14/04/2026
அட்டாளைச்சேனை அக்/அந்-நூர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வு 2026.04.13ஆந் திகதி திங்கட்கிழமை அமைப்பின் செயலாளர் ஐ.எம் வாஜித் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் அமைப்பின் தலைவரும்,பாடசாலையின் அதிபருமான என்.கே.எம்.மிஸ்வர் பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினரும், ஊடகவியலாளருமான றிசாட் ஏ காதர், அல் - மினா பாடசாலையின் அதிபரும்,YMMA அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அறபா வட்டார அமைப்பாளரும்,மத்திய குழுவின் செயலாளரும்,தொழிளதிபருமான சமூன் சபான், J420 நிறுவனத்தின் உரிமையாளர் ஜனுஸ்,AR cake நிறுவனத்தின் உரிமையாளர் ஆர். யஹியா ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
இச்சுற்றுத்தொடரில் சம்பியனாக தெரிவான 2018ம் ஆண்டு சாதாரண தர மாணவர்களுக்கு 15000/-பணப்பரிசும்,வெற்றிக்கிண்ணமும் வழப்பட்டது, இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட 2004ம் ஆண்டு அணியினருக்கு 10000/- பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது. 03,04ம் இடங்களை பெற்ற அணியினருக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கிவைக்கப்பட்டது நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து கழகங்களுக்கும் பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.