திகோ/ இராம கிருஷ்ண மகா வித்தியாலயம்.

திகோ/ இராம கிருஷ்ண மகா வித்தியாலயம்.

Share

connect all students and publish school events

15/03/2024

அனைவருக்கும் வணக்கம் !
தவிர்க்க முடியாத காரணங்களினால் எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பன பொதுக்கூட்டம் ஆனது பிற்போடப்பட்டுள்ளது. எமது பாடசாலை வளர்ச்சிக்கு தங்களது ஆக்கபூர்வமான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் தொடர்ந்தும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்றோம் மேலும் பொதுக்கூட்டம் தொடர்பான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும். தகவலினை முடிந்தவரை ஏனைய பழைய மாணவர்களுக்கும் வழங்கவும்.

அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாக குழுவினர்
திகோ/இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம்.

02/03/2024

அனைத்து பழைய மாணவர்களையும் அன்புடன் வரவேற்கின்றோம் … உங்கள் பாடசாலையுடன் கைகோர்த்து செயற்பட சிறந்த தருணம் ..

06/12/2023

2024/2026 ஆம் கல்வி ஆண்டிற்கான உயர்தர வகுப்புக்குறிய கணித -விஞ்ஞான, கலைப்பிரிவு மற்றும் வர்த்தகப் பிரிவு மாணவர்களை கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயாலயத்தில் சேர்த்துக்கொள்ளல் தொடர்பான விண்ணப்ப படிவம் எதிர் வருகின்ற திங்கள்(2023/12/11) முதல் அதிபர் காரியாலயத்தில் பெற்றுக் கொள்ள முடியும். துறைகளுக்கு பொருத்தமான தகுதிகளைக் பெற்றுக்கொண்டுள்ள மாணவர்கள் இவ்விண்ணப்ப படிவத்தினை உரிய முறையில் பூரணப்படுத்தி எதிர்வரும் 16/12/2023 (சனிக்கிழமை) முதல் பாடசாலை அதிபர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்

Photos from திகோ/ இராம கிருஷ்ண மகா வித்தியாலயம்.'s post 06/12/2023

இன்று புதன் கிழமை 2023.12.06 ம் திகதி 83 O/L batch பழைய மாணவர்களால் கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி தரிப்பிடம் நிர்மாணிக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பாடசாலையின் தேவையை அறிந்து பூர்த்தி செய்த 83 O/L batch பழைய மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பழைய மாணவர்கள் ஒன்றினைத்து பாடசாலையின் கல்விச் செயற்பாடு மேலோங்கவும் நற்பெயரினை பேணவும் உறுதியுடன் செயற்படுவோம்.

Photos from திகோ/ இராம கிருஷ்ண மகா வித்தியாலயம்.'s post 22/10/2023

இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் வாணி விழாவினை முன்னிட்டு மாணவர்களின் ஆக்கத்திறயினை வெளிப்படுத்தும் முகமாக கோலப்போட்டி மற்றும் பன்னிசைப் போட்டி நடைபெற்றது.

06/09/2023

வெளியான G.C.E.A/L 2022 (2023) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லமுடியும் என எதிர்பாக்கப்படுகின்ற மாணவர்களின் விபரம்

மருத்துவ துறைக்கு ஒருவரும்
M.மிதுஷன் 2A , B District Rank-42

பொறியியல் துறைக்கு ஒருவரும்
K.நிஷநிதன் A , B , C District Rank-58

பௌதிக விஞ்ஞான துறைக்கு ஒருவரும்
A.கிசோமியா B , 2C District Rank-98

உயிரியல் விஞ்ஞான துறைக்கு இருவரும்

N.கனிஷ்னி B , 2C District Rank-249
J.நிதர்ஷனா 3C District Rank-294

வர்த்தக துறைக்கு நான்கு பேரும்

N.சர்ஜன் A,2B District Rank-118
S.தனுஸ்ரிக்கா A,2B District Rank-134
K.சாய்சஞ்ஞய் A,2B District Rank-170
U.சதுர்திக்கா A,2B District Rank-214

கலைத் துறைக்கு ஆறு பேரும்

S.கம்சிகா 3 A District Rank-85
T.வர்சிகா 3 A District Rank-175
M.சிரோமிதா A,2B District Rank-263
T.அமல்பிரித்தி A,2B District Rank-522
V.கர்ஜனா A,B,C District Rank-598
T. சந்தியா A,B,C District Rank-935 (Drama)

Congratulations 👏

03/08/2023

அக்கரைப்பற்று, இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய மாணவர்கள் வலய மட்ட ஆங்கில தின போட்டியில் சாதனை!!!

திருக்கோவில் வலய, வலய மட்ட ஆங்கில தின போட்டி அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில் அக்கரைப்பற்று, கமு/திகோ/ இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய 10 மாணவர்கள் முதலாம் இடத்தினையும் 11 மாணவர்கள் இரண்டாம் இடத்தினையும் 07 மாணவர்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்றிருப்பதுடன் இதில் 21 மாணவர்கள் மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகியும் உ‌ள்ளன‌ர்.

இவ்வாறாக ஆங்கில போட்டிகளில் அதிகளவான மாணவர்கள் தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தி மாவட்ட மட்ட போட்டிக்கு தெரிவாகி இருப்பது பாடசாலைக்கும் மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்திற்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

குறித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், மாணவர்களை போட்டிக்காக தயார் படுத்திய ஆசிரியர்களுக்கும் மேலும் அனைத்து விதமான ஒத்துழைப்புக்களை வழங்கிய பாடசாலையின் அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்களுக்கும் பிரதேச மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Copied Alayadivembu WebTeam

03/08/2023

மாணவன் தவறு செய்தால் அடிக்கக் கூடாது, திட்டவும் கூடாது, மனம் புண்படும் படி பேசவும் கூடாது...
எனில்...

படிக்குமாறு அறிவுறுத்தக் கூடாது, ஒழுக்கத்தை வலியுறுத்தக் கூடாது, இது எதுவுமே மாணவனுக்கு பிடிக்காது, மாணவன் மனம் புண்படும்..

எனில் ஆசிரியரின்( பெற்றோரின் ) வேலை தான் என்ன...?

பண்படுத்துவது என்பது புண்படுத்துதல் அல்ல...

கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...?

நிலங்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு விளைச்சல் எப்படி கிடைக்கும்...?

தங்கத்தை நெருப்பில் இடாதே என்று சொன்னால் - தங்க ஆபரணங்கள் எப்படி கிடைக்கும்...?

புரிதல் வேண்டும்...

பண்படுத்துவது என்பது - புண்படுத்துவது அல்ல என்ற புரிதல்
மாணவர்களுக்கு மட்டுமல்ல - மற்றவர்களுக்கும் வேண்டும்...!

ஒரு பச்சிளம் குழந்தைக்கு ஊசி போடுகிறார் மருத்துவர்...
குழந்தைக்கு வலிக்கும் இது தவறு என்று அவரிடம் சொன்னால் குழந்தை நலமுடன் வாழ்வது எப்படி...?

ஒரு வீட்டில் குழந்தையின் கைகளை தந்தை பிடிக்க, கால்களை மாமா பிடிக்க.. தலையை அசைக்காமல் பாட்டி அழுத்தி பிடிக்க, குழந்தைக்கு பிடிக்காத கசப்பு மருந்தை தாய் தருகிறாள்...

குழந்தையின் மீது செலுத்தப்படும் எவ்வளவு மோசமான வன்முறை இது... அவர்களுக்கான தண்டனை என்ன...?

குழந்தையின் நலன்கள் இரண்டு..
உடல் நலன்...
உள்ள நலன்...

உடல் நலனுக்காக இயங்கும் மருத்துவத்துறையின் கைகளை...
"ஊசி குழந்தைக்கு வலிக்கும், மருந்து குழந்தைக்கு கசக்கும், அறுவை சிகிச்சை அதை விட வலிக்கும்... எனவே எல்லாவற்றையும் தவிர்த்து
குழந்தைக்கு மனம் நோகாமல் அறிவுரை மட்டும் கூறி அனுப்புங்கள்" என்று சொல்வீர்களா...?

மருத்துவ துறையின் கைகள் கட்டப்பட்டால், உடல் நலன் ஒழிந்தது என்று அர்த்தம்...

புரிதல் வேண்டும்...

அதே போல...
உள்ள நலனுக்கானது தான் - கல்விக்கூடங்கள்...
அது கூடாது, இது கூடாது என்று இங்கே கற்பிப்பவரின் கையும், சுய சிந்தனை உணர்வும் கட்டப்பட்டுவிட்டன...

விளைவு - நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு கல்விக்கூடம் மூடப்பட்டால் - அது நூறு சிறைச்சாலைகள் திறப்பதற்கு சமம்.

மூடும் அளவிற்கு அதிக சிரமம் வேண்டாம்...
ஆசிரியரின் உடலும், உள்ளமும், கைகளும் கட்டப்பட்டாலே போதும்...
மாணவன் ஆசிரியரால் திருத்தப்படாவிட்டால்,காவலர்களின் அடியால் திருந்த வேண்டும் அல்லது சிறைச்சாலைக்குத்தான் செல்ல வேண்டும்.

சிந்தியுங்கள் பெற்றோர்களே..….!

மனம் நொந்து போயுள்ள ஆசிரிய சமுதாயம் சார்பாக.

குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்காக பெரும் சேவையாற்றிக் கொண்டிருக்கும், மாணவர்களை தன் பிள்ளைகள் போல் நினைத்து கற்பிப்பதுடன், அவர்களை சிறந்த முறையில் வழிநடாத்தி, அவர்களை ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற இலட்சியத்திற்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் நல்லுள்ளம் கொண்ட ஒவ்வொரு ஆசிரிய / ஆசிரியைகளுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.
#

12/04/2023

Stop sexual harassment to ( girls) students.
becoz 60% of high school girls said they are victims of sexual harassment.

Photos from திகோ/ இராம கிருஷ்ண மகா வித்தியாலயம்.'s post 05/10/2022

Congratulation T. JANUJAN who participated in Eastern Province School athletics Meet 2022 . He got 1st place in long jump.

எமது பாடசாலை மாணவன் T. Janujan நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடம் பெற்றுள்ளார்.

03/10/2022

Drug addiction- இருள் மயமான எதிர் காலம் நம் கண் முன்னால்…
உண்மை சம்பவங்கள்
Dr PM. Arshath Ahamed

சுபனி கொழும்பில் ஒரு முன்னணி சர்வதேச பாடசாலையில் எட்டாம் வகுப்பில் உள்ள மாணவி.

“பாடசாலையில் நாங்கள் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தினோம், ஒரு சீனியர் அக்கா ப்ரொவ்னி (போதை மாத்திரையின் குழுக் குறியீடு)களை அங்கு விற்பனை செய்தார்.

“என் நண்பர்கள் அதை ட்ரை பன்ன எனக்கு உதவினார்கள்”. “நான் முதன்முதலாக போதை மருந்துகளை உபயோகித்தேன், ஆரம்பத்தில் வெறுப்பாக இருந்தது” எனினும் நண்பர்கள் அதைத் தொடர்ந்து பாவித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை ஊட்டினர் .

“உண்மையிலேயே போகப் போக நன்றாக இருந்தது”,அதன் பின் “ஆப்பிள் [ஓபியோட் போதை மாத்திரை(Tramadol Tablet)யின் தெருப் பெயர்] பாவிக்க தொடங்கினேன், அது எங்களது பாடசாலையில் மிகவும் பிரசித்தமானது”. நான் அதை நன்றாக உணர்ந்தேன் –

ஒரு சில மணிநேரங்களுக்கு நல்ல மகிழ்ச்சியை தந்தது. அதனால் அடிக்கடி தேவைப்பட்டது. ஆனால் இறுதியில் விளைவுகள் மோசமாகின, மனச்சோர்வும் கவலையும் மாத்திரமே எஞ்சியிருந்தன. “என்னால் படிக்க முடியவில்லை“.

செரீனா வயது 16.”நான் பார்டிகளுக்கு நண்பர்களுடைய வீடுகளுக்குச் செல்வேன், அவர்கள் அனைத்து வகையான சாராயம் உள்ளிட்ட எல்லாவிதமான போதைப் பொருள்களையும் வைத்திருப்பார்கள்“.

அவர்கள் எல்லோரும் அதை பயன்படுத்துவார்கள்,அது எனக்கு ஆசையை தூண்டியது. அங்கே மோலி (M**A / எக்ஸ்டஸி எனும் போதைப்பொருளின் சுருக்கப்பெயர்) ஏராளமாக கிடைத்தது .

“ஆரம்பத்தில் கட்டுப்பாட்டுடன் உபயோகித்தேன், இதில் நான் பிரச்சினை இருப்பதாக உணர்ந்ததில்லை, ஏனெனில் வீட்டில் தந்தை அடிக்கடி புகைப்பிடிப்பதைப் பார்த்திருக்கிறேன்”. “அது கவலையை நீக்கியது, ஆற்றலை அதிகரித்தது”. “அதை பாவிப்பது பன்(fun)னாக இருந்தது“

ஆயினும் ​​இரண்டு வருடங்களுக்குள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது .”நான் எக்ஸ்டஸி நிறைய பயன்படுத்திய போது பசியே இல்லாமல் போனது, அரிதாகவே சாப்பிட்டேன், உடம்பில் சக்தி இல்லை, உடல் இழைத்தது, கடைசியில் ஐந்து நிமிடத்திற்கும் மேலாக ஒரு புத்தகத்தின் முன் உட்கார முடியவில்லை“.

இலீனா கொழும்பில் ஒரு பிரபலமான பாடசாலையில் கற்கும் ஒரு மேல் தட்டு மாணவி. ஏழாம் வகுப்பிலிருந்து ஏறத்தாழ அவளது வகுப்பு தோழிகள் எல்லோரும் போதைபொருட்களை பாவிப்பதாக சொல்கிறாள்.

“உண்மையில் பெரும்பாலான தோழிகள் வகுப்பறைகளில் கூட இந்த மாத்திரைகளை பாவித்த நிலையில் தான் இருப்பார்கள்”, ஆனால் ஆசிரியர்கள் கூட இது பற்றி கவனிக்கவில்லை என்கிறாள் அவள். (ஏனெனில் இவைகள் நாம் நினைப்பது போல போதை மயக்கத்தை ஏற்படுத்துவது இல்லை) “இப்போதை மருந்துகளை வாங்குவது கடினம் அல்ல.

என் நண்பர்கள் பெரும்பாலும் ரியுஸன் வகுப்பு வகுப்புகளைத் தவிர்க்கிறார்கள், அந்த பணத்தை இவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோரிடம் வேறு காரணங்களை கூறி பணத்தை எடுத்து கொள்கிறார்கள்.

இன்னும் சில தோழிகள் யாருக்கும் தெரியாமல் தங்களது வீட்டு தோட்டத்தில் அல்லது மொட்டை மாடியில் இருந்து தங்களது சொந்த பாவனைக்கான கஞ்சாவை[கன்னாபீஸ்] சாகுபடி செய்து கொள்கின்றனர்.

பலர் நண்பர்களிடமிருந்து அடிக்கடி தேவையான கஞ்சாவை, டிராமாடோலை இலவசமாக அல்லது கடனுக்கு பெறுகின்றனர், இதற்காக அண்டை வீட்டாரை அல்லது ஒரு த்றீவீல் ட்ரைவரை பயன்படுத்துகின்றனர்.

அதே நேரத்தில் எக்ஸ்டாசி, அப்பிள் போன்றவை பார்டிகள் மற்றும் நடனங்கள்,கேளிக்கைகளின் போது எளிதாக கிடைக்கின்றன. “மருந்துகள் கிடைப்பது எளிது, ஆனால் பணம் எனக்கு கிடைப்பது தான் அவ்வளவு சுலபமல்ல” என்று அவளே ஒப்புக்கொள்கிறாள்.

மேலே உள்ள உண்மைச் சம்பவங்கள் போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக இருப்பினும் பாடசாலை மாணவர்களுக்கு எவ்வளவு எளிதில் அணுகக்கூடியதாகக் காணப்படுகின்றன.

இதன் பாவனை சமூகத்தில் எந்தளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதற்கான சிறு உதாரணங்கள் மாத்திரமே. ஒரு காலத்தில் ஆண்களிடமும், நகர்ப்புறங்களிலுமே காணப்பட்ட இந்தப் போதைப் பழக்கம் இப்போது பெண் பிள்ளைகளிடமும், கிராமங்களிலும் பரவி வருவது தான் இதன் பயங்கரத்தை விளக்கப் போதுமானது.

ஏனெனில் அனைத்து போதை மருந்துகளின் விநியோகத்திற்கான நெட்வொர்க்குகள் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளன, அரசியல் ஆதரவு தாராளமாக கிடைக்கின்றது.

சோர்ஸிங் செய்வதற்கு சமூக ஊடகங்கள்( Facebook, Whats App,Viber, e business sites) ஒரு பெரிய வழியில் பங்களிக்கிறன. இலங்கையில் நடைபெறுகின்ற பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்படும் பார்ட்டிகள் இவைகளுக்கான ஆள் சேர்ப்புக்கும் போதைப்பொருள் பாவனைக்குமான நல்ல களமாக அமைந்து விடுகின்றன.

அதே போல போதை பாவிப்பவர்களே தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு நிதி பெறுவதற்கு அதன் வாடிக்கையாளர்களாகவும், விற்பனையாளர்களாகவும் இருக்கின்றனர்.

போதைப்பொருள் தயாரிப்பு , கடத்தல், பரிமாற்றம்,விற்பனை, அதன் துணைச் சேவைகள், நெட்வொர்க்குகள் மிகவும் இரகசியமான பரகசியமானவை(open secret ), அவை மிகவும் சுவாரஸ்யமானவை, ஒரு புத்தகம் எழுதுமளவுக்கு இன்ட்ரஸ்டான தகவல்களை கொண்டவை.

ஆப்பிள், மோலி மற்றும் கிரிஸ்டல் மேத், அய்ஸ்( Apple, Molly, Crystal M**h, Ice) போன்ற போதை மருந்துகள் மாணவர்களால் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

இது அவர்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது உதாரணமாக, பாவா, மாவா மற்றும் ஹான்ஸ், கஞ்சா(Bawa, Mawa, Cannabis and Hans) போன்ற புகையிலை சார் பொருட்களின் பாவனை குறைந்த வருமானம் கொண்ட குழுக்களில் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றது.

அது போல கோகேயின், எக்ஸ்டஸி மற்றும் கிறிஸ்டல் மெத் (co***ne, Ecstasy and Crystal meth)போன்றன விலை உயர்ந்த மருந்துகள் பணக்காரப் பிள்ளைகளால் உபயோகிக்கப்படுகின்றன. ‘ஆப்பிள்‘ என அறியப்படும் வலி நிவாரணியான டிராமாடோலின், மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றின் பாவனை ஏழை, பணக்கார வேறுபாடு இன்றி மாணவ மாணவிகளிடம் வேகமாக வளர்ந்து வரும் மற்றொரு போதை பொருளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது நகர் புறம், கிராமம் என வேறுபாடின்றி வியாபித்து வருகின்றது.

புறநிலை அழுத்தம், நண்பர்களின் ஊக்குவிப்பு, சமூக ஊடகங்களின் தாக்கம், மற்றும் தனிப்படும் பயம் (loneliness), குறைந்த சுயமரியாதை (low self esteem) ,பிரிந்த குடும்ப கட்டமைப்பு (Broken family) அல்லது செயலிழந்த சமூக அமைப்பு (Dysfunctioning society) என்பன இந்த போதை பயன்பாட்டிற்கு காரணிகளாக இருக்கின்றன.

போதைப்பொருள் பாவனையானது மிக ஆபத்தானது . இது குறித்து ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியர்களும் மூத்தவர்களும் மிகவும் அவதானமாக இருப்பது காலத்தின் கட்டாயத் தேவையாக இருக்கின்றது.

போதைப்பொருள் பாவனையை ஆரம்ப நிலைகளில் கட்டுப்படுத்தல் மாத்திரமே மிகச் சிறந்த விளைவுகளை தரவல்லது.

போதைப் பொருளை நோக்கிய பாதையை விட்டும் அல்லது அதை நாடுவதை விட்டும் நமது குழந்தைகளை காப்பாற்றுவதும், அந்த கொடிய வலையில் விழாமல் தொடர்ந்து வைத்திருப்பதும் நமது ஒவ்வொருவரின் கடமையாக இருக்கின்றது.

போதை பொருளுக்கு அடிமையாகி விட்டால் அதன் பின் அதிலிருந்து மீட்டு எடுப்பது என்பது சிரமமான காரியமாகவே காணப்படுகிறது. ஆகவே வருமுன் காப்பதே நம் முன்னால் உள்ள மிகச் சிறந்த சிறந்ததாக இருக்கிறது.

Dr PM. Arshath Ahamed MBBS, MD PEAD
குழந்தை நல மருத்துவ நிபுணர்
ஆதார வைத்தியசாலை சம்மாந்துறை.

Photos from திகோ/ இராம கிருஷ்ண மகா வித்தியாலயம்.'s post 03/10/2022

Say no to drugs and create drug free student society .

Want your school to be the top-listed School/college in Akkaraipattu?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


R. K. M School Road, Akkaraipattu-7/3
Akkaraipattu
32400