A Grade Academy

A Grade Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A Grade Academy, Education, Badulla.

07/05/2025
எமது ஏ கிரேட் கல்வியாகத்தில் 2025 தரம் 11 மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்துவதற்கான பெற்றோர்கள் சந்திப்பு-06.04.2025...
06/04/2025

எமது ஏ கிரேட் கல்வியாகத்தில் 2025 தரம் 11 மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்துவதற்கான பெற்றோர்கள் சந்திப்பு-06.04.2025
மாதாந்த பரீட்சைபுள்ளி தொடர்பாக மாணவர்கள் மட்டும் பெற்றோர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
ஏற்பாடு செய்த கணித பாட பொறுப்பாசிரியர் திரு சந்திர மோகன் அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம். பிள்ளையின் கல்வி தொடர்பாக அக்கறை கொண்டு வருகை தந்த அனைத்து பெற்றோர்களுக்கும் நிர்வாகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்
நன்றி ஏ கிரேட் கல்வியகம்
பதுளை

05/04/2025

#பல்கலைக்கழக #அனுமதியில் #தமிழ் #மாணவர் #தொகை #படிப்படியாக #குறைவடைதல் #தொடர்பான #பகுப்பாய்வின் #முக்கியத்துவம்!
ந.சந்திரகுமார் SLPS

2018 ஆம் ஆண்டின் இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை யின் அடிப்படையில், இலங்கையின் சனத்தொகை இன ரீதியான சதவீதம்...
*சிங்களவர்கள் -74.9%
*தமிழர்கள் -15.3%
*முஸ்லிம்கள் -9.3%
*ஏனையோர் -0.5%

இலங்கையின் சனத்தொகைக்கு அமைய, தமிழ் மாணவர்கள், ஒவ்வொரு துறையிலும் 15.3% பல்கலைக் கழக அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

எனினும் 2022/23 ஆம் கல்வி ஆண்டில், பின்வரும் நான்கு துறைகளில் மட்டுமே, 15.3% க்கு அதிகமாக பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.
*Arts -17.5%
*Dental. -16.8%
*Applied Health Science -15.6%
*Indigenous Medicine -17.0%

ஆனால் பின்வரும் துறைகளில் தமிழ் மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதி குறைவாக உள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டும்.
*Medicine -12.1%
*Veterinary Medicine -14.5%
*Agriculture -12.4%
*Science. -10.5%
*Engineering -13.3%
*Law. -9.6%
*Commerce -10.2%
*Management -11.04%
*Fashion Design/ Transport Logestic
Management -8.4%
*Architecture/Quantity Surveying
-10.6%
*Computer Science/IT -13.4%
*Technology -9.6%

அண்மைக்காலமாக பல்கலைக் கழக அனுமதியில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைவதற்கான காரணங்களை பகுப்பாய்வு செய்து, எதிர்காலத்தில் தமிழ் மாணவர் களின் பல்கலைக் கழக அனுமதியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை, தமிழ் சமூகத்தின் கல்விமான்கள், கல்வித் துறை சார்ந்தவர்கள் (SLEAS, SLTES, SLPS,SLTAS, SLTS), பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் பணிப்பாளர்கள் போன்றவர்கள் ஆய்வினை மேற்கொண்டு முன்மொழிவை முன் வைக்க வேண்டும்.

மேலும் ஏனைய துறைகளின் கீழ் தமிழ் மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதி குறைவடைவதற்கான காரணங்களில் சில...
*பல்கலைக் கழகங்களினால் நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பிக்காமை,

*உளச்சார்புப் பரீட்சைக்கு விண்ணப்பித்த போதிலும் உளச்சார்புப் பரீட்சைக்கு தோற்றாமை,

*உளச்சார்புப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான பயிற்சியை போதியளவு வழங்காமை,

*ஆங்கில மொழி மூலம் உளச்சார்புப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு ஆங்கில மொழியில் தேர்ச்சி இல்லாமை

மேற்படி காரணங்களால் பின்வரும் துறைகளில் பல்கலைக் கழக அனுமதியில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.
*Fashion Design
*Transport Logestic Management
*Architecture
*Quality Surveying
*Computer Science
*IT

Address

Badulla

Telephone

+94740272882

Website

Alerts

Be the first to know and let us send you an email when A Grade Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to A Grade Academy:

Shortcuts

Share

Category