23/06/2023
*2025 ஆம் வருடத்திற்கான உயர்தர கணித, விஞ்ஞான துறைகளுக்கான திசை முகப்படுத்தல்*
எமது மாணவச் செல்வங்களின் எதிர்கால கல்வி அபிவிருத்தியை மேலும் மேம்படுத்தும் நோக்காக உயர்தர கணித, விஞ்ஞான துறையை அபிவிருத்தி செய்வதனை குறிக்கோளாகக் கொண்டு பதுளை மாநகரின் தாய் பாடசாலைகளான பது /சரஸ்வதி தேசியக் கல்லூரியும், பது /தமிழ் மகளிர் மகா வித்தியாலயமும் ஒன்றிணைந்து இச்செய்திட்டத்திற்கு வித்திடுகின்றனர்.
*இந்நிகழ்வு சரித்திரம் வாய்ந்ததாக அமையப்பெறும்*
திசைமுகபடுத்தல் நிகழ்வில் தாங்களும் தங்கள் பாடசாலையில் 2023ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் எழுதிய உயர்தர கணித, விஞ்ஞான பிரிவினை தேர்ந்தெடுக்கும் மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோருடன் வருகை தந்து நிகழ்வில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம்.
*அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள்*
*பது/ சரஸ்வதி தேசிய பாடசாலை மற்றும் பது/ தமிழ் மகளிர் மகா வித்யாலயம்*
22/06/2023