Samsul Uloom Vidyalaya

Samsul Uloom Vidyalaya

Share

Samsul Uloom Vidyalaya

Photos from Samsul Uloom Vidyalaya's post 06/03/2024

பாடசாலையில் இடம்பெற்ற வித்தியாரம்பம் நிகழ்வு

-Admin

Photos from Samsul Uloom Vidyalaya's post 02/07/2022

#மகிழ்ச்சிகரன_கற்றல்_நிகழ்வு

ஆரம்பநிலை 1 இருந்து 2 க்கு செல்லும் போது தரம் 03 வகுப்பு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படும் மகிழ்ச்சிகரமான கற்றல் நிகழ்வு வகுப்பாசிரியர் A.L.Jumani யின் நெறிப்படுத்தலில் 30.06.2022 வியாழன் அன்று அதிபர் MIM.Sameem தலமையில் இடம்பெற்றது இதில்
#மாணவர்களின்_ஆக்கங்கள்_கண்காட்சி
#மாணவர்களின்_கலை_நிகழ்வு
#பாரம்பரிய_உணவுப்_பரிமாற்றம் ஆகிய இடம்பெற்றது இதில்

பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் A.M.Rahmathulla அவர்களும்

விசேட அதிதிகளாக
A.S.Ahamed Kiyas - DDE
M.M.Sithy Fathima - DDE
A.L.Faiz - ADE
AMM.Jahfer - ISA
M.A.Thahir - ISA
S.L.Mansoor - ISA
MACM.Juhais - ISA
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

01/10/2021

இன்றைய நாளில் சிறுவர் தினத்தை கொண்டாடும் அனைத்து சிறுவர்களுக்கும் எமது பாடசாலை சார்பான
#சிறுவர்_தின_வாழ்த்துக்கள்

Photos from Samsul Uloom Vidyalaya's post 15/11/2020

அல்ஹம்துலில்லாஹ் ஐந்து வருடங்களின் பின் எமது பாடசாலை மீண்டும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அடைவினை கண்டுள்ளது

எல்லாப்புகளும் அல்லாவுக்கே

Photos from Samsul Uloom Vidyalaya's post 21/08/2020

#இதயம்_கனிந்த_முஹர்ரம்_புது_வருட_வாழ்த்துக்கள்

இன்று எமது பாடசாலையில் அதிபர் தலைமையில் இடம் பெற்ற முஹர்ரம் புது வருட நிகழ்வில் மௌலவி பாரீஸ் அவர்களின் சிறப்பு சொற்பொழிவும்
விசேட அதிதிகளாக
A.M.M. ஜௌபர் (DDE)
M.A.C.M.ஜுஹைஸ் (ISA)
M.M.சாஹிர் (ISA)
A.L. பாயிஸ் (SSDP Coordinator)
மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்ததோடு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டனர்.

Photos from Samsul Uloom Vidyalaya's post 11/06/2020

தரம் 05 மாணவர்களின் பெற்றோர்களுடன் மாணவர்களின் கற்றல் மீளாய்வு சம்மந்தமான கலந்துரையாடலும் அவர்களினால் பாடசாலை சுற்றுச்சூழல் சிரமதானமும் இன்று காலை இடம் பெற்றது

16/05/2020

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் – கல்வி அமைச்சின் முழுமையான தீர்மானம் இதோ!
பாடசாலைகளை விரைவில் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான உறுதியான திகதியொன்று தீர்மானிக்கப்படாவிட்டாலும் அதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது.


இதற்காக கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து வழிகாட்டல்களை வழங்கியுள்ளன.

இந்த வழிகாட்டல்களின் அடிப்படையில் மாகாண மட்ட கலந்துரையாடல்களை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது.


அத்துடன், நான்கு கட்டங்களில் பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்டம் 01 –

மாகாண மட்ட நிறுவனங்களுடன் இணைந்து பெற்றோரின் பங்களிப்புடன் பாடசாலைகளில் தொற்றுநீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இதன் பின்னர் சுகாதார அமைச்சின் வழிகாட்டலின் படி நான்கு நாட்கள் பாடசாலை மூடி வைக்கப்படும்.

கட்டம் 02 –

கல்விசாரா ஊழியர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலைக்கு வருகை தர வேண்டும்.

கட்டம் 03 –

உயர்தர மாணவர்கள் மற்றும் சாதாரண தர மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தர வேண்டும்.

கட்டம் 04 –

சிறுவர்கள் பாடசாலைக்கு வர வேண்டும்

மேலதிக வழிகாட்டல்கள்:

முதல் வாரம் பாடசாலை ஆசிரியர்களும் அதிபரும் மாத்திரம் வருகை தந்து பாட அட்டவணையை தீர்மானிக்க வேண்டும்.
ஒரே வகுப்பில் 52 பேர் காணப்பட முடியாது. சமூக இடைவெளி பேணப்பட வேண்டும். சிறுவர்கள் தற்போதைக்கு பாடசாலைக்கு வரமாட்டார்கள் என்பதால் அதற்கு ஏற்றவாறு வகுப்புகளை பயன்படுத்தக் கூடிய வகையில் பாட அட்டவணைகளை தீர்மானிக்கலாம்.

ஆசிரியர்கள் அனைவரும் அந்த வாரம் பாடசாலைக்கு வருவார்கள். அவர்கள் இந்த பாட அட்டவணையை தயாரிப்பார்கள். அதன் பின்னர் அடுத்த வாரம் உயர்தர மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்படுவார்கள்.

பாடசாலை இடைவேளை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்பட மாட்டாது.
கட்டம் கட்டமாகவே பாடசாலை மாணவர்களுக்கான இடைவேளை வழங்கப்படும்.

தேவைப்பட்டால் வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலையை நடத்த முடியும்.
ஆனால் ஆசிரியர்களோ, மாணவர்களோ ஏழு நாளும் வர வேண்டியதில்லை.

வாரத்தின் நான்கு நாட்கள் மாத்திரம் வருகை தரக்கூடிய அடிப்படையில் பாட அட்டவணையை வடிவமைக்க முடியும்.

கைகழுவும் நீர்க்குழாய்களை பொருத்துதல்
கையால் திறக்கக்கூடிய வகையில் அல்லாமல் காலால் அழுத்தி திறக்கக் கூடிய வகையிலான நீர்க்குழாய்கள் பொருத்தப்படும்.

இது அரசாங்கத்தின் செலவில் மேற்கொள்ளப்படும்.

50 மாணவர்கள் உள்ள பாடசாலைக்கு ஒன்று – 200 மாணவர்கள் உள்ள பாடசாலைக்கு இரண்டு என்ற வகையில் தீர்மானிக்கப்படும்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ படுக்கை (அம்பியூலன்ஸ் படுக்கை) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடல் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் காணப்படும் பாடசாலைகளில் 50 வீதத்துக்கும் அதிகமான பாடசாலைகளின் மொத்த மாணவர் எண்ணிக்கை 200க்கும் குறைவானவை.
இவை பெரும்பாலும் கஷ்டப் பிரதேச பாடசாலைகள்.

இவற்றை முழுமையாக ஆரம்பிக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்பட்டால் அது குறித்தும் ஆராயப்படும்.

இறுதியாக, மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்த பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Photos from Samsul Uloom Vidyalaya's post 04/05/2020







03/05/2020
Want your school to be the top-listed School/college in Akkaraipattu?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Beach Road
Akkaraipattu