09/08/2026
தேசிய விஞ்ஞானப் போட்டி 2026 - பாடசாலை மாணவர்களின் தேசிய மட்ட வரலாற்றுச் சாதனை!
தேசிய அறிவியல் அமைப்பினால் (National Science Foundation - NSF) பாடசாலைகளுக்கு இடையே நடாத்தப்பட்ட தேசிய ரீதியான விஞ்ஞானப் போட்டி - 2026 இன் இறுதிச் சுற்று, கொழும்பு-7, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள CIDA (Construction Industry Development Authority) மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் எமது அக்/அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய மாணவர்கள், தேசிய மட்ட இறுதிச் சுற்றில் தங்களது சிறப்பான பாடலையும் கலைத் திறனையும் வெளிப்படுத்தி, அரங்கில் இருந்த அனைவரது பலத்த கரகோஷங்களையும் பாராட்டுக்களையும் பெற்றனர்.
இதன் மூலம் பாடசாலைக்கும் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இச்சாதனை படைத்த மாணவர்கள் எமது பாடசாலையின் இருமொழிக் கற்கைப் பிரிவின் தரம் 07 B/L 1 வகுப்பைச் சேர்ந்த R. Mohamed Imaaz, R. Ifadth Ahamed, N. Mufthi Ahamed, A. H. Afzer Ahamed ஆகியோராவர்.
இம்மாணவர்களின் உயரிய சாதனைக்குப் பின்னணியில் இருந்து வழிநடத்திய பாடசாலை அதிபர் Mrs. A.L. Naseefa, பிரதி அதிபர்களான Mr. M.A. Salahudeen, Mr. A.C.M. Harees, உதவி அதிபர்களுக்கும் எமது பாடசாலைச் சமூகம் தனது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அத்துடன், கல்வித் துறையில் தொடர்ந்து ஆலோசனைகளையும் ஊக்கத்தையும் வழங்கி வரும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் Mr. P.M. Yaseer Arafath Mohideen, விஞ்ஞான பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் Mr. M.N.M. Maseen, விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் Mr. M.Y.M. Kathafi, வலயத் தலைவர்கள், இருமொழிக் கற்கைப் பிரிவின் வலயத் தலைவர் மற்றும் உதவி அதிபருமான Mr.MMS.Rafa மற்றும் உதவி வலயத் தலைவர் Mr. M.N.Nishad ஆகியோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரியதாகுகின்றன.
மேலும், இப்போட்டிப் பணிகளை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த விஞ்ஞான பாட ஒருங்கிணைப்பாளர் Mr. A.L.M. Nawas அவர்களுக்கும், மாணவர்களின் ஆற்றல்களை ஆரம்பத்திலேயே இனங்கண்டு இப்போட்டிக்கான பாடலை நேர்த்தியாக உருவாக்கிப் பயிற்சி அளித்த விஞ்ஞான பாட ஆசிரியைகளான Mrs. A.L. Mujeefa, Mrs. M.I. Afroj Khanam, Mrs. A.L. Hamsath மற்றும் தமிழ் பாட ஆசிரியை Mrs.M.A.Hakeema ஆகியோருக்கும், மாணவர்களைப் போட்டிக்கு நேரில் அழைத்துச் சென்று வழிகாட்டிய ஆசிரியர் Mr.M. Irsath அவர்களுக்கும் எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.பாடலுக்கு இசையமைத்த A.L.இலியாஸ் ஆசிரியரின் புதல்வன் M.I.Tasneem அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அரங்கில் மாணவர்கள் அணிந்து பாடுவதற்கான ஆடைகளை மிக அழகாக ஒழுங்குபடுத்தித் தந்த அக்கரைப்பற்று கலாசார அலுவலகத்தின் (Cultural Office) கலாச்சார மேம்பாட்டு உத்தியோகத்தர் Mr. I.L.Rizwan அவர்களுக்கும் எமது சிறப்பு நன்றிகள் உரித்தாகின்றன. இவர்களோடு இணைந்து மாணவர்களின் ஒவ்வொரு வளர்ச்சிப் படியிலும் ஊக்கமளிக்கும் அன்புப் பெற்றோர்களுக்கும், பாடசாலையின் அபிவிருத்தியில் என்றும் பக்கபலமாக இருக்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (SDEC) மற்றும் பழைய மாணவர் சங்கம் (PPA) ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தேசிய ரீதியில் தடம் பதித்த எமது மாணவர்கள் எதிர்காலத்திலும் பல்வேறு சாதனைகளைப் படைக்க வாழ்த்திப் பிரார்த்திக்கிறோம்.
(தகவல் - Media Unit, Ak/Akkaraipattu MCC)