Saraswathy Central College - National School, Badulla

Saraswathy Central College - National School, Badulla ஆரம்பம்: 1934.10.17

பது/சரஸ்வதி தேசிய பாடசாலை விளையாட்டு துறையில் 892 பாடசாலைகளில்  மாகாணத்தில் 02ம் இடத்தை பெற்று வரலாற்று சாதனை..... பது/ச...
05/08/2026

பது/சரஸ்வதி தேசிய பாடசாலை விளையாட்டு துறையில் 892 பாடசாலைகளில் மாகாணத்தில் 02ம் இடத்தை பெற்று வரலாற்று சாதனை.....

பது/சரஸ்வதி தேசிய பாடசாலை ஊவா மாகாணத்தில் 892 பாடசாலைகளுக்கு இடையிலான கோட்ட, வலய மாகாணமட்ட விளையாட்டுப் போட்டிகளில் பல வெற்றிகளை பெற்று சாதனைகளை
நிலைநிறுத்தி பல போட்டிகளில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.

இன்று மாகாணமட்ட குழு விளையாட்டு போட்டிகளில் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் மாகாணத்தில் 892 பாடசாலைகளில் எமது சரஸ்வதி தேசிய பாடசாலை
02ம் இடத்தை பெற்று பதுளை வலயத்திற்கும், தமிழ் பாடசாலை சமூகங்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது.

எமது வெற்றிக்கு வலுசேர்த்த விளையாட்டுகள் 🏆

🏆 Carrom (கரம்)
🏆 Table Tennis (மேசைப்பந்து)
🏆 Badminton (பூப்பந்து)
🏆 Softball Cricket (மென்பந்து கிரிக்கெட்)
🏆 Hardball Cricket (கடினப்பந்து கிரிக்கெட்)
🏆 Elle (எல்லே)
🏆 Handball (கைப்பந்து)
🏆 Throw Ball (த்ரோபால்)
🏆 Basketball (கூடைப்பந்து)
🏆 Chess (சதுரங்கம்)
இந்த அனைத்து விளையாட்டுகளிலும் மாணவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் கிடைத்த வெற்றிகளே, 892 பாடசாலைகளுக்கு மத்தியில் ஊவா மாகாணத்தில் 02ஆம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைக்க உறுதுணையாக அமைந்தது.

இந்த மாபெரும் வெற்றிகளையும், சாதனைகளையும் பெற்றுத் தந்த மாணவச் செல்வங்களை வாழ்த்துகிறோம்.

இம்மானவச்ச செல்வங்களின் வெற்றிக்கு வலுவூட்டும் எமது பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள்,கல்விசாரா ஊழியர்கள் சகலருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த விளையாட்டு சாதனையாளர்களை தங்களுடைய 100 % வீத உழைப்பால் உருவாக்கி எமது பாடசாலைக்கும்,சமூகத்திற்கும் பெருமை சேர்த்த எமது பாடசாலையின் விளையாட்டு துறை ஆசிரியர்களான
M.Rizan ( prefect of games POG)
P.W.M.P.Poojitha pilipotha (MIC)
V.G.M.D.De silva (MIC)
M.Janushkanth (MIC)
M.Rinas. (SPORTS COACH)
S.Sivapudalvi.( TIC)
மற்றும் R.Kishopreveen (SPORTS COACH) ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் சகலரையும் வாழ்த்தி வணங்குகிறோம்.

நன்றி

01/08/2026
🏆 வரலாற்றுச் சாதனைக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 🏆2026 ஆம் ஆண்டு ஊவா மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில், 5000 மீற்ற...
01/08/2026

🏆 வரலாற்றுச் சாதனைக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 🏆

2026 ஆம் ஆண்டு ஊவா மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில், 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில், ப/சரஸ்வதி தேசிய பாடசாலை மாணவன் G. தனுஷன், 9 ஆண்டுகளாக நிலவி வந்த ஊவா மாகாணச் சாதனையை முறியடித்து, 16:05.1 நிமிடங்கள் என்ற புதிய ஊவா மாகாணச் சாதனையை படைத்து முதலாம் இடத்தை வென்று எமது பாடசாலைக்கும், பதுளை மாவட்டத்திற்கும், ஊவா மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த அரிய வெற்றியைப் பெற்ற மாணவன் G. தனுஷன் அவர்களுக்கு ப/சரஸ்வதி தேசிய பாடசாலை சமூகத்தின் சார்பில் இதயம் கனிந்த பாராட்டுகளையும் மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வெற்றிக்காக மாணவனை அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் பயிற்றுவித்து இந்த வரலாற்றுச் சாதனைக்கு வழிகாட்டிய பயிற்றுவிப்பாளர் திரு. தினீஷ விதானகே அவர்களுக்கும், எப்போதும் உறுதுணையாக இருந்து வழிகாட்டிய பாடசாலை அதிபர், பிரதியதிபர்கள், விளையாட்டுப் பொறுப்பாசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம் ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், மாணவனின் திறமையை மேம்படுத்த தேவையான உதவிகளை வழங்கிய திரு. பகி பாலச்சந்திரன் அவர்களுக்கும், எமது பாடசாலையின் விளையாட்டு துறைக்கு உதவி புரிகின்ற SJC 87 initiative நிறுவனத்திற்கும் பாடசாலை சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

"அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் ஒற்றுமை ஒன்றிணைந்தால் சாதனைகள் பிறக்கும். இன்றைய இந்த மாகாணச் சாதனை, நாளைய தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளுக்கான உறுதியான அடித்தளமாக அமையட்டும். மேலும் பல உயரங்களை எட்ட எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.🏅🇱🇰

எங்கள் பெருமை! 🇱🇰🥋2020 ஆம் ஆண்டு பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரியின் உயர்தர மாணவரான திரு. மேஷாக் அஜாக்ஸ் அவர்கள், KFL தெற்க...
19/07/2026

எங்கள் பெருமை! 🇱🇰🥋

2020 ஆம் ஆண்டு பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரியின் உயர்தர மாணவரான திரு. மேஷாக் அஜாக்ஸ் அவர்கள், KFL தெற்காசிய தொடர் (Taekwondo MMA) போட்டித் தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று, இலங்கைக்கும் பதுளை மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்த மகத்தான சாதனைக்காக பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி சார்பாக இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பல வெற்றிகளைப் பெற்று நாட்டிற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்! 🏆✨

50 th NATIONAL SPORTS FESTIVAL 2026 BADULLA DISTRICT CARROM CHAMPION 💪💪💪🔥🔥🔥🔥🔥🔥
18/07/2026

50 th NATIONAL SPORTS FESTIVAL 2026
BADULLA DISTRICT CARROM
CHAMPION 💪💪💪🔥🔥🔥🔥🔥🔥

CONGRATULATIONS SARASWATHIYANS 💯💯🔥🔥🔥🔥
14/07/2026

CONGRATULATIONS SARASWATHIYANS 💯💯🔥🔥🔥🔥

எமது பாடசாலையின் விளையாட்டுத்துறை இன்று வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து புதிய மைல்கற்களை எட்டியுள்ளது. இந்த வெற்றிப் பயணத்...
13/07/2026

எமது பாடசாலையின் விளையாட்டுத்துறை இன்று வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து புதிய மைல்கற்களை எட்டியுள்ளது. இந்த வெற்றிப் பயணத்தில் நலன்விரும்பிகளின் ஒத்துழைப்பும், பழைய மாணவர்களின் பேராதரவும் அளப்பரிய பங்காற்றி வருகின்றன
அந்த வகையில், இன்று எமது பாடசாலை கரப்பந்தாட்ட (Volleyball) அணிக்கான புதிய சீருடைகளை, சரஸ்வதி மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளருமான கௌரவ திரு. செனவிரத்ன மகேந்திர குமார் அவர்கள், தனது MK அமைப்பினூடாக வழங்கியுள்ளார்.

இந்த உயரிய உதவி, எமது மாணவர்களின் விளையாட்டுப் பயணத்திற்கு மேலும் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் வழங்கும் என்பதில் ஐயமில்லை.
இவரது உயர்ந்த மனப்பான்மையையும், கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்கான அர்ப்பணிப்பையும் எமது பாடசாலை சமூகத்தின் சார்பாக மனமாரப் பாராட்டி, உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவரது சேவை தொடர இறைவனைப் பிரார்த்தித்து, மேலும் பல நற்பணிகளை மேற்கொள்ள மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு மாணவனின் கனவை நனவாக்கும் ஒவ்வொரு கரமும், ஒரு பாடசாலையின் எதிர்காலத்தை உருவாக்குகிறது.
எமது இதயப்பூர்வமான நன்றிகளும் நல்வாழ்த்துகளும்♥️♥️♥️♥️

Address

Mahiyangana Road
Badulla

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Telephone

+94552223208

Alerts

Be the first to know and let us send you an email when Saraswathy Central College - National School, Badulla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Saraswathy Central College - National School, Badulla:

Shortcuts

Share

Category