Afrith Physics

Afrith Physics க.பொ.த உயர்தர பௌதிகவியல் பல்தேர்வு வி?

G.C.E A/L 2001 Physics MCQ 35, 39, 40https://youtu.be/NwHYs20qHp4I hope the Video Quality and Lighting is much better in...
02/06/2021

G.C.E A/L 2001 Physics MCQ 35, 39, 40

https://youtu.be/NwHYs20qHp4

I hope the Video Quality and Lighting is much better in this video compared to my previous videos. Get maximum use of it. Next video will be uploaded soon Insha Allaah.

Next Video will be uploaded soon

14/05/2021

May Almighty accept your good deeds and ease the suffering of all people around the world. Eid Mubarak to you and your family🌙

SR Afrith Ahmed

02/05/2021

இன்று முதல் விளக்கவுரைகள் video வடிவில் பதிவேற்றம் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

'AC என்னத்துக்கு பாவிக்கிர புள்ள'Paper class ஒன்று செய்ய சென்ற இடத்தில் மாணவர்களிடம் நான் கேட்ட வினா.'றூம கூழாக்குறதுக்க...
22/04/2021

'AC என்னத்துக்கு பாவிக்கிர புள்ள'

Paper class ஒன்று செய்ய சென்ற இடத்தில் மாணவர்களிடம் நான் கேட்ட வினா.

'றூம கூழாக்குறதுக்கு sir'

இந்த வினாவுக்கு பல மாணவர்களிடம் நான் தெளிவான பதிலை பெற்றதில்லை. ஆனால் பாடப்பரப்போடு பின்னிப்பிணைந்த ஒரு சாதனம்தான் இந்த வளிப்பதனாக்கி எனும் AC. இலங்கை எனும் இடை வெப்ப வலய நாட்டில் பிறந்ததாலோ என்னவோ AC என்றால் குளிரவைத்தல் என்று பதிந்துவிட்டது. அதுவும் ஒரு தொழிற்பாடே தவிர அது மாத்திரம் தான் இந்த வளிப்பதனாக்கியின் தொழிற்பாடு என்று கூறுவது தவறு.

ஒரு வளிப்பதனாக்கி இரண்டு பிரதான தொழிற்பாட்டை புரிகின்றது. ஒன்று வெப்பமான அறையில் குளிரான வளியை செலுத்தி அறையை குளிரவைத்தல். இன்னொன்று குளிரான அறையில் வெப்பமான வளியை செலுத்தி அறையை வெப்பமாக்கல். வளிப்பதனாக்கியினுள் இந்த செயன்முறைகள் எவ்வாறு நிகழ்கின்றது எனப்பார்ப்போம்.

முதலில் குறித்த வெப்பநிலையில் உள்ள அறையில் அதை விட குளிரான வளியை செலுத்துதல் பற்றி பார்ப்போம். இங்கு சூழலில் இருந்து குறித்த வீதத்தில் வளியானது பதனாக்கியினுள் உள்வாங்கப்படுகின்றது. அவ்வாறு பெறப்பட்ட வளியானது மாசகற்றப்பட்டு (filter) குளிர்விக்கப்படுகின்றது. இங்கு குளிர்விக்கப்படும் வளியானது ஏற்கனவே ஒரு குறித்த அளவு நீராவியை கொண்டிருக்கும். ஆகவே அதன் பனிபடுநிலையிலும் பார்க்க குறைவான வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படும் போது அதிலுள்ள நீராவியானது ஒடுங்க ஆரம்பிக்கும். அவ்வாறு ஒடுங்கும் நீராவியானது பதனாக்கி மூலமாக அகற்றப்படுகின்றது. (dehumidification)
பின்னர் இந்த வழியே உங்களின் அறைக்கு செலுத்தப்படுகின்றது. ஒரு வேளை இந்த வளி dehumidification எனும் தொழிற்பாட்டிற்கு உட்படாவிட்டால் அறையில் உட்செலுத்தப்படும் குறித்த வளியானது நிரம்பலாவியுடன் அறைக்குள் நுழையும். ஒரு கட்டத்தில் உங்கள் அறையை அதன் பனிப்படுநிலையை விட நீங்கள் குறைக்க எத்தனிக்கும் போது. உங்களின் அறையில் சுவர் ஓரங்களில் ஆங்காங்கே நீர் படியத்துவங்கும்.

ஆகவே முதலாம் வகை வளிப்பதனதாக்கியில் குளிரவைத்தல் எந்த அளவு ஒரு முக்கியமான தொழிற்பாடோ அதே அளவு முக்கியமான தொழிற்பாடு "நீராவி அகற்றுதல்" (dehumidification) உம் ஆகும்.

இரண்டாவது வகை வளிப்பதனாக்கி குளிர்ந்த இடத்தில் சூடான வளியை செலுத்துவதாகும். அது பற்றி இன்னொரு விளக்கவுரையில் பார்ப்போம்.

இந்த விளக்கவுரை விளங்க வேண்டுமனின் தனி ஈரப்பதன், சாரீரப்பதன், பனிபடுநிலை போன்ற பாடங்களின் அறிவு அவசியம். அதைப்பற்றி நான் விளக்கவில்லை. அவை விரிவாக கற்பிக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான பகுதி என்பதால் சொற்களாக எழுதுவது சாத்தியமில்லை. ஆகவே இந்த விளக்கவுரையை படிக்கும் மாணவர்கள் ஈரப்பதனியல் பற்றி முன்கூட்டி படித்துக்கொள்ளுங்கள்.

மற்றுமொரு விளக்கவுரையுடன் சந்திப்போம்...

SR Afrith Ahmed (B.Sc) Eng (Hons) (R)
UOP

2000 Question 50பல்தேர்வு வினாக்களை பாதைப்பயணங்களுடன் மூன்று வகையாக ஒப்பிடலாம்.1) கரடு முரடே இல்லாத சீரான பாதையில் பயணம்...
13/04/2021

2000 Question 50

பல்தேர்வு வினாக்களை பாதைப்பயணங்களுடன் மூன்று வகையாக ஒப்பிடலாம்.

1) கரடு முரடே இல்லாத சீரான பாதையில் பயணம் செய்வதை போன்று.
2) பாதை முழுவதும் கரடு முரடாகவும் ஆபத்தாகவும் இருப்பதை போன்று.
3) சீராக செல்லும் பாதையில் நம்மை அறியாமலே திடீர் ஆபத்து வருவதை போன்று.

இதில் இந்த வினா மூன்றாம் ரகம். இவ்வாறான வினாக்கள் இரண்டாம் ரகத்தை விட ஆபத்தானவை. இரண்டாம் வகையான வினாக்களை கையாளும் போது நம்முள் ஒரு நிதானம் இருக்கும்.ஆனால் இவ்வாறான 3ம் ரக வினாக்களை கையாளும் போது ஒரு நிதானம் இருப்பதில்லை இருக்கும் ஆபத்தை அறியாமல் பிழையான விடையில் கொண்டு போய் சேர்கின்றோம். சரி இப்போது வினாவுக்குள் செல்வோம்.

மிகவும் இலகுவான வினாவை போல் தோற்றமளிக்கின்றது. ஆரம்பத்தில் பொருளானது நீரினுள் அமிழ்ந்துள்ள ஆழத்தை h என்க. இப்போது நீரினுள் ஓய்விலிருக்கும் பொருளின் சமநிலைக்கு விசைகளை சமப்படுத்துவோம். நிலைக்குத்தாக இரண்டு விசைகள் மாத்திரமே உள்ளன. ஒன்று அதன் நிறை மற்றையது நீரினால் அதற்கு வழங்கப்படும் மேலுதைப்பு. ஆகவே பொருளின் நிறையை மேலுதைப்பு சமப்படுத்தினால் மாத்திரமே பொருளானது சமநிலையில் இருக்க முடியும். மேலுதைப்புக்கான தத்துவத்தை நாம் அறிவோம். (அமிழ்ந்துள்ள பகுதியின் கனவளவு*நீரின் அடர்த்தி*நீரின் ஈர்ப்பிலான ஆர்முடுகல்)
இப்போது அதை சமப்படுத்த h இற்கான ஒரு கோவை பெறப்படும். படத்தை பார்க்க.

இப்போது தொகுதி மேல்நோக்கி a என்ற ஆர்முடுகலுடன் ஆர்முடுகின்றது. அதாவது தொகுதியிலுள்ள திரவம்,பாத்திரம்,துணிக்கை மூன்றும் ஆர்முடுகின்றது. நாம் துணிக்கக்கான ஆர்முடுகலை கருத்துவோம். துணிக்கைக்கு மேல்நோக்கி F=ma பாவிக்க வேண்டும்.
இப்போதும் இரண்டு விசைகள் தான் காணப்படுகின்றன. ஒன்று துணிக்கையின் நிறை. மற்றயது புதிய மேலுதைப்பு. ஆனால் இங்கு இரண்டும் சமனல்ல. ஏனெனில் மேல்நோக்கிய ஆர்முடுகல் உண்டு. ஆகவே மேல்நோக்கிய விளையுள் விசை வேண்டும். ஆகவே மேலுதைப்பு நிறையிலும் பார்க்க உயர்வாகும். சரி இப்போது பொருளானது நீரினுள் அமிழ்ந்துள்ள ஆழத்தை h' எனக்கொள்வோம். படத்தில் நிறுவியவாறு மேல்நோக்கிய துணிக்கையின் இயக்கத்திற்கு F=ma பாவிக்க u'=m(g+a) என்ற கோவை பெறப்படுகின்றது. இங்கு u' என்பது இயக்கத்திலுள்ள போது பொருளில் தாக்கும் மேலுதைப்பு விசையாகும். u' இற்கான கோவையை அமிழ்ந்துள்ள ஆழத்தின் சார்பாக உருவாக்கும் போது படத்தில் உள்ளவாறு இல்லாமல் g' இற்கு பதிலாக g ஐ பிரதியிட்டு விடுவோம். இங்கு தான் நம்மை அறியாமல் நாம் தவறுமிடம்.

திரவமானது ஆர்முடுகல் இயக்கத்தில் உள்ள போது அது உணரும் ஈர்ப்பிலான ஆர்முடுகல் g ஆக இருக்க மாட்டாது. இதை ஒரு சிறிய உதாரணம் மூலம் விளக்குவதாயின் நாம் உயர்த்தி (lift) ஒன்றில் மேல்நோக்கி ஒரு ஆர்முடுகலுடன் இயங்கும் போது நம்முள் மேலதிக ஈர்ப்பு ஒன்று உணரப்படும். இம்மேலதிக ஈர்ப்பானது உயர்த்தியின் ஆர்முடுகலிற்கு சமனாகவிருக்கும். இதே தத்துவம் தான் இங்கும் நடக்கின்றது. நமக்கு உணர்வுள்ளதால் அதை உணர்கின்றோம். திரவத்திற்கு பிரயோகப்படுத்துகின்றோம்.

எனவே இங்கு திரவம் மேல்நோக்கி வழங்கப்படுகின்ற a எனும் ஆர்முடுகல் மூலமாக ஒரு மேலதிக ஈர்ப்பை உணர்கின்றது. ஆகவே திரவத்தின் தோற்ற ஈர்ப்பிலான ஆர்முடுகல் g+a ஆகும். (படத்தை பார்க்க). ஆகவே h' இற்கான கோவையை சமப்படுத்த h=h'
அதாவது திரவம் அமிழும் அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது.

Answer 05

காவிகளுக்கான தோற்றப்பெறுமானம் சம்பந்தமான விளக்கங்கள் சற்று விரிவாக ஆராயப்பட வேண்டியது. இது சம்பந்தமாக இன்னொரு நாள் இன்னொரு வினாவில் இன்ஷா அல்லாஹ் அதை பற்றி ஆராய்வோம். இந்த வினாவை தீர்ப்பதற்கு மேலே விபரிக்கப்பட்டது போதுமானது.

இன்னும் ஒரு வினாவின் விளக்கவுரையுடன் சந்திப்போம்...

SR Afrith Ahmed (B.Sc) Eng (Hons) (R)
University of Peradeniya.

2016 Question 50இந்த வினா ஏன் 50 ஆவதாக வந்தது என்ற வினா இன்னும் என்னுள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. சாதாரணமாக ஒரு 50 ஆ...
09/04/2021

2016 Question 50

இந்த வினா ஏன் 50 ஆவதாக வந்தது என்ற வினா இன்னும் என்னுள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. சாதாரணமாக ஒரு 50 ஆம் வினா மாணவர்களின் பாடத்தின் மீதுள்ள தெளிவான அறிவை சோதனை செய்யக்கூடியவாறு இருக்கும். சாதாரணமாக இரண்டரை தொடக்கம் மூன்று நிமிடங்கள் வரை செய்ய இயலுமானவாறு இருக்கும். ஆனால் இங்கு கதையோ வேறு. சரி கேள்விக்குள் செல்வோம்.

வினாவொன்றை அணுகும் போது இடையிலே வரும் சிறு சிறு தரவுகளை வாசிக்கும் போதே குறித்து விடுங்கள். அவைதான் கேள்விக்கான ஆணி வேர். இங்கு வளித்தடை மற்றும் உராய்வு விசைகள் புறக்கணிக்கதக்கன எனத்தரப்பட்டுள்ளது. ஆகவே இங்கு சக்திக்காப்புத்தத்துவத்தை பயன்படுத்துமாறு உங்களுக்கு மறைமுகமாக அறிவுறுத்தப்படுகின்றது.

இங்கு நீங்கள் கீழ்நோக்கி எறியும் துணிக்கையானது அதே இடத்திற்கு மீண்டு வரும் போது அதே வேகத்தையே கொண்டிருக்கும். அதாவது பொறிமுறைச்சக்தி இழக்கப்படவில்லை. இது நீங்கள் பந்தொன்றை மேல்நோக்கி எறியும் போது வளித்தடை புறக்கணிக்கப்படுமிடத்து அதே வேகத்தில் உங்கள் கைகளை வந்தடைவதை ஒத்தது. ஆனால் இங்கு மீளியல் இழையை தந்து குழப்ப எத்தனித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் நீங்கள் எறியும் இயக்கசக்திதான் மீளியல் அழுத்த சக்தியாக மாறுகின்றது என்பதை மறவாதீர்கள். ஆகவே நீங்கள் கீழே எறியும் போதுள்ள அதே இயக்க சக்தி உங்கள் கைகளை வந்தடையும் போதும் காணப்படும். அதாவது அதே பருமனுள்ள வேகமே காணப்படும். குழம்ப வேண்டிய அவசியம் இல்லை.

அடுத்து y=0 இல் மீண்டு வந்த துணிக்கை மேல்நோக்கி எவ்வாறு இயங்கும் என்பதை கருத்துவோம். கீழே V° என்ற வேகத்தில் எறிந்த துணிக்கிய இப்போது மேல்நோக்கி அதே வேகத்தில் இயங்க ஆரம்பிக்கபோகின்றது. இப்போது ஒரு சிறு குழப்பம். அதாவது மேல்நோக்கி இயங்கும் துணிக்கை அதன் மீள்தன்மையை அடையுமா இல்லையா என்பதுதான்??

அது மேலே செல்லும் வேகம் V° இல் தங்கியுள்ளது. உதாரணமாக அது மேலே அதன் மீளியல் எல்லையை அடைய வேண்டுமெனின் அதன் இயற்கை நீளம் l° அடைய முதல் ஓய்வடையக்கூடாது. அதாவது V° ஆனது √2gl ஐ விடக்கூடவாக இருக்க வேண்டும். (படத்தில் நிறுவியுள்ளேன்). ஆனால் தரவின் படி V° ஆனது √2gl ஐ விடக்குறைவாக்கும். ஆகவே அது மீள்தன்மை எல்லையை அடையாது. y=0 இலுள்ள இயக்க சக்தியானது அழுத்த சக்தியாக மாத்திரமே சேமிக்கப்படும். மீளியல் சக்தியாக சேமிக்கப்படாது. அத்துடன் y ஆனது நிலைக்குத்தாக மேல்திசையில் நேர்ப்பெறுமானமாக அளக்கப்படுகின்றது ஆகவே படத்தில் விளக்கியவாறு சக்தியை சமப்படுத்த.....

Answer 05

இந்த வினாவை சக்திக்காப்பு தத்துவம் சம்பந்தமான தெளிவான அறிவு கொண்ட ஒரு மாணவன் அரை நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் தீர்க்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. So don't study the physics..Just live with it

மீண்டும் அடுத்தவொரு விளக்கவுரையில் சந்திப்போம்.

SR Afrith Ahmed (B.Sc) Eng (Hons) (R)
UOP

09/04/2021

இன்ஷா அல்லாஹ் இந்த பக்கத்தில் பௌதிகவியல் பல்தேர்வு வினாக்களின் விளக்கவுரைகள் மற்றும் பாடப்பரப்பு சார்ந்த விளக்கவுரைகள் தொடர்ச்சியாக எழுதப்படும் இன்ஷா அல்லாஹ்

Address

Akkaraipattu

Telephone

+94763245113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afrith Physics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category