அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம்

  • Home
  • Kuwait
  • Hawalli
  • அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம்

அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம் இது குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமாகும்

குவைத்தில் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு இலவசப் பள்ளிப் பைகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்ப...
04/09/2026

குவைத்தில் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களின் குழந்தைகளுக்கு இலவசப் பள்ளிப் பைகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு!

குவைத்தில் புதிய கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு, ஏழை மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் இலவசப் பள்ளிப் பைகள் (School Bags) மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்பப் படிவம் (Online Form) தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

https://www.facebook.com/share/p/1JzUmgQJ7M/

இத்திட்டத்தின் கீழ் பள்ளிச் செல்லும் குழந்தைகளைக் கொண்ட தகுதியான குடும்பங்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத் தகுதிகள் & நிபந்தனைகள்:

குறைந்த வருவாய் பிரிவு: குறைந்த ஊதியம் பெறக்கூடிய பெற்றோர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

செல்லுபடியாகும் சிவில் ஐடி (Civil ID): விண்ணப்பிக்கும் பெற்றோர் மற்றும் குழந்தைகள் அனைவரது சிவில் ஐடி-யும் புதுப்பிக்கப்பட்டு, செல்லுபடியாகும் (Valid) நிலையில் இருக்க வேண்டும்.

தகவல் சரிபார்ப்பு: படிவத்தில் சமர்ப்பிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பின்னரே தகுதியான பயனாளிகளுக்குப் பள்ளிப் பைகள் வழங்கப்படும்.

விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டிய விவரங்கள்:

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது கீழ்க்கண்ட விவரங்களைத் துல்லியமாக வழங்க வேண்டும்:

பெற்றோர் விவரங்கள்: தந்தை மற்றும் தாயாரின் முழுப் பெயர்.

அடையாளச் சான்று: பெற்றோர் மற்றும் பள்ளிச் செல்லும் அனைத்துக் குழந்தைகளின் சிவில் ஐடி (Civil ID) எண்கள்.

சமூக நிலை: குடும்பத்தின் நிலை (திருமணமானவர் / விதவை / விவாகரத்து பெற்றவர் போன்றவை).

தொடர்பு எண்கள்: கைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) வசதி உள்ள எண்.

குடும்ப விவரங்கள்: தேசியம் (Nationality) மற்றும் குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை.

மாணவர்கள் விவரம்: பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை (தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி வாரியாக).

முகவரி: தற்போது வசிக்கும் பகுதி மற்றும் சிவில் ஐடியில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ முகவரி.

கூடுதல் தேவைகள்: ஏதேனும் சிறப்புத் தேவைகள் அல்லது குறிப்புகள் இருப்பின் அதைக் குறிப்பிடலாம்.

விண்ணப்பிப்பதற்கான இணைப்பு (Link): தகுதியும் தேவையும் உள்ள குவைத் வாழ் தமிழர்கள், கீழே உள்ள கூகுள் ஃபார்ம் இணைப்பின் மூலம் உடனடியாகத் தங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

🔗 ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBcBKtrej47o6f-AQhzQzXpdT4zmq5JMZm1fvlMvy5qsoa8Q/viewform

குறிப்பு: போதிய சான்றுகள் மற்றும் சரியான விவரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் என்பதால், படிவத்தைச் சமர்ப்பிக்கும் முன் தகவல்களைச் சரிபார்த்துக் கொள்ளவும்.

தகவல்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

வஃபாத் செய்திகுவைத் தமிழ் இஸ்லாமிச் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியும், தற்போதைய தாயக பிரதிநிதியுமான *பெரகம்பி முபாரக் அலி...
02/09/2026

வஃபாத் செய்தி

குவைத் தமிழ் இஸ்லாமிச் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியும், தற்போதைய தாயக பிரதிநிதியுமான *பெரகம்பி முபாரக் அலி* (மர்ஹூம் சிராஜுத்தீன் அவர்களின் மச்சான்)
அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் நாளை பெரம்பலூரில் நல்லடக்கம் செய்யப்படும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அவர்களுக்காக அனைவரும் துஆ செய்யவும்.

*K-Tic*

தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களில் 24/7 'உடான் யாத்ரி கஃபே' அமைக்க கோரிக்கை: வளைகுடா வாழ் தமிழ் தொழிலாளர்கள் பயன...
30/08/2026

தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களில் 24/7 'உடான் யாத்ரி கஃபே' அமைக்க கோரிக்கை: வளைகுடா வாழ் தமிழ் தொழிலாளர்கள் பயன்பெற குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வலியுறுத்தல்!

தமிழகத்தில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களின் புறப்பாடு தளங்களிலும் (International Departures) குறைந்த விலையிலான 24/7 'உடான் யாத்ரி கஃபே' (UDAN Yatri Cafe) உணவகங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கும் (AAI) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) கோரிக்கை விடுத்துள்ளது.

https://www.facebook.com/share/p/19T38kNXqB/

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
"விமான நிலையங்களில் சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் குடிநீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கும் 'உடான் யாத்ரி கஃபே' திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இருப்பினும், இந்த வசதி தற்போது உள்நாட்டு முனையங்களில் (Domestic Terminals) மட்டுமே செயல்பட்டு வருகிறது.

சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த உழைக்கும் தொழிலாளர்கள் வளைகுடா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்கின்றனர். பன்னாட்டு முனையங்களில் உள்ள உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை மிக அதிகமாக இருப்பதால், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பயணம் செய்யும் தொழிலாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

எனவே, வெளிநாடு வாழ் தமிழ் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பின்வரும் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்:

* பன்னாட்டு முனையங்களில் அமைத்தல்: சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களின் புறப்பாடு மற்றும் வருகை தளங்களில் 'உடான் யாத்ரி கஃபே' உணவகங்களை உடனடியாக அமைக்க வேண்டும்.

* 24/7 இயக்கம்: வளைகுடா நாடுகளுக்கான பெரும்பாலான விமானங்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களிலேயே இயங்குவதால், இந்த உணவகங்கள் 24 மணி நேரமும் (24/7) செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* குறைந்த விலை அத்தியாவசிய பொருட்கள்: குடிநீர் பாட்டில் (₹10), தேநீர் (₹10), காபி (₹20) மற்றும் எளிய ஆரோக்கியமான சிற்றுண்டிகள் தங்கு தடையின்றி நிர்ணயிக்கப்பட்ட குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் உழைக்கும் தொழிலாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய அரசும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் உடனடியாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்."

- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482 | [email protected] | அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம் |www.youtube.com/Ktic12 | www.x.com/q8tic

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்22ம் ஆண்டு மாபெரும் சீரத்துன் நபி / மீலாது பெருவிழாஇன்ஷா அல்லாஹ்....
24/08/2026

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்

22ம் ஆண்டு மாபெரும் சீரத்துன் நபி / மீலாது பெருவிழா

இன்ஷா அல்லாஹ்....

28.08.2026 வெள்ளி நண்பகல் 11:50 மணி முதல்... ஜும்ஆ ஃகுத்பாவுடன்

இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ பள்ளிவாசல், ஹயா வ நுவைர் மஸ்ஜித், கத்ஆ 1, ஸ்டோர் ஏரியா, அர்திய்யா, குவைத்
(5வது ரிங் ரோடு & ஷாரா 601 வழியாக உள்ளே வர வேண்டும்)

https://www.facebook.com/share/p/1DgZeoofmW/

தலைமை: அல்ஹாஜ் H. முஹம்மது நாஸர், தலைவர், K-Tic

ஃகுத்பா பேருரை: மவ்லவீ ஹாஃபிழ் காரீ ஜ. ஜியாவுத்தீன் ஃபாஜில் பாகவீ, இணைச் செயலாளர், K-Tic | ஆசிரியர், அல் ஃபத்ஹ் மதரஸா, குவைத்

சிறப்புரை:
மவ்லவீ M.S. முஹம்மது ஜலீல் ரப்பானி ஃபாஜில் மன்பயீ, துணைத் தலைவர், K-Tic

பொறியாளர் S.S. முஹம்மது அபூ ஸாலிஹ் B.E., MBA, செயலாளர், K-Tic

நன்றியுரை: மவ்லவீ S. ஹாஜா முயீனுத்தீன் உலவி, துணைத் தலைவர், K-Tic

சிறப்பு துஆ & ஸலவாத் மஜ்லிஸுடன் விழா இனிதே நிறைவுபெறும்

நேரலையில் காண... www.youtube.com/Ktic12 | www.facebook/ktictraining

_K-Ticன் புதிய தமிழ் பள்ளிவாசல் வருவதற்கு இதை 'கிளிக்' செய்யவும்... https://maps.app.goo.gl/85bfByQXnas4MbRPA

அல்லது இணைக்கப்பட்டுள்ள தகவலில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

மதிய உணவு | பெண்களுக்கு தனியிடம் வசதி | வாகன நிறுத்துமிடம் உண்டு

பேருந்து வழித்தடங்கள்: 59, 59X, 99 & 105A

அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்க! அன்பர்களையும் கலந்து கொள்ள அழைத்து வருக!! அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!! அல்லாஹ்வின் அருள்மழையில் நனைக!!!!

நம் உயிரினும் மேலான உத்தம நபியை ஈருலகிலும் தங்கள் உயிரை விட நேசிக்கும் அனைவருக்கும் இனிய மீலாது நல்வாழ்த்துகள்...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482 | [email protected]

21/08/2026

முஃமின்களின் தலைவராக உமர் (ரலியல்லாஹு அன்ஹு).

மெளலவி எஸ். ஹாஜா முயீனுத்தீன் உலவி
21.08.2026

21/08/2026

அன்றாட வாழ்வில் இஸ்லாம்...!
மௌலவி ஜெ. ஜியாவுதீன் ஃபாஜில் பாகவி
21.08.2026

குவைத் இந்திய தூதரகத்தில் நடைபெற்ற 80 ஆவது சுதந்திர தின விழாவில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலீல...
15/08/2026

குவைத் இந்திய தூதரகத்தில் நடைபெற்ற 80 ஆவது சுதந்திர தின விழாவில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலீல் பாகவீ, முதன்மை துணை தலைவர் நிஜாமுத்தீன் பாகவி மற்றும் கல்விக்குழு செயலாளர் முனைவர் சபீர் ஆகியோர் பங்கேற்றனர்.

14/08/2026

இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்ச்சி
மௌலவி எம்.எஸ்.முஹம்மது ஜலீல் ரப்பானி
14.08.2026

14/08/2026

ஜும்ஆ ஃகுத்பா பேருரை...
மெளலவி எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ
14.08.2026

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்ச்சிஇன்ஷா அல்லாஹ்....14.08.20...
13/08/2026

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும்

இந்தியாவின் 80வது சுதந்திர தின நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்....

14.08.2026 வெள்ளி நண்பகல் 11:50 மணி முதல்... ஜும்ஆ ஃகுத்பாவுடன்

இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ பள்ளிவாசல், ஹயா வ நுவைர் மஸ்ஜித், கத்ஆ 1, ஸ்டோர் ஏரியா, அர்திய்யா, குவைத்
(5வது ரிங் ரோடு & ஷாரா 601 வழியாக உள்ளே வர வேண்டும்)

https://www.facebook.com/share/p/1BgsQZpucE/

சிறப்புரை: K-Tic ஆலிம் பெருமக்கள்

நேரலையில் காண... www.youtube.com/Ktic12 | www.facebook/ktictraining

_K-Ticன் புதிய தமிழ் பள்ளிவாசல் வருவதற்கு இதை 'கிளிக்' செய்யவும்... https://maps.app.goo.gl/85bfByQXnas4MbRPA

அல்லது இணைக்கப்பட்டுள்ள தகவலில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

பெண்களுக்கு தனியிட வசதி | வாகன நிறுத்தும் இட வசதி

பேருந்து வழித்தடங்கள்: 59, 59X, 99 & 105A

அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்க! அன்பர்களையும் கலந்து கொள்ள அழைத்து வருக!! அளவிலா அறிவமுதம் (பெ)பருக!!! அல்லாஹ்வின் அருள்மழையில் நனைக!!!!

உலகில் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482 | [email protected]

Address

Hawalli

Opening Hours

Monday 18:00 - 20:00
Tuesday 18:00 - 20:00
Wednesday 18:00 - 20:00
Saturday 18:00 - 20:00
Sunday 18:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையம்:

Shortcuts

Share