Ad-Deen An-Naseeha

Ad-Deen An-Naseeha Islamic studies

17/03/2026

தொழுகை செல்லுபடியாவதற்கு அதன் உள்ளுறுப்புகள் எனப்படும் 'அர்கான்கள்' மிக முக்கியமானவை. தொழுகையின் நிபந்தனைகள் தொழுகைக்கு வெளியே அமைபவை, ஆனால் அர்கான்கள் என்பவை தொழுகைக்குள் நாம் செய்யும் செயல்களாகும். இவற்றில் ஒன்று வேண்டுமென்றோ அல்லது மறதியாகவோ விடுபட்டாலும் அந்தத் தொழுகை செல்லாது.

11/03/2026
المذهب الشافعيகுணமடையாத நோயாளி மற்றும் நோன்பு நோற்க முடியாத முதியவர் ஆகியோரின் நோன்பின் சட்டம் நோன்பு நோற்பது கடமையல்ல. ...
07/03/2026

المذهب الشافعي

குணமடையாத நோயாளி மற்றும் நோன்பு நோற்க முடியாத முதியவர் ஆகியோரின் நோன்பின் சட்டம்

நோன்பு நோற்பது கடமையல்ல.

அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பதிலாக ஒரு 'முத்' (சுமார் 600 கிராம்) உணவை ஏழைக்கு 'பித்யா'வாக (ஈடாக) வழங்க வேண்டும்.
​📚 نص المصدر
​ (من منهاج الطالبين للإمام النووي):
"وَالشَّيْخُ الْهَرِمُ، وَالْمَرِيضُ الَّذِي لَا يُرْجَى بُرْؤُهُ؛ إذَا عَجَزَا عَنْ الصَّوْمِ: يُفْطِرَانِ، وَيُطْعِمَانِ عَنْ كُلِّ يَوْمٍ مُدًّا".

"மிக வயதான முதியவர் மற்றும் குணமடைய வாய்ப்பில்லாத நோயாளி ஆகிய இருவரும் நோன்பு நோற்க இயலாதபோது, நோன்பை விட்டுவிட்டு ஒவ்வொரு நாளுக்கும் பதிலாக ஒரு 'முத்' உணவை வழங்க வேண்டும்."

الاعداد الأستاذ محمد فيروز المكي

07/03/2026

ருக்கூஃ செய்தல்: குனிந்து முழங்கால்களைப் பிடித்தல்.

#தொழுகையின்அர்கான்கள் #தொழுகைதூண்கள் #சரியானதொழுகை #இஸ்லாம் #தமிழ்_பயான் #தொழுகைமுறை #ருக்கூஃ #ஸஜ்தா #பாத்திஹா #இஸ்லாமியசட்டங்கள் #பயான் #ரம்ஜான்2026

நோயாளி மற்றும் பயணியின் நோன்பு தொடர்பான சட்டம்المذهب الشافعي மத்ஹபின் படி நோயாளி1️⃣ நோயாளியின் நோன்பு (صيام المريض)நோயாள...
07/03/2026

நோயாளி மற்றும் பயணியின் நோன்பு தொடர்பான சட்டம்

المذهب الشافعي மத்ஹபின் படி நோயாளி

1️⃣ நோயாளியின் நோன்பு (صيام المريض)

நோயாளியின் நிலைமைகள் மூன்று வகை:

▪️ நோன்பு காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டால்

நோயாளிக்கு நோன்பு இருப்பது உடலுக்கு தெளிவான தீங்கு விளைவிக்கும் என்றால்:

அவருக்கு நோன்பு இருக்க அனுமதி இல்லை.

அவர் நோன்பை திறக்க வேண்டும்.

பின்னர் குணமடைந்த பின் அந்த நாட்களை கஃழா செய்ய வேண்டும்.

▪️ நோன்பு இருப்பது கடினமாக இருந்தால்

நோன்பு இருப்பது கடுமையான சிரமத்தை ஏற்படுத்தினாலும் தீங்கு உறுதி இல்லாவிட்டால்:

நோன்பு இருப்பது விரும்பத்தக்கதல்ல (மக்ரூஹ்).

நோன்பை திறந்து பின்னர் கஃழா செய்வது சிறந்தது.

▪️ நோன்பால் எந்த பாதிப்பும் இல்லாவிட்டால்

நோயாளிக்கு நோன்பு இருப்பதால் எந்த பாதிப்பும் இல்லையெனில்:

அவருக்கு நோன்பு கட்டாயம்.

நோன்பை திறக்க அனுமதி இல்லை.

📖 மூல ஆதார உரை (அரபி):

قال الإمام النووي رحمه الله:

> "المريض إن تضرر بالصوم ضرراً ظاهراً أفطر، ويقضي بعد ذلك."

📚 المصدر: المجموع شرح المهذب.

---

2️⃣ பயணியின் நோன்பு (صيام المسافر)

ஷரீஅத் அனுமதித்த சஃபர் (பயணம்) நிலை ஏற்பட்டால் பயணிக்கு இரண்டு நிலைகள் உள்ளன:

▪️ நோன்பு இருப்பது சிரமமில்லாவிட்டால்

பயணத்திற்கு நடுவிலும் நோன்பு இருப்பது சிரமமில்லையெனில்:

நோன்பு இருப்பது சிறந்ததாக (அஃப்தல்) கருதப்படுகிறது.

▪️ நோன்பு இருப்பது சிரமமாக இருந்தால்

பயணத்தில் நோன்பு இருப்பது கடினமாக இருந்தால்:

நோன்பை திறப்பது சிறந்தது.

இரண்டு நிலைகளிலும்:

பயணிக்கு நோன்பு இருக்கவும் அனுமதி உள்ளது.

நோன்பை திறக்கவும் அனுமதி உள்ளது.

திறந்தால் பின்னர் கஃழா செய்ய வேண்டும்.

📖 மூல ஆதார உரை (அரபி):

قال الإمام النووي رحمه الله:

> "يجوز للمسافر الفطر والصوم، وأيهما فعل جاز."

📚 المصدر: المجموع شرح المهذب.
---

✅ சுருக்கம்:

நோயாளி: நோன்பால் தீங்கு ஏற்பட்டால் திறக்கலாம்; பின்னர் கஃழா செய்ய வேண்டும்.

பயணி: நோன்பு இருக்கவும் திறக்கவும் அனுமதி உள்ளது; திறந்தால் பின்னர் கஃழா செய்ய வேண்டும்.

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்ணின் நோன்பு தொடர்பான சட்டம்1️⃣ தன்னுடைய உடல்நலத்திற்கு பயந்தால்கர்ப்பிணி அல்லது பாலூட்ட...
05/03/2026

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்ணின் நோன்பு தொடர்பான சட்டம்

1️⃣ தன்னுடைய உடல்நலத்திற்கு பயந்தால்

கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண் நோன்பு காரணமாக தன்னுடைய உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று பயந்தால்:

அவருக்கு நோன்பை திறப்பது (விடுவது) அனுமதிக்கப்பட்டது.

பின்னர் அந்த நாட்களை மட்டும் கஃழா (قضاء) செய்ய வேண்டும்.

ஃபித்யா (பரிகாரம்) இல்லை.

2️⃣ குழந்தைக்கே பாதிப்பு ஏற்படும் என்று பயந்தால்

கர்ப்பிணி பெண் கருவில் உள்ள குழந்தைக்கு, அல்லது பாலூட்டும் பெண் தன் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று பயந்தால்:

நோன்பை திறக்க அனுமதி உள்ளது.

பின்னர் கஃழா (قضاء) செய்ய வேண்டும்.

அதோடு ஒவ்வொரு நாளுக்கும் ஒரு மிஸ்கீனுக்கு உணவு (ஃபித்யா) கொடுக்க வேண்டும்.

3️⃣ தன்னுக்கும் குழந்தைக்கும் இருவருக்கும் பயந்தால்

நோன்பு காரணமாக தன்னுக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பயந்தால்:

நோன்பை திறக்க அனுமதி உள்ளது.

பின்னர் கஃழா மட்டும் செய்ய வேண்டும்.

ஃபித்யா இல்லை.

ஃபித்யாவின் அளவு

ஒவ்வொரு நாளுக்கும் ஒரு “முத்” அளவு உணவு (நம் நாட்டில் பொதுவாக அரிசி போன்ற உணவு) ஒரு ஏழைக்கு வழங்க வேண்டும்.

ஆதார உரை (மூல அரபு உரை)

قال الإمام النووي رحمه الله:

> "الحامل والمرضع إن خافتا على أنفسهما أفطرتا وعليهما القضاء فقط، وإن خافتا على ولديهما أفطرتا وعليهما القضاء والفدية."

📚 المصدر: المجموع شرح المهذب (6/273).

🌙 கேள்வி:அறுவை சிகிச்சை மற்றும் உடல் வெட்டுக்களின் மூலம் நோன்பு முறியுமா?📖 பதில் (ஷாஃபிஈ மத்ஹப்):🔹 1️⃣ அறுவை சிகிச்சை (உ...
04/03/2026

🌙 கேள்வி:
அறுவை சிகிச்சை மற்றும் உடல் வெட்டுக்களின் மூலம் நோன்பு முறியுமா?

📖 பதில் (ஷாஃபிஈ மத்ஹப்):

🔹 1️⃣ அறுவை சிகிச்சை (உடலை வெட்டுதல்):
உடலை வெட்டுவது மட்டும் நோன்பை முறிக்காது. ஏனெனில் தோல் (Skin) என்பது இயல்பான திறந்த வழி (منفذ مفتوح) அல்ல.

📚 ஆதாரம்:
இமாம் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"وَشَرْطُ الْمُفَطِّرِ أَنْ يَصِلَ إِلَى الْجَوْفِ مِنْ مَنْفَذٍ مَفْتُوحٍ"
(நோன்பை முறிக்கும் பொருள் என்பது திறந்த வழி மூலம் உடலின் உள் பகுதிக்கு சென்றாக வேண்டும்).
📖 மூலம்: المجموع شرح المهذب (6/313)

🔹 2️⃣ இரத்தம் வெளியேறுதல்:
எவ்வளவு இரத்தம் வெளியேறினாலும் நோன்பு முறியாது.

📚 ஆதாரம்:
இப்னு ஹஜர் الهيتمي (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"وَلَا يُفْطِرُ بِخُرُوجِ الدَّمِ كَالْحِجَامَةِ"
(ஹிஜாமா போன்ற இரத்தம் வெளியேறுதல் நோன்பை முறிக்காது).
📖 மூலம்: تحفة المحتاج (3/395)

🔹 3️⃣ மருந்து ஊசிகள் (Injection):
தசை அல்லது நரம்புகளில் போடப்படும் ஊசிகள் நோன்பை முறிக்காது (பலமான கருத்து).

📚 ஆதாரம்:
ஷிஹாபுத்தீன் ரம்லி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"لَا يُفْطِرُ مَا لَا يَدْخُلُ مِنْ مَنْفَذٍ مَفْتُوحٍ"
(திறந்த வழி அல்லாத இடம் மூலம் உடலுக்குள் சென்றால் நோன்பு முறியாது).
📖 மூலம்: نهاية المحتاج (3/166)

🔹 4️⃣ மயக்க மருந்து (Anesthesia):
▫️ Local Anesthesia – நோன்பு முறியாது.
▫️ General Anesthesia – சுப்ஹு முதல் மஃரிப் வரை முழு மயக்கத்தில் இருந்தால் மட்டுமே நோன்பு முறியும்.

📚 ஆதாரம்:
இமாம் நவவி (ரஹ்) அவர்கள்:
"وَلَوْ أُغْمِيَ عَلَيْهِ جَمِيعَ النَّهَارِ لَمْ يَصِحَّ صَوْمُهُ"
(முழு நாளும் மயக்கத்தில் இருந்தால் நோன்பு சரியாகாது).
📖 மூலம்: روضة الطالبين (2/366)

🔹 5️⃣ நோன்பை முறிக்கும் விஷயங்கள்:
வாய், மூக்கு போன்ற இயல்பான திறந்த வழிகள் வழியாக மருந்து, உணவு அல்லது திரவங்கள் உடலின் உள் பகுதிக்கு சென்றால் மட்டுமே நோன்பு முறியும்.

📚 ஆதாரம்:
ஷம்ஸுத்தீன் கத்தீப் ஷிர்பீனி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"وَيُفْطِرُ بِوُصُولِ عَيْنٍ إِلَى الْجَوْفِ مِنْ مَنْفَذٍ مَفْتُوحٍ"
📖 மூலம்: مغني المحتاج (2/158)

━━━━━━━━━━━━━━━
✍️ தயார் செய்தவர்:
Moulavi Al Usthad S.M.FAIROOZ Makky
━━━━━━━━━━━━━━━
📲 பகிர்ந்து நன்மை பெறுங்கள்! 🤲✨

கேள்விவிந்து வெளிப்படுவது நோன்பை முறிக்குமா?---✅ ஷாஃபிஈ மத்ஹபின் தீர்ப்பு📌 ஒருவர் தனது செயலால் (தொடுதல் / சுயஇன்பம்)இச்ச...
04/03/2026

கேள்வி

விந்து வெளிப்படுவது நோன்பை முறிக்குமா?

---

✅ ஷாஃபிஈ மத்ஹபின் தீர்ப்பு

📌 ஒருவர் தனது செயலால் (தொடுதல் / சுயஇன்பம்)
இச்சையுடன் விந்தை வெளியிட்டால் 👉 நோன்பு முறியும் ❌

📌 ஆனால் வெறும் பார்வை அல்லது சிந்தனை மூலம் விந்து வெளியிட்டால் 👉 நோன்பு முறியாது ✅
(இருப்பினும் இது தவிர்க்கப்பட வேண்டியது ⚠️)

---

📖 ஆதாரம் – இமாம் நவவி (ரஹ்)

📘 மின்ஹாஜுத் தாலிபீன்

> “சுயஇன்பம் நோன்பை முறிக்கும்.
தொடுதல், முத்தமிடுதல் மூலம் விந்து வெளிப்பட்டாலும் நோன்பு முறியும்.
ஆனால் வெறும் பார்வை அல்லது சிந்தனை காரணமாக வெளிப்பட்டால் நோன்பு முறியாது.
தூக்கத்தில் (இஹ்திலாம்) வெளிப்படுவதும் நோன்பை முறிக்காது.”

---

📖 ஆதாரம் – கதீப் ஷர்பீனி (ரஹ்)

📘 முக்னில் முஹ்தாஜ்

> “உடல் தொடுதல், முத்தமிடுதல், கட்டிப்பிடித்தல் போன்றவற்றால் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியும்.
வெறும் பார்வை அல்லது சிந்தனையால் வெளிப்பட்டால் முறியாது.”

---

⚠️ முக்கிய குறிப்பு

📌 உடலுறவு அல்லாத காரணத்தால் நோன்பு முறிந்தால்:
➡️ 🔁 அந்த நாள் மட்டும் கழா (Qaza)
❌ கஃப்பாரா இல்லை

📌 கஃப்பாரா (60 நாள் நோன்பு) 👉 உடலுறவிற்கு மட்டும் (ஷாஃபிஈ மத்ஹப்)

---

🤲 அல்லாஹ் நமக்கு நோன்பை தூய்மையாகக் காக்கத் தௌஃபீக் அளிக்கட்டும்.

📖 பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள் – அறிவு சதகா 🌿

கேள்வி:  இஸ்திஹாளா (தொடர் உதிரப்போக்கு) உடைய பெண்ணின் நோன்பின் சட்டம் என்ன?பதில்: இஸ்திஹாளா உடைய பெண்ணின் நோன்பு செல்லுப...
03/03/2026

கேள்வி: இஸ்திஹாளா (தொடர் உதிரப்போக்கு) உடைய பெண்ணின் நோன்பின் சட்டம் என்ன?

பதில்: இஸ்திஹாளா உடைய பெண்ணின் நோன்பு செல்லுபடியாகும் (ஸஹீஹ்) மற்றும் கடமையாகும் (வாஜிப்).

நோன்பின் சட்டங்களைப் பொறுத்தவரை அவர் தூய்மையான பெண்களைப் போன்றவர். உதிரப்போக்கு ஏற்படுவது அவரது நோன்பைப் பாதிக்காது.

ஆதாரம்:
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் தனது "மின்ஹாஜுத் தாலிபீன்" நூலில் கூறுகிறார்கள்:

> "وَهِيَ (أيِ الْمُسْتَحَاضَةُ) كَطَاهِرٍ فِي صَلَاةٍ وَصَوْمٍ وَاعْتِكَافٍ وَقِرَاءَةٍ..."
>
மொழிபெயர்ப்பு: "இஸ்திஹாளா உடைய பெண்; தொழுகை, நோன்பு, இஃதிகாஃப் மற்றும் (குர்ஆன்) ஓதுதல் ஆகியவற்றில் தூய்மையானவளைப் போன்றவர் ஆவார்."

(சுருக்கம் : இஸ்திஹாளா உடைய பெண் ஒரு தூய்மையான பெண்ணைப் போலவே கருதப்படுவார்).

الاعداد الأستاذ محمد فيروز المكي

18/12/2024

#சுத்தத்தின் #வகைகள் - #பாடம் - 03கட்டுரை வடிவில் இந்தப்பாடத்தை வாசிப்பதற்கு எமது இணயதலத்திற்கு செல்லவும்.... https://fairoozm...

*السلام عليكم ورحمة الله وبركاته* *வீட்டில் இருந்தவாறு மார்க்க சட்டங்களை படித்துக் கொள்வதற்கு ஒரு அரிய வாய்ப்பு*👩‍💻Onlin...
16/12/2024

*السلام عليكم ورحمة الله وبركاته*
*வீட்டில் இருந்தவாறு மார்க்க சட்டங்களை படித்துக் கொள்வதற்கு ஒரு அரிய வாய்ப்பு*

👩‍💻Online மூலமாக வீட்டில் இருந்து கொண்டே *பிக்ஹு* சட்டங்களை படித்துக் கொள்வதற்கு இப்பொழுதே விண்ணப்பிக்கவும்.

🧑‍💻ZOOM மற்றும் whatsapp மூலமாக இப்பாடங்கள் நடைபெற உள்ளது.

🎓 *பாடமுடிவில் பெறுமதிமிக்க சான்றிதழ்கள் வழங்கப்படும்* 🎓

👩‍💻 கண்ணியமான வீட்டுப் பெண்களுக்கு மார்க்க கல்வியை வீட்டில் இருந்தபடியே படித்துக் கொள்வதர்க்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும் தவற விடாதீர்கள்.

👩‍💻 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் *விண்ணப்பிக்கலாம்*

🧑‍💻16 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு தீனியாத் பாடங்கள் நடைபெறும்.

பாடத்தின் PDF மற்றும் ரெகோடிங் வழங்கப்படும்

எமது பாடங்களை எமது யூடிப் செனலிலும் பார்க்க முடியும் 👇👇👇
https://youtu.be/ZvOh17UQCcc?si=IoVet7v6SGDtST4L

உங்கள்
🔵பெயர்
🔵விலாசம்
🔵 வயது
🔵ஆண்/ பெண்
🟢WhatsApp இல

🔜 *ஆகியவற்றை எமக்கு உடனே அனுப்பி வைக்கவும்*
0094 77 208 3228

மேலதிக விபரங்களுக்கு எமது குரூப்பில் இனயவும் 👇👇👇
https://chat.whatsapp.com/CEgrwwKPHY2G1R7qvDzgNj

#சுத்தத்தின் #வகைகள் - #பாடம் - 03கட்டுரை வடிவில் இந்தப்பாடத்தை வாசிப்பதற்கு எமது இணயதலத்திற்கு செல்லவும்.... https://fairoozm...

Address

NO. 01, SAMPATHGAMA, MAHAPOTHANA, KAHATAGASDIGILIYA
Anuradhapura
80000

Alerts

Be the first to know and let us send you an email when Ad-Deen An-Naseeha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ad-Deen An-Naseeha:

Shortcuts

Share

Category