23/02/2018
நிதியியல் முறைமை உறுதிப்பாடு
ஒழுங்கு விதியும் மேற்பார்வையும்
வங்கிகளை ஒழுங்குபடுத்தலும் மேற்பார்வை செய்தலும்
வங்கிகளுக்கான ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வை கட்டமைப்பு தொடர்பாக வங்கித் தொழில் சட்டம், நாணயச் சட்ட விதி, செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியவற்றில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கி இரு வகை வங்கிகளுக்கு வங்கித் தொழில் உரிமத்தினை வழங்குகின்றது. அவையாவன உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் (இவை சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கிகளாகும்). உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு முன்னயது பொது மக்களிடமிருந்து கேள்வி வைப்பினை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் (வாடிக்கையாளர்களுக்காக நடைமுறைக் கணக்கினைத் தொழிற்படுத்துதல்) பரந்தளவிலான வெளிநாட்டுச் செலாவணி நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதியளிக்கும் வெளிநாட்டுச் செலாவணியில் ஓர் அதிகாரம் பெற்ற வணிகராகவும் தொழிற்படுமிடத்து பின்னையது மத்திய வங்கியின் ஒப்புதல்களுடன் வெளிநாட்டுச் செலாவணியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன.
பின்வருவனவற்றை மேற்கொள்வதற்கு மத்திய வங்கிக்கு சட்டம் அதிகாரமளித்துள்ளது:
புதிய வர்த்தக மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளுக்கு உரிமம் வழங்குதல்
சட்டங்களின் கீழ் முன்மதியுடைய பணிப்புரைகள், தீர்மானங்கள், கட்டளைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் என்பனவற்றினை வங்கிகளுக்கு வழங்குதல்.
வங்கிகளின் தொடர்ச்சியான மேற்பார்வை மற்றும் பரீட்சித்தல்களை மேற்கொள்ளல்.
ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்தல் மற்றும் பலவீனமான வங்கிகள் தொடர்பாக தீர்மானத்தை மேற்கொள்ளுதல்.
நாணயச் சபையினால் உரிமம் வழங்கப்பட்ட வங்கிகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வைத் தொழிற்பாடுகளை மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைத் திணைக்களம் மேற்கொள்கின்றது. வங்கி மேற்பார்வையானது, வங்கித் தொழில் மேற்பார்வைக்கான பாசல் குழுவினால் தயாரிக்கப்பட்ட சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வங்கி மேற்பார்வைக்கான தரத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.
தொடர்ச்சியான மேற்பார்வைஃகண்காணிப்பு முறையின் கீழ் காலத்துக்கு காலம் வங்கிகளின் தொழிற்பாடுகள் தொடர்பாக வழங்கப்படும் தகவல்களினடிப்படையில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினதும், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளினதும் நிதி நிலைமைகள் கண்காணிக்கப்படுகின்றன. காலத்துக்கு காலம் தரப்படும் தகவல்களில் அடங்கிய விடயங்களாக வைப்புகள் மற்றும் முற்பணங்களது வாராந்த வட்டி வீதங்கள்; சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள், வருமானம் மற்றும் செலவு, வகைப்படுத்தப்பட்ட முற்பணங்கள் மற்றும் அறவிடமுடியாத ஐயத்திற்குரிய முற்பணங்களுக்கான ஒழுங்குகள், நியதி ரீதியான திரவச் சொத்துகள் தொடர்பான என்பன மாதாந்த கூற்றுக்கள்; மூலதனத் தேவை, பங்குகளில் முதலீடு, நெருங்கிய உறவினர்கட்கு வழங்கப்பட்ட கடன் வசதிகள், வட்டியின் பரம்பல்கள், வெளிநாட்டு நாணய வெளிப்பாடுகள், முதிர்ச்சி இடைவெளி பகுப்பாய்வு என்பன தொடர்பான காலாண்டு கூற்றுக்கள்; மற்றும் கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் அறிக்கைகள் மற்றும் கைவிட்டப்பட்ட சொத்துக்கள் என்பன தொடர்பான வருடாந்த கூற்றுகள் ஆகியவை காணப்பட்டன.
வங்கிகளை பல்வேறு இடர்நேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தி பலவீனமான வங்கிகளின் தரங்களை உயர்த்துவதற்குத் தேவையான ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக, தொகைரீதியான நடவடிக்கைகளான மூலதனப்போதுமை, சொத்துக்களின் தரம், முகாமைத்துவம், வருவாய்கள் மற்றும் திரவத்தன்மை (i.ந., ஊயுஆயுடு மாதிரி கூறுகள்) மற்றும் தரரீதியான நடவடிக்கைகளான நியதித் தேவைப்பாடுகள், பொருத்தமான சட்டங்கள் மற்றும் விதிகள், உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் கம்பனி ஆளுகையின் தரம் என்பவற்றுடன் வங்கியின் இணங்கி நடத்தல் தொடர்பான மதிப்பீடு என்பவற்றைக் கருத்தில் கொண்டு வங்கிகளின் ஒரு உள்ளக மேற்பார்வை மதிப்பீடு முறைமை அறிமுகப்படுத்தப்படுள்ளது.
வங்கித் தொழில் சட்டம் மற்றும் நாணயச் சட்ட விதி என்பனவற்றின் ஏற்பாடுகளின் படி எல்லா உரிமம் பெற்ற வர்த்தக மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் ஆகக் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்ட ரீதியான பரீட்சித்தல்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். வங்கிகளின் பரீட்சித்தல்களில் ஒரு புதிய அணுகுமுறை இப்பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது - இடர்நேர்வுகளை அடிப்படையாகக் கொண்ட பரீட்சை செயல்முறையான இது வங்கித் தொழிலில் எதிர்பாராத இடர்நேர்வுகளை அடையாளம் காண்பது, இத்தகைய இடர்நேர்வுகளை முகாமையிடுவது மற்றும் இத்தகைய இடர்நேர்வுகளை மட்டுப்படுத்தத் தேவையான வளங்களை மதிப்பீடு செய்வது என்பனவற்றில் கவனம் செலுத்துகின்றது. முன்மதியுடைய தேவைப்பாடுகள் மற்றும் நிதியியல் நிலமையில் ஏதாவது பலவீனங்கள், குறைபாடுகள், கட்டுப்பாடுகள் மற்றும் முறைமைகள் போன்றவற்றுடன் வங்கி இணங்கி ஒழுகாத விடயங்கள் தொடர்பாக , அவ்வங்கி திருத்தும் நடவடிக்கை எடுக்கும் என்பதனை உறுதிசெய்வதற்காக, மத்திய வங்கி, அவற்றை வங்கியின் பணிப்பாளர் சபையின் கவனத்துக்கு கொண்டு வரும்.
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் என்பன காலாண்டு, வருடாந்த கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் கூற்றுகளை முக்கிய செயலாற்றக் குறிகாட்டிகளை உள்ளடக்கியவிதத்தில், செய்திப் பத்திரிகைகளில், மூன்று மொழிகளிலும், ஒவ்வொரு காலமும் முடிவடைந்த இரு மாதங்களுக்குள் பிரசுரிக்குமாறு கோரப்பட்டுள்ளன.
பொதுவான வங்கித்தொழில் கருத்துக்களம் - ஆளுநர், உரிமம் பெற்ற வங்கிகளின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர்களுடன் மாதாந்த கூட்டங்களை நடத்தி வருகின்றார் . இக்கூட்டங்கள், வங்கித் தொழில் செயற்பாடுகள், நிதியியல் துறை தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கொள்கைகள் என்பனவற்றை கலந்துரையாடும் ஒரு கருத்துக்களமாக இருக்கின்றது.
வங்கிப் பணிப்பாளர்களின் கருத்தரங்கு - வங்கிகள் சவாலான சூழ்நிலைகளை எதிர் கொள்ளக்கூடிய தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒழுங்குபடுத்தல் மற்றும் வங்கியியல் வர்த்தக சீர்திருத்தங்களின் புதிய முன்னேற்றங்களை வங்கிப் பணிப்பாளர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களுடன் அவற்றை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் மத்திய வங்கி வருடார்ந்தம் வங்கிப் பணிப்பாளர் கருத்தரங்கை நடாத்துகின்றது.
பொது மக்களுக்கான விழிப்பூட்டல் - நிதியியல் நிறுவனங்களுடனான பொதுமக்களின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான இடர்நேர்வுகள் மற்றும் பெறுபேறுகள் பற்றியும் தடை செய்யப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்வது பற்றியும் அவர்கள் மதிப்பீடு செய்யுமாறும் மற்றும் எச்சரிக்கைகளுடன் இருக்குமாறும் ஒழுங்கான பத்திரிகை அறிவித்தல்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள்ஃநிகழ்ச்சிகள் மூலம் மத்திய வங்கி வங்கித் தொழில் மற்றும் நிதியியல் விடயங்களில் பொதுமக்களுக்கான விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டங்களினை நடாத்துகின்றது.