12/09/2026
தேசிய மட்டத்தில் மணிமகுடம் சூடிய கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரி!
தேசிய மட்டத் தமிழ் மொழித் தினப் போட்டிகளில், பிரிவு 4 (கட்டுரை வரைதல்) பிரிவில் மிகச் சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தி தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று, நமது கல்லூரியின் கீர்த்தியை உச்சிக்குக் கொண்டு சென்றுள்ள மாணவி செல்வி S. லோஷினி அவர்களுக்கு எமது உள்ளம் கனிந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
உங்கள் சிந்தனையின் ஆழமும், தமிழ் மொழிப் புத்துணர்வும், விடாமுயற்சியும் இந்தச் சாதனையை சாத்தியமாக்கியுள்ளது. எதிர்காலத்தில் நீங்கள் பல சாதனைகளைப் படைத்து நாட்டின் தூண்களாக மிளிர எமது நல்வாழ்த்துகள்.
இம்மாணவியை அயராத உழைப்பாலும் நேர்த்தியான வழிகாட்டலாலும் செதுக்கி, தேசிய மட்ட வெற்றியாளராக உருவாக்கிய மதிப்பிற்குரிய பயிற்றுவித்த ஆசிரியர் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறோம்.
ஒரு ஆசிரியரின் உண்மையான உழைப்புக்கான மகுடம் இதுவாகும்.
இத்தகைய ஆளுமைகளை உருவாக்கத் தேவையான நிர்வாகச் சூழலை வழங்கி, பாடசாலையைத் தொடர்ந்து வெற்றிக் பாதையில் அழைத்துச் செல்லும் எமது கல்லூரியின் அதிபர் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
மேலும், பலாங்கொடை கல்வி வலயத்திற்குப் பெருமை சேர்த்த இம்மாணவியின் வெற்றிக்குப் பின்னணியிலிருந்து ஊக்கமளித்த வலயப் பிரதி கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண உதவி கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டல்களும் பாராட்டுக்குரியவை.
இவர்களது ஆக்கபூர்வமான நிர்வாகப் பங்களிப்பு எமது வலயத்தின் கல்வி வளர்ச்சிக்குக் கிடைத்த பெரும் பலமாகும்.
சாதனை படைத்த மாணவி, அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர், பாடசாலை அதிபர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளாகிய உங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ் மொழித் தொண்டும் கல்விச் சேவையும் தொடர வாழ்த்துகிறோம்.