Past Pupils Association - Agrapatana T.M.V

Past Pupils Association - Agrapatana T.M.V Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Past Pupils Association - Agrapatana T.M.V, School, Agrapatana.

🎉 Official Logo Launch Announcement! 🎉We are delighted to announce that the Official Logo of the N/Agarapatana TMV Past ...
13/11/2025

🎉 Official Logo Launch Announcement! 🎉

We are delighted to announce that the Official Logo of the N/Agarapatana TMV Past Pupils’ Association has been officially launched! 💫

This logo represents our unity, pride, and everlasting bond as former students of our beloved alma mater. It stands as a symbol of our shared memories, achievements, and commitment to continue supporting our school and future generations. 💪📚

Let’s carry this new identity forward with pride and continue to stay connected as one strong family! 🙌

29/09/2025

2013 O/L BATCH (FIVE STAR GROUP)

கண்முன்னே விரியும் மஞ்சள்ச் சுவர்கள்,
வகுப்பறை வாசலில் காத்திருந்த கோழிகள்.
சிறுசிறு புத்தகச் சுமைகளின் பாரம்,
மனசுக்குள் மட்டும் நூறு குறும்பு ஈரம்.

மணி அடித்தால் ஓடிவந்து முந்தும் கூட்டத்தில்,
சேட்டை செய்து சிரித்தோம் நண்பர்கள் தோட்டத்தில்.
அறிமுகம் இல்லாப் புதிய பாடத்தின் பக்கம்,
கவனம் எங்கோ, ஜன்னல் வழி விண்ணின் பக்கம்.

பின்பக்க இருக்கையில் தூங்கிய நண்பனின்
முகத்தில் மை தடவி மகிழ்ந்த நாட்கள் அவை.
பையில் மறைத்து வைத்த புளியங்காயும், உப்பும்,
ஆசிரியை கண்ணில் படாமல் உண்ட இன்பம்!

பென்சிலை உடைத்து, ரப்பரைத் திருடி
சண்டையிட்டுக் கைகோர்த்துக் கொண்டோம் மீண்டும்.

மதிய உணவை மாற்றிக் கொண்ட ஆனந்தம்,
இன்று நினைத்தாலும் இதயம் பொங்கும் வண்ணம்.
வெயில் காயும் விளையாட்டு மைதானத்தில்
சட்டைப் பட்டன் அறுந்த சண்டைகளும் உண்டு.

மறைந்திருந்து பயமுறுத்திய வேடிக்கையும்,
மறக்க முடியாத அந்த வெள்ளைச் சீருடையும்!
இன்று பெரியவர்களாகித் தேடினாலும் கிடைக்குமோ?

அந்த கவலையில்லாச் சிரிப்பும், கள்ளங்கபடமில்லா உள்ளமும். காலம் கரைந்தாலும், கல்வெட்டாய் மனதில் நிற்கும்,
பசுமையான பாடசாலை நாட்களின் பொக்கிஷம்.

2013 O/L Batch....
𝓚𝓳 𝓬𝓸𝓸𝓵

27/09/2025

அடுத்த மாதம் க பொ த பரீட்சை, பரீட்சையின் பின் பிரிந்து செல்ல போகும் அந்த குருவிக்கூட்டம்.

அதிபர் திரு நடராஜ் அவர்களின் தலைமையில் தினந்தோறும் நடைபெறும் காலை கூட்டம், வாரத்தில் ஒரு முறை பாடசாலை கீதத்தை பாடுவதற்காக முன்வரும் அந்த குருவிக்கூட்டம் கூடவே ஒரு பாடலிலே தனது பிரிவின் வழியினையும் கூறி சென்றது.

"பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்........"

இன்றும் பாடசாலை கட்டிடங்கள் இப்பாடலை மீள பாடிக்கொண்டே இருக்கின்றது...

2001 O/L Batch

27/09/2025

கவிதை

T. Pravawadharan (2013 O/L & 2016 A/L Batch)

மணிக்கூட்டின் ஓசை கேட்டால்
முகம் மலர்ந்த நாட்கள்...

காலணியில் மண் படிந்தாலும்
நட்பு மலர்ந்த பாதைகள்...

கரும்பலகையில் எழுதிய எழுத்துகள்
இன்று நினைவாகி நிற்கின்றன...

சின்ன சண்டைகள், சிரிப்புகள்,
பகிர்ந்த உணவின் இனிமைகள்...

வாழ்க்கை எங்கெங்கோ இழுத்துச் சென்றாலும்,
பள்ளிக்கூடம் என்றால்
இதயம் தழுவும் சொர்க்கம்!

27/09/2025

மறக்க முடியாத நிகழ்வுகள்.

Gajan (2016 A/L Batch)

நான் கஜன். 2014-2016 உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி பயின்று வந்தேன். எல்லோருக்கும் போல் எனக்கும் நிறைய மறக்க முடியாத தருணங்கள் இருந்தன. அதில் மிகவும் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றுள்ளது.

நான் முதல் வருடம் படிக்கும் வரை நன்றாக தான் இருந்தேன். இரண்டாம் வருடம் படிக்கும் போது கொஞ்சம் கொழுப்பு தலைக்கேறி பாடசாலைக்கு அடிக்கடி சமூகமளிக்க மாட்டேன்.

அன்றும் அப்படித்தான் நண்பணொருவனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து "மச்சா தாத்தா இறந்துட்டாரு. நா வர மாட்டே சொல்லிரு. " என்று கூறி விட்டு நான் ஊர் சுற்ற சென்று விட்டேன்.

எனது ஆண் நண்பர்கள் கஜனின் தாத்தா இறந்து விட்டதாகவும் அவனின் வீட்டிற்கு செல்ல விடுமுறை தருமாறும் கோரி கடிதத்தில் கையொப்பம் இட கூடவே பெண் தோழிகளும் கையொப்பமிட்டு அதிபரின் அனுமதியுடன் எங்களது வகுப்பாசிரியர் அவர்கள் என் வகுப்பு மாணவன் தானே நானும் வருகிறேன் என கூறி அனைவரும் ஊருக்கு வந்துவிட்டார்கள்.

அப்போது நான் ஊரிலேயே இல்லை. எனக்கு அழைப்பு விடுத்த நண்பர்கள் "மச்சா நாங்க உங்க ஊர்ல தா இருக்கோம் வந்து கூட்டிட்டு போ" என்று சொன்னார்கள்.

நானும் ஆறுதலாக வந்தேன். பெண் தோழிகளும் இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.
வகுப்பாசிரியரை அருகில் வரும் வரை அவரை காணவில்லை.

பிறகு செய்வதறியாது ஊரில் ஒரு தாத்தா இறந்திருந்தார் அவர் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டேன். ஊரில் உள்ள எல்லோரும் என்னை குருகுருவென பார்த்தார்கள்.

ஆசிரியர் எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்று விட்டார். நண்பர்கள் என்னோடு என் வீட்டுக்கே வந்து விட்டார்கள்.

அங்கு தான் திருப்பமே நடந்தது. ஆசிரியரின் காதில் யாரோ ஊதி விட்டுவிட்டார்கள் அவர் என் தாத்தா இல்லை என்பதை.

பிறகு என்ன நான் அடுத்த நாளும் பாடசாலை செல்லவில்லை. நண்பர்கள் அனைவரும் சென்று ஆசிரியரிடம் செமத்தியாக அடி வாங்கினார்களாம்.

இவை அனைத்தும் எனக்கு தெரியாது. மூன்று நாட்களுக்கு பிறகு நான் பாடசாலைக்கு சென்ற போது காலைப் பொதுக்கூட்டத்தில் வைத்து என் பெயரை நார் நாராக கிழித்து தொங்க விட்டு விட்டார்கள்.

எனக்காக அடி வாங்கிய என் நண்பர்களையும் அந்த நிகழ்வையும் ஒரு காலமும் மறக்க முடியாது.

காலம் பொல்லாதது அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கும். சிரித்த நாட்களை நினைத்து அழுக வைக்கும்.

நன்றி
2014-2016 உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கு மிக்க நன்றி

26/09/2025

கவிதை

V. Vidurshika (2018 O/L Batch)

குழந்தை நாட்களின் முதல் அடிகள்,
கற்றல் வழியில் பதித்த தடங்கள்,
நண்பர்கள் சிரிப்பும், சண்டைச் சலிப்பும்,
என் மனதிலோ இன்னும் இனிய ஓசைகள்.

ஆசிரியர் சொன்ன ஓர் சொல்லே கூட,
வாழ்வின் பாதை மாற்றிய விதி.
சிறு கனவுகள் பறக்கும் சிறகாய்,
பாடசாலை எனை உயர்த்தி நிறுத்தியது.

நாள்கள் நகர்ந்தும் நினைவுகள் வாழ்கின்றன,
நாட்கள் மாறியும் நட்புகள் நிலைக்கின்றன.
என்றும் மறக்க முடியாத தெய்வீக தளம்,
என் பள்ளி – என் வாழ்வின் பொற்கொடி.

குறிப்பு:
எமது பாடசாலையின் பழைய மாணவர்களே, இதுபோன்ற நிகழ்வுகளை அல்லது பாடசாலை பற்றிய கவிதைகள் கட்டுரைகளை உங்களது பெயருடன் கல்விக்கற்ற ஆண்டுடன் எழுதி அனுப்புங்கள் இந்த முகப்புத்தகத்தில் பதிவிடுவோம்.

26/09/2025

கவிதை.

K. Hariharan (2018 O/L Batch)

அன்னையவள் கரம் மாற்றி
இன்னொரு அன்னை மடியில் தவழ விட்ட
முதல் நாள்
தெரியவில்லை ....
11 வருடங்கள் இவளின் மடியில்
வளர போகிறேன் என

என் அன்னை அருளிய அறிவு - இன்று
அவளை பற்றியே கவி புரிய - என்னை உருவாக்கியது எத்தனை எண்ணங்கள்
என்னவள் என கருவத்தோடு போட்டியிட்ட பல்வேறு நினைவுகள்

நிதம் என் தாயை கடந்து செல்ல- மனத
தோன்றிடும் ஒரு எண்ணம்
மீண்டும் ஒருமுறை பிறக்க மாட்டோமா? - இவள்
மடியில் தவழ மாட்டோமா என
அன்னையே உன் பிள்ளை உன்னை பற்றி எழுதிய வரிகளில் கூட
நீ ஊட்டிய அறிவின் வெளிப்பாடு

என்றும் உனக்காக நான்.

குறிப்பு:
எமது பாடசாலையின் பழைய மாணவர்களே, இதுபோன்ற நிகழ்வுகளை அல்லது பாடசாலை பற்றிய கவிதைகள் கட்டுரைகளை உங்களது பெயருடன் கல்விக்கற்ற ஆண்டுடன் எழுதி அனுப்புங்கள் இந்த முகப்புத்தகத்தில் பதிவிடுவோம்.

Address

Agrapatana
22094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Past Pupils Association - Agrapatana T.M.V posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category