Undergraduates Association Akkaraipattu

Undergraduates Association Akkaraipattu Elevate your undergraduate experience with a community dedicated to empower education !

அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த அரச போட்டிப்பரீட்ச...
23/08/2026

அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த அரச போட்டிப்பரீட்சைகளுக்கான வழிகாட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு, பெறுமதிமிக்க அறிவுரைகளையும் பயனுள்ள நுண்ணறிவுகளையும் எம்முடன் பகிர்ந்துகொண்ட கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் AG. Fasmil Sir அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சை தொடர்பான பயனுள்ள தகவல்கள், அனுபவங்கள் மற்றும் வழிகாட்டல்களைப் பெற்று பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

தங்களின் பெறுமதிமிக்க நேரத்தையும் அறிவையும் எம்முடன் பகிர்ந்து கொண்டு, இந்நிகழ்வை சிறப்பிக்கச் செய்தமைக்காக எமது உளமார்ந்த நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுனர் சங்கம் 🎓

The Undergraduates Association Akkaraipattu (UGAA) extends its heartfelt gratitude to Mr. A.G. Fasmil, Deputy Director of Education, Eastern Provincial Department of Education, for joining the successfully conducted Guidance Programme for Government Competitive Examinations organized by UGAA and for sharing his valuable advice, knowledge, and insightful guidance with us.

It is noteworthy that more than 100 students participated in the programme with great enthusiasm and benefited from valuable information, experiences, and guidance related to the Sri Lanka Administrative Service Examination.

We sincerely express our heartfelt gratitude and prayers for generously sharing your valuable time and knowledge with us and for contributing immensely to the success of this programme.

Undergraduates Association Akkaraipattu (UGAA)🎓
______________________________________
Design: Samar Sikkanthar
Caption(Tamil) : Rauftheen F Sheeba
Caption(English) : Yahiya Fatheena

அக்கரைப்பற்று இளமானிப் பட்டப்பயிலுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச திறந்த போட்டிப் பரீட்சைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்ச...
22/08/2026

அக்கரைப்பற்று இளமானிப் பட்டப்பயிலுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச திறந்த போட்டிப் பரீட்சைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி…
இன்று🚨🚨

அரச திறந்த போட்டிப் பரீட்சைகளில் (Open Competitive Examinations) பங்கேற்க விரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Meeting ID: 681 380 8853
Passcode: 13925

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/6813808853?pwd=5cYO0llHjadKB3Ll1QqIQvFLVouoPW.1&omn=85992614246

⏰ நேரம்:8.00 PM
📌 ZOOM இனூடாக

கீழுள்ள Google form இனை பூர்ததி செய்வதன் மூலம் WhatsApp குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 👇🏻👇🏻

🔗 https://forms.gle/RFGL29BGSRXNLPuB6

நாளை…!🚨அக்கரைப்பற்று இளமானிப் பட்டப்பயிலுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச திறந்த போட்டிப் பரீட்சைகள் தொடர்பான வழிகாட்டல் ந...
21/08/2026

நாளை…!🚨
அக்கரைப்பற்று இளமானிப் பட்டப்பயிலுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச திறந்த போட்டிப் பரீட்சைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி…

அரச திறந்த போட்டிப் பரீட்சைகளில் (Open Competitive Examinations) பங்கேற்க விரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில்,

🔹 பரீட்சை தொடர்பான முழுமையான வழிகாட்டல்கள்
🔹 நேர்முகத் தேர்வுக்கான தயார்படுத்தல்
🔹 சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் கலந்துரையாடல் & Q&A

போன்ற முக்கிய விடயங்களை அறிந்துகொள்ளலாம். 💡📚

⏰ நேரம்:8.00 PM
📌 ZOOM இனூடாக

தவறாது நீங்களும் கலந்துகொள்ள கீழுள்ள Google form இனை பூர்ததி செய்வதன் மூலம் WhatsApp குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 👇🏻👇🏻

🔗 https://forms.gle/RFGL29BGSRXNLPuB6

அக்கரைப்பற்று இளமானிப் பட்டப்பயிலுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச திறந்த போட்டிப் பரீட்சைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்ச...
19/08/2026

அக்கரைப்பற்று இளமானிப் பட்டப்பயிலுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச திறந்த போட்டிப் பரீட்சைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி…

அரச திறந்த போட்டிப் பரீட்சைகளில் (Open Competitive Examinations) பங்கேற்க விரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில்,

🔹 பரீட்சை தொடர்பான முழுமையான வழிகாட்டல்கள்
🔹 நேர்முகத் தேர்வுக்கான தயார்படுத்தல்
🔹 சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் கலந்துரையாடல் & Q&A

போன்ற முக்கிய விடயங்களை அறிந்துகொள்ளலாம். 💡📚

🗓️ திகதி: 22/08/2026
⏰ நேரம்:8.00 PM
📌 ZOOM இனூடாக

தவறாது நீங்களும் கலந்துகொள்ள கீழுள்ள Google form இனை பூர்ததி செய்வதன் மூலம் WhatsApp குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 👇🏻👇🏻

🔗 https://forms.gle/RFGL29BGSRXNLPuB6
______________________________________
Design: Safnan Ahamed
Caption: Reeza Ilmy

உங்கள் கனவான "நிர்வாக சேவை அதிகாரி" இலக்கை அடையத் தயாரா❓அக்கரைப்பற்று இளமானிப் பட்டப்பயிலுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச...
14/08/2026

உங்கள் கனவான "நிர்வாக சேவை அதிகாரி" இலக்கை அடையத் தயாரா❓

அக்கரைப்பற்று இளமானிப் பட்டப்பயிலுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச திறந்த போட்டிப் பரீட்சைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சி…

அரச திறந்த போட்டிப் பரீட்சைகளில் (Open Competitive Examinations) பங்கேற்க விரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்காக,

🗓️ திகதி: 22/08/2026
⏰ நேரம்:8.00 PM
📌 ZOOM இனூடாக

👨‍🏫 வளவாளர் :
AG FASMIL (SLEAS)
Deputy Director of Education, Eastern Province

இத்துறைகள் தொடர்பான முழுமையான விளக்கங்கள், பரீட்சை முறை, தகைமைகள் மற்றும் தயாராகும் வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு.

தவறாது நீங்களும் கலந்துகொள்ள கீழுள்ள Google form இனை பூர்ததி செய்வதன் மூலம் WhatsApp குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 👇🏻👇🏻

🔗 https://forms.gle/RFGL29BGSRXNLPuB6
______________________________________
Design: Samar Sikkanthar
Caption: Reeza Ilmy

இன்றைய இளைஞர்களின் சிந்தனைகள், திறமைகள், அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் நாளைய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக ...
12/08/2026

இன்றைய இளைஞர்களின் சிந்தனைகள், திறமைகள், அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் நாளைய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமையவும்,புதிய சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு,புதிய வாய்ப்புகளைப் பொறுப்புடன் பயன்படுத்தி சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனளிக்கும் தலைமுறையாக இளைஞர்கள் உயரவும்,சர்வதேச இளைஞர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வுறுகிறது - அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுனர் சங்கம்.
______________________________________
Design: Safnan Ahamed
Caption: Rauftheen F Sheeba

பல நாட்களின் உழைப்பு…பல கனவுகளின் எதிர்பார்ப்பு…அனைத்தும் வெற்றியாக மலரும் தருணம் இது.க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவ...
09/08/2026

பல நாட்களின் உழைப்பு…
பல கனவுகளின் எதிர்பார்ப்பு…
அனைத்தும் வெற்றியாக மலரும் தருணம் இது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும், உங்கள் அயராத உழைப்பு சிறந்த பெறுபேறுகளாக மலர இறைவனைப் பிரார்த்தித்து, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.📚

தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; வெற்றியை வசப்படுத்துங்கள்! -
அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுனர் சங்கம்
______________________________________
Design: Dilshath Maryam
Caption: Rauftheen F Sheeba

இவ்வருடம் தரம் 5 புலைமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும்;நீங்கள் இதுவரை மேற்கொண்ட கடின உழைப...
08/08/2026

இவ்வருடம் தரம் 5 புலைமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும்;
நீங்கள் இதுவரை மேற்கொண்ட கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்களின் சிறந்த பெறுபேறுகளாக மலர இறைவனை பிராத்தித்து பரீட்சையினை சிறப்பாக எதிர்கொள்ள வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மனமகிழ்கிறது - அக்கரைப்பற்று இளமானிப் பட்டப் பயிலுனர் சங்கம்
______________________________________
Design: Nizam Farwin
Caption: Reeza Ilmy

புதிய தலைமைக்கு எமது வாழ்த்துக்கள்!அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுனர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள R. Lafry A...
05/08/2026

புதிய தலைமைக்கு எமது வாழ்த்துக்கள்!

அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுனர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள R. Lafry Ahamed அவர்களுக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களின் தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வையின் வழிநடத்தலில், சங்கம் அதன் உயரிய இலக்குகளை நோக்கி மேலும் பல முன்னேற்றங்களையும் அர்த்தமுள்ள சாதனைகளையும் எட்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

தங்களின் தலைமைப் பயணம் சிறப்புற அமையவும், கல்வி, மற்றும் ஆளுமை வளர்ச்சியின் ஊடாக மாணவர் சமூகத்திற்கு சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் மனமார வாழ்த்தி வரவேற்கின்றோம்.

-அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுனர் சங்கம்

நன்றியுணர்வோடு ஒரு தலைமைப் பயணத்தைப் போற்றுகிறோம். அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுநர் சங்கத்தின் முன்னாள் தலைவராகப் ப...
05/08/2026

நன்றியுணர்வோடு ஒரு தலைமைப் பயணத்தைப் போற்றுகிறோம்.

அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுநர் சங்கத்தின் முன்னாள் தலைவராகப் பணியாற்றிய AR. முன்சிப் அஹ்மத் அவர்களின் சிறந்த தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் சங்கத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய பெறுமதிமிக்க பங்களிப்புகளுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உயர்கல்வி மற்றும் தொழில்முறை இலக்குகளை நோக்கி தனது அடுத்த கட்டப் பயணத்தைத் தொடரும் அவரின் தீர்மானத்தை மதிப்பதோடு, அவரது கல்வி, தொழில் மற்றும் வாழ்வின் அனைத்து துறைகளிலும் தொடர்ந்தும் வெற்றிகள் கிட்ட எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறது அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுனர் சங்கம்.

-அக்கரைப்பற்று இளமானிப்பட்டப் பயிலுனர் சங்கம்

Address

Main Street
Akkaraipattu
32400

Telephone

+94760661366

Alerts

Be the first to know and let us send you an email when Undergraduates Association Akkaraipattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Undergraduates Association Akkaraipattu:

Shortcuts

Share