30/06/2026
🌟 மனமார்ந்த பாராட்டுகளும் இனிய வாழ்த்துகளும்! 🌟
🏫 அ/நிக்கவெவ முஸ்லிம் வித்தியாலயம்
நிக்கவெவ, ஹொரோவ்பொத்தானை
எமது பாடசாலையின் மாணவி A.H. SADHA ZAINAB அவர்கள், தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டி (National Science Olympiad Competition) – தேசிய மட்டத்தில் Merit Pass பெற்று, எமது பாடசாலைக்கும் முழு சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
இந்த மகத்தான சாதனையைப் பாராட்டும் விசேட கௌரவிப்பு விழா இன்று, எமது பாடசாலை அதிபர் A.J.M. THAWFEEK அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. எமது பாடசாலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிய வேண்டிய பெருமைமிகு தருணமாக இந்நிகழ்வு அமைந்தது.
🌸 இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக,
🔹 Assistant Director of Education (Maths and Science), Zonal Educational Office, Kebithigollewa
🔹 Assistant Director of Education (Administration and Management), Zonal Educational Office, Kebithigollewa
🔹 Mr. Kiyasdeen Sir – பாடசாலைகளுக்கான இணைப்பாளர், Zonal Educational Office, Kebithigollewa
🔹 பாடசாலை SMC & SDC உறுப்பினர்கள்
🔹 AN-NAJAH ACADEMY உறுப்பினர்கள்
🔹Mr. Uwais, Director ,Azeez Foundation & MIT
ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.
👏 இச்சிறப்பான வெற்றியின் பின்னணியில் அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் மாணவியை வழிநடத்திய திரு. K.M. SATHEES (விஞ்ஞானப் பாட ஆசிரியர்) அவர்களுக்கும் எமது இதயப்பூர்வமான நன்றிகளையும் உயர்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த சாதனை, எமது பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் புதிய நம்பிக்கையையும் உயர்ந்த இலக்கை நோக்கிய ஊக்கத்தையும் வழங்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமையட்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் எமது மாணவியும் ஆசிரியரும் எதிர்காலத்திலும் இன்னும் பல தேசிய மற்றும் சர்வதேச மட்ட சாதனைகளைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
💐 அன்பு மாணவி A.H. SADHA ZAINAB அவர்களுக்கும், அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர் திரு. K.M. SATHEES அவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
– அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDC), பாடசாலை முகாமைத்துவக் குழு (SMC) மற்றும் மாணவர்கள்
🏫 அ/நிக்கவெவ முஸ்லிம் வித்தியாலயம்
Photo Credits: Z.M. Zaim( Grade-11)
Media Unit
A/Nikawewa Muslim Vidyalaya OBA