A/Manarul Uloom Maha Vidyalaya

A/Manarul Uloom Maha Vidyalaya Official Page Of MUMV

23/12/2025
16/12/2025

2026 #ஆம்_கல்வி_ஆண்டுக்கான_புதிய #மாணவர்களை_அனுமதித்தல்_தொடர்பாக.

அ/மனாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 தொடக்கம் 10 வரையான வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை அனுமதித்தல் விண்ணப்பப்படிவங்ஙளை 2025/12/17,18 ஆம் திகதிகளில் பாடசாலை காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
2025/12/22 ஆம் திகதி திங்கள் காலை 09.00 மணிக்கு பின்வரும் ஆவணங்களுடன் பெற்றோர்/பாதுகாவலர் மாத்திரம் வருகைதருமாறு அன்பாக வேண்டிக் கெகாள்கின்றோம்.

1) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.
2) பிறப்புச் சான்றுப்பத்திரம் மூலப்பிரதிகள் 02 (பிரதேச செயலகத்தில் பெறப்பட்ட Original B/C )
3) பாடசாலை விடுகைப்பத்திரம். (Leaving Certificate )
4) வர்ணப்புகைப்படம் 01 ( Colour Photo passport size)
5) 2025 ஆம் ஆண்டு இரண்டாம் தவணைப் பரீட்சை புள்ளி அறிக்கை (Report Sheet)
6) விசேட தேவைகள் இருப்பின் வைத்திய பரிசோதனையின் பிரதி ( Medical Report)
7) தரம் 5 புலமைப்பரீட்சை புள்ளி (அதிபரினால் உறுதிப்படுத்தப்பட்டது)

மேற்படி ஆவணங்களை தவறாது கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளவும்.
நன்றி.
இப்படிக்கு,

அதிபர்.
அ/மனாருல் உலூம் மகா வித்தியாலயம்.

14/12/2025



நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் பின்னர் எமது பாடசாலையை எதிர்வரும் 2025.12.16 ஆம் திகதி ஆரம்பிக்குமாறும் பாடசாலை வளாகத்தை துப்பரவு செய்து மாணவர்களின் பாதுகாப்பையும் கற்றல் செயற்பாடுகளையும் எவ்வித சிரமமுமின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு கல்வி அமைச்சினால் பல்வேறு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பாடசாலை நிர்வாகத்தால் 2025.12.14 இன்று சிரமதானப் பணிகள் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இன்றைய நாளின் சிரமதானப் பணிகளுக்கு பாடசாலை ஆசிரியர்களோடு , பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள் , 8 எட்டூர் ஊர் மக்கள், நலன்விரும்பிகள் ஆகிய அனைவரும் ஒன்றினைந்து சிறப்பான முறையில் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

அனர்த்தத்தின்பின்னர் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கு பொருத்தப்பாடு இல்லாமல் இருந்த பாடசாலை வளாகம் இன்றைய சிரமதானப் பணிகள் மூலம் பகுதியளவில் துப்பரவு செய்து கற்றலுக்கு உகந்த சூழலாக மாற்றப்பட்டுள்ளது.

இன்றைய சிரமதானப் பணிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு நீங்கள் அனைவரும் இன்று இப் பாடசாலைக்காக செலவழித்த நேரத்தையும் எதிர்கொண்ட சிரமங்களையும் இறைவன் பொருந்திக்கொள்ள வேண்டும் என்றும் , உங்கள் அனைவரினதும் தேகாரோக்கியம் வேண்டியும் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.

நன்றி ….

அதிபர் ,
அ/மனாருல் உலூம் மகா வித்தியாலயம்.

— —

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
11/12/2025

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

03/12/2025

அன்பு மாணவர்களுக்கு

அன்பான வேண்டுகோள்,

நாட்டில் ஏற்படுள்ள அசாதாரண நிலைமையை கருத்திற்கொண்டு

1) நீங்கள்
உங்களுடைய பெற்றோருடன் வீட்டில் இருந்து கொள்ளுங்கள், வெளியில் தேவையற்று திரிவதை தவிர்ந்த்து கொள்ளவும்

2) உரிய நேரத்துக்கு அல்லாஹ்வுக்காக ஐந்து நேரமும் தொழுது கொள்ளுங்கள்

3) குறைந்தது இரண்டு நிமிடமாவது அல்லாஹ் விடம் உங்களுக்கு தேவையானவற்றையும் சமுகத்துக்காகவும் துவா செய்து கொள்ளுங்கள்

3) ஒவ்வொரு தொழுகை முடிந்தவுடன் குர்ஆனில் குறைந்தது பத்து வசனம் ஓதிக்கொள்ளுங்கள்

4) மீதமாக உள்ள நேரத்தில் உங்களுடைய வீட்டின் நிலைமையை கருதி #மூன்றாம் #தவணைப்_பரீட்சைக்காக_சுய_கற்றலில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

என்றும்
உங்கள் அன்பு அதிபர் மற்றும் ஆசான்கள்.

இன்று (2025/11/19) எமது பாடசாலையின் சுற்றுச்சூழலின் நிலை அழகான முறையில் மாற்றியமைக்கப்படுள்ளது.இந்த நேரத்திலும் அதாவது ப...
19/11/2025

இன்று (2025/11/19) எமது பாடசாலையின் சுற்றுச்சூழலின் நிலை அழகான முறையில் மாற்றியமைக்கப்படுள்ளது.இந்த நேரத்திலும் அதாவது பாடசாலை விடுமுறைகாலத்திலும் எவ்வளவு அழகாக உள்ளது.ஒத்துழைத்து இவற்றை மாற்றியமைத்து பராமரிக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,நலன் விரும்பிகள் அனைவருக்கும் எமது பாடசாலை நிர்வாகம் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றது.

இந்தப்பாடசாலை 2024 ஆம் ஆண்டு அதிபராக JM.ILLIYAS Sir பொறுப்பேற்கும் போது பாடசாலையின்  சுற்றுச்சூழலின் நிலை இவ்வாறுதான் கா...
19/11/2025

இந்தப்பாடசாலை 2024 ஆம் ஆண்டு அதிபராக JM.ILLIYAS Sir பொறுப்பேற்கும் போது பாடசாலையின் சுற்றுச்சூழலின் நிலை இவ்வாறுதான் காணப்பட்டது.இன்று நிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

09/11/2025

#வாழ்த்துக்களும் #பிரார்த்தனைகளும்
நாளை க.பொ.த. (உ/த)ப் பரீட்சை எழுதவுள்ள மாணவச் செல்வங்கள், சிறந்த பெறுபேறுகளைப் பெற வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

"اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحُزْنَ إِذَا شِئْتَ سَهْلًا"

‘’நவீன தொழிநுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப பாடசாலை சூழலில் கற்றல் வாய்ப்புக்களை ஏற்படுத்தல்’’ எனும் தொனிப்பொருளின் கீழ் எமது ப...
24/10/2025

‘’நவீன தொழிநுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப பாடசாலை சூழலில் கற்றல் வாய்ப்புக்களை ஏற்படுத்தல்’’ எனும் தொனிப்பொருளின் கீழ் எமது பாடசாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இணைப்பாட விதானச் செயற்றிட்டங்களில் ( Co-curriculer Activity Projects) ஒன்றாக எதிர்காலத்தில் Robotic Club உருவாக்கப்படவுள்ளது. தரம் 6 - 9 வரையான மாணவர்களுக்கு மேற்படி பயிற்சி வகுப்புக்கள் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பாடசாலையின் பழையமாணவர்கள்,பெற்றோர்கள்,நலன் விரும்பிகள் இச்செயற்திட்டத்திற்கு உங்களது பங்களிப்புக்களையும் ஆலோசனைகளையும் வழங்கி எமது மாணவர்களின் எதிர்கால தொழில் உலகிற்கு ஆயத்தம் செய்வதற்கு முன் வருமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.
நன்றிகள்.
அதிபர்.
J.M.ILLLIYAS
MUMV-Gambirigaswewa.

17/10/2025

English day 2025

English Day Programme 2025 We are proud to announce that the English Day Programme of Manarul Uloom Maha Vidyalaya was s...
17/10/2025

English Day Programme 2025

We are proud to announce that the English Day Programme of Manarul Uloom Maha Vidyalaya was successfully held today, 15th October 2025, at our school premises.

This is the second time our school has organized this special event, the first English Day Programme being held last year. Both programmes were organized under the guidance, support, and encouragement of our respected Principal, Mr. J. M. Illiyas. His valuable leadership has been a great strength in making these events meaningful and successful.

We would like to extend our heartfelt thanks to the Organizing Committee and all the teachers for their support, dedication, and hard work in making this day a memorable one.

A special appreciation goes to our students, who gave their best performances with great enthusiasm and talent. Their efforts truly brought the programme to life.

Together, we made English Day 2025 a great success!

Address

Gambirigaswewa
Anuradhapura
50057

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 08:00 - 23:20

Telephone

+94255741811

Website

Alerts

Be the first to know and let us send you an email when A/Manarul Uloom Maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to A/Manarul Uloom Maha Vidyalaya:

Shortcuts

Share