16/06/2026
THE STAGE IS SET,
THE LEGACY CONTINUES.
Coming Soon!
This is the official page of Old Azharians Union, Azhar College, Akurana, Sri Lanka.
16/06/2026
THE STAGE IS SET,
THE LEGACY CONTINUES.
Coming Soon!
17/05/2026
Honouring 119 Years of Excellence, Tradition, and Legacy of our alma mater!
12/04/2026
அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
எம்மை விட்டு பிரிந்த எமது முன்னாள் உறுப்பினர், சகோதரன் பஸ்லான் அவர்கள்,
சமூக சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த, உயர்ந்த நற்பண்புகளும் நேர்மையும் கொண்ட ஒரு மாமனிதர்.
அவர் Class of 1999(Batch) குழுமத்தைச் சேர்ந்த மாணவராக விளங்கியதுடன்,
எமது பாடசாலையில் மாணவத் தலைவராகப் (Head Prefect) ஆக பணியாற்றி,
தன்னுடைய தலைமைத்துவ திறன், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வின் மூலம்
அனைவரின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர்.
அஸ்ஹர் பழைய மாணவர் ஒன்றியம் (OAU) மற்றும் முன்னாள் மாணவத் தலைவர்கள் ஒன்றியத்திலும் (PPG) உறுப்பினராக இருந்து,
தன்னுடைய அனுபவத்தையும் வழிகாட்டுதலையும் அடுத்த தலைமுறையினருக்கு பகிர்ந்தவர்.
அவர் எமது பாடசாலையுடன் இணைந்து செயல்பட்ட காலங்களில்,
சமூக நலனுக்காக ஆழ்ந்த அக்கறையுடன் இடைவிடாமல் உழைத்து,
உதவி தேவைப்படும் பலரின் வாழ்க்கையில் ஒளியாக திகழ்ந்தவர்.
அவரது சேவை என்பது வெறும் செயற்பாடாக இல்லாமல்,
மனித நேயத்தின் உண்மையான வெளிப்பாடாக இருந்தது.
அவர் தொடந்த ஒவ்வொரு பணியிலும் நம்பிக்கையையும் நல்வாழ்வையும் விதைத்தவர்.
அவரது பணிவு, அமைதியான நடத்தை, இனிய பேச்சு மற்றும் மனித நேய சிந்தனைகள்
அவரை அறிந்த ஒவ்வொருவரின் இதயத்திலும் அழியாத நினைவாக பதிந்துள்ளது.
அவருடன் சில நிமிடங்கள் பேசினாலே கூட,
அவரின் மனமுள்ள இயல்பும் கருணையும் தெளிவாக உணர முடிந்தது.
அவர் ஒரு மனிதராக மட்டுமல்ல,
ஒரு நல்ல நண்பர், ஒரு உண்மையான சகோதரர்,
ஒரு நம்பிக்கையூட்டும் வழிகாட்டி என பல பரிமாணங்களில் விளங்கியவர்.
இன்று அவரின் இழப்பு எமக்கு ஒரு உறுப்பினரை மட்டுமல்ல,
எப்போதும் எம்முடன் நின்று ஆதரவு அளித்த ஒரு அன்பு உள்ளத்தையும்,
எம்மை வழிநடத்திய ஒரு ஒளி விளக்கையும் இழந்த துயரமாகும்.
இந்த இழப்பு எமது அமைப்பிற்கும் சமூகத்திற்கும்
ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகவே உணரப்படுகிறது.
அவரின் இல்லாமை எமது உள்ளங்களில் நிரப்ப முடியாத வெற்றிடமாகவே இருக்கும்.
இருப்பினும், அவர் செய்த எண்ணற்ற நற்செயல்கள்,
அவரால் உயர்ந்த வாழ்க்கைகள்,
அவர் விட்டுச் சென்ற நல்ல வழிகள் மற்றும் இனிய நினைவுகள்
என்றும் எமக்குள் உயிருடன் வாழ்ந்துகொண்டே இருக்கும்.
அவை எம்மை தொடர்ந்து நல்வழியில் நடத்தும் ஒளியாகவும்
அவரின் வாழ்க்கையை நினைவுகூரும் உறுதியான சாட்சியாகவும் இருக்கும்.
அல்லாஹ் அவருடைய அனைத்து குறைகளையும் மன்னித்து,
அவரது கப்ரை விசாலமாக்கி, ஒளியால் நிரப்பி,
அவருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தில் இடம் வழங்குவானாக.
அவரை இழந்து துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்
அல்லாஹ் அளவற்ற பொறுமையையும் மன வலிமையையும் அருள்வானாக.
இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு ஆறுதலாக இருப்பானாக.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அஸ்ஹர் பழைய மாணவர் ஒன்றியம்(OAU)
அக்குறணை
12/04/2026
Congratulations 🎉
Congratulations Champions💪💪
12/04/2026
Congratulations 🎉
Congratulations for your wonderful achievement
06/10/2025
Happy Teachers' Day
03/10/2025
The Executive Committee of the OAU undertook a highly successful official outing to the Northern Lights Bungalow in Kandenuwara on the 19th and 20th of October 2025.
The core of the program was a dedicated review and planning session. This session provided a structured opportunity to evaluate the progress and achievements of the past year and to strategize and plan the activities for the committee's second year.
The outcomes of this focused session were significant, resulting in a clear and actionable roadmap for the year ahead. The momentum from the retreat is already being carried forward, with several key initiatives set in motion immediately following the session.
In addition to the strategic outcomes, the outing served to strengthen the collaborative spirit among the members, solidifying their shared commitment to advancing the objectives of the OAU.
We would like to extend our special thanks to all ExCo members whose personal contributions were instrumental in funding this event. Their commitment and generosity were fundamental to making this retreat a resounding success.
26/08/2025
🔺ஒரு நாட்டை உருவாக்கி, உலகை வெல்லும் சூப்பர் தலைமுறை – தேசிய சாதனையில் அஸ்ஹர் கல்லூரி அக்குறணை!
எங்கள் மாணவன் S. Kavish, Sirasa TV-யில் ஒளிபரப்பாகும் Elephant House Super Heroes நிகழ்ச்சியின் SUPER ENTREPRENEUR category-ல் பங்கேற்கிறார்.
உங்கள் வாக்குகளால் அவரது கனவையும், எங்கள் பள்ளியின் பெருமையையும் பிரபலமான கருத்தாக்கமாக மாற்றுவோம்.
🗳️ ஆகஸ்ட் 23 முதல் அக்டோபர் 16 வரை உங்கள் விருப்ப வாக்குகளை பதிவு செய்யலாம்.
✅ வாக்களிக்க:
👉 EHSH (இடைவெளி) E6 என Type செய்து 7788 க்கு SMS அனுப்பவும்.
உங்கள் ஓர் வாக்கு, S. Kavish அவர்களின் வெற்றிக்கான ஒரு பொற்கால படி!
📺 இந்நிகழ்ச்சி ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணிக்கு Sirasa TV-யில் ஒளிபரப்பாகும்.