV MEDIA UNIT

Photos from BD/ Sir Razik Fareed College - Bandarawela's post 10/06/2026

بسم الله الرحمن الرحيم

🌹 புதிய அதிபரை வரவேற்கிறோம் 🌹

எமது பாடசாலையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜனாப் J.A.M.NAZEER அவர்களை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கும் நிகழ்வு இன்று பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு முன்னாள் அதிபரின் தலைமையில் உலமாக்கள்,ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் செயற்குழு (SDEC), பழைய மாணவர் சங்கம் (PPA), பண்டாரவளை ஜும்மா பள்ளிவாசல், YMMA சங்கம் அயல் பாடசாலை அதிபர்கள், நலன் விரும்பிகள்,கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய அதிபருக்கு தங்களது வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

அவரது சிறந்த தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் எமது பாடசாலை மேலும் பல கல்வி மற்றும் ஒழுக்கச் சாதனைகளைப் பெற்று உயர்வடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

புதிய பொறுப்பிற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

With Best Wishes From
STAFF, SDEC, PPA & SCHOOL SOCIETY

MEDIA UNIT
-SRFMV-

Photos from BD/ Sir Razik Fareed College - Bandarawela's post 05/06/2026

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

🌿 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சிரமதானப் பணியில் எமது மாணவர்களின் பங்களிப்பு 🌿

அல்ஹம்துலில்லாஹ்!

பண்டாரவளை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ், உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பண்டாரவளை நகரை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்ட சிரமதானப் பணியில் எமது ப/சேர் ராசிக் பரீட் மகா வித்தியாலய மாணவர்கள் ஆர்வத்துடனும் பொறுப்புணர்வுடனும் பங்கேற்றனர்.

சுற்றாடலைப் பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் சமூகப் பொறுப்பாகும். தூய்மையை நேசிப்பதும், சூழலைப் பாதுகாப்பதும் இஸ்லாம் வலியுறுத்தும் உயரிய பண்புகளில் ஒன்றாகும்.

இந்நிகழ்வில் மாணவர்களை வழிநடத்தி, அவர்களிடையே சமூகப் பொறுப்புணர்வையும் சுற்றாடல் விழிப்புணர்வையும் வளர்க்க அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அதிபர் மற்றும் பாடசாலை சுற்றாடல் குழு உறுப்பினர்களான பிரதி அதிபர் (Cassin sir) , ஆசிரியர் M.N.M. நதீர் அவர்களுக்கும், நிகழ்வில் ஒழுக்கத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்நிகழ்விற்கு தன்னுடைய பிள்ளைகள் பங்குபற்த்துவதற்கு வழிகாட்டி அனுமதி வழங்கிய பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

🤲 அல்லாஹ் (ஸுப்ஹானஹு வ தஆலா) அவர்களின் இந்த நல்ல முயற்சியை ஏற்றுக்கொண்டு, அனைவருக்கும் நற் கூலியையும் பரக்கத்தையும் வழங்குவானாக. ஆமீன்.

நன்றியுடன்,
அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலைச் சமூகம்
ப/சேர் ராசிக் பரீட் மகா வித்தியாலயம், பண்டாரவளை 🌱🤍

Photos from BD/ Sir Razik Fareed College - Bandarawela's post 05/06/2026

🌿 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு 🌿

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் இன்று எனது பாடசாலையில் நடைபெற்ற சிரமதான நிகழ்வில் பங்கேற்று ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
جزاك الله خيراً

இந்த நற்பணியில் பங்குகொண்ட பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் எமது பாடசாலைச் சூழலை மேலும் அழகுபடுத்தவும் சுத்தமாக்கவும் பெரிதும் உதவியுள்ளது.

“நன்மையிலும் தக்வாவிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவுங்கள்”
(அல்-மாயிதா : 2)

அல்லாஹ் (ஸுப்ஹானஹு வதஆலா) உங்கள் அனைவரின் இந்த நற்செயலை ஏற்றுக்கொண்டு, அதற்கான சிறந்த நற்கூலியை வழங்குவானாக.🤲 ஆமீன்.

🤝 உங்கள் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் எமக்கு பெரும் பலமாகும்.

ஜஸாகுமுல்லாஹு கைரன்!

📍 ப/சேர் ராசிக் பரீட் மகா வித்தியாலயம், பண்டாரவளை
🌱 சுத்தமான சூழல் – சிறந்த எதிர்காலம் 🌱

02/06/2026

🏆 BANDARAWELA ZONAL SCHOOL GAMES 2026 🏆
UNDER 20 BOYS – 1st RUNNERS-UP

அல்ஹம்துலில்லாஹ்!

பண்டாரவளை வலய மட்ட விளையாட்டு போட்டி 2026 இல், Under 20 Boys பிரிவில் இரண்டாம் இடம் பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை மனமாரப் பாராட்டுகிறோம்.

இந்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடனும் ஒழுக்கத்துடனும் உழைத்த அனைத்து வீரர்களுக்கும், வழிகாட்டிய பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
جزاك الله خيراً

அல்லாஹ்வின் அருளாலும், கடின உழைப்பாலும் கிடைத்த இந்த சாதனை எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளை அடைய உந்துசக்தியாக அமைய பிரார்த்திக்கிறோம்.

بارك الله فيكم

அல்லாஹ் உங்களின் அறிவையும் திறமையையும் மேலும் வளரச்செய்து, கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த முன்னேற்றத்தை வழங்குவானாக. ஆமீன்.

Best Wishes From
Principal, Staff, SDEC, PPA & School Society
Sir Razik Fareed M.V. – Bandarawela 🌹🏆⚽

Want your school to be the top-listed School/college in Bandarawela?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Bandarawela
90100

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:30