Thiru Kolanjiappar Government Arts College

Thiru Kolanjiappar Government Arts College Thiru Kolanjiappar Government Arts College(TKGA College), Vriddhachalam was started in the year 1966 as a Pre-University College. Secured NAAC B+ level.

Facebook group:
https://www.facebook.com/groups/TkgaCollege.Vriddhachalam/

Thamizh wikipedia page about TKGA College: http://ta.wikipedia.org/s/5ro

முண்டாசுக்கவி பாரதி....
11/12/2015

முண்டாசுக்கவி பாரதி....

டிச.11: தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன் மகாகவி பாரதி பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு
http://bit.ly/1NXITuz

மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்..!

சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்!

சிறப்பு பகிர்வை முழுமையாக படிக்க : http://bit.ly/1NXITuz

19/08/2015

ஆகஸ்ட் 19: இன்று உலகப் புகைப்பட தினம்!
http://bit.ly/1Je9VVZ

24/07/2015
16/07/2015

ஜூலை 16: இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவர் தன்ராஜ் பிள்ளையின் 47வது பிறந்த நாள் இன்று.

இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்.

வாழ்த்துகளை பகிர்வோம்

15/07/2015

ஜூலை 15: கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் இன்று.. சிறப்பு பகிர்வு

'பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!'

கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.

அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.

"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" - காமராஜர்.

"டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."

"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்.

கறுப்பு காந்தி "காமராஜர்"....
15/07/2015

கறுப்பு காந்தி "காமராஜர்"....

தன்னைச் சுற்றி தனது குடும்பத்தினர், உறவினர் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார் என்ற ஒரு செய்தி போதும், கறை படியாத கைகளுக்கு.

காலாகாலத்திற்க்குமான கடிதம்....
02/06/2015

காலாகாலத்திற்க்குமான கடிதம்....

அன்புள்ள ஆசிரியருக்கு...

''இன்றைய பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்குப் பாடங்கள் தவிர்த்து ஆசிரியர்கள் வேறு எதாவது கற்பிக்க வேண்டும் என விரும்புகிறார்களா?''

''இன்றைய பெற்றோர் விரும்புகிறார்களோ இல்லையோ, ஒரு பிரபலமான அப்பா தன் மகனின் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய இந்தக் கடிதத்தின் சுருக்கத்தைப் படித்துப் பாருங்கள்...

'உழைத்துச் சம்பாதிக்கும் ஒரு டாலர், உழைக்காமல் சம்பாதிக்கும் ஐந்து டாலரைவிட மதிப்பானது என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அவனுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ளவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக்கொடுங்கள். அவனுக்குப் பொறாமைக் குணம் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

மௌனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தையும் எதற்கெடுத்தாலும் பயந்து ஒளிவது கோழைத்தனம் என்பதையும் புரியவையுங்கள்.

புத்தகம் என்னும் அற்புத உலகின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

ஏமாற்றுவதைவிடத் தோல்வி அடைவது மேலென்று புரியவையுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும் முரடர் களிடம் கடினமாகவும் அணுகுவதற்குப் பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாகக் கரைந்துவிடாமல் எந்தச் சூழலிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங் கள்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்றும் கண்ணீர்விடுவதில் தவறு இல்லை என்றும் கற்றுக்கொடுங்கள்.

அவன் தன் மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் நம்பிக்கை கொள்வான்.

இவற்றில் உமக்கு எவை எல்லாம் சாத்தியமோ அவற்றை எல்லாம் அவனுக் குக் கற்றுக்கொடுங்கள்.

அவன் மிக நல்லவன், என் அன்பு மகன்!’ என்று முடிக்கிறார்.

அந்தப் பிரபலம், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன்!''

- டி.புதுராஜா, சென்னை.
நானே கேள்வி... நானே பதில்!

13/05/2015

நமது கல்லூரிக்கான இந்த முகநூல் பக்கம் (Thiru Kolanjiappar Government Arts College) இன்று ஒரு முக்கிய நிலைக்கு வந்து மூன்று சதமடித்துள்ளது. ஆம், இந்த முகநூல் பக்கம் 300வது தொடர்பவர்களை/விருப்பத்தை(like) இன்று பெற்றுள்ளது. இதை சாத்தியமாக்கிய நண்பர்களுக்கு நன்றி...
தொடர்ந்து ஆதரவளியுங்கள் நண்பர்களே...!
உங்கள் கருத்துகள்/யோசனைகள் ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில்(Comment) தெரிவிக்கவும்

Dear friends today we reached a milestone, Yes this page for our college (Thiru Kolanjiappar Government Arts College) have got its 300-thfollower/like this day. Thanks to all who made it happen...
Keep your support to this page...
Thanks...!
Let us inform your Suggestions in comments.

உலக உழைப்பாளர்களே... உங்கள் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்...
01/05/2015

உலக உழைப்பாளர்களே... உங்கள் அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்...

மே 1: உழைப்பினை உலகம் போற்றிட அனைவருக்கும் உழைப்பாளர்தின வாழ்த்துகள்...

#உழைப்பாளர்கள்தினவாழ்த்து

அன்பு  நண்பர்களுக்கும் , நட்புச் சொந்தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... :)
14/04/2015

அன்பு நண்பர்களுக்கும் , நட்புச் சொந்தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... :)

நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

#தமிழ்புத்தாண்டுவாழ்த்துக்கள் #விகடன்

படம்: ஏ.ஆர்.சரவணன்
Happy Tamil New Year

06/04/2015

ஏப்ரல் 6: இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.

''இயற்கையில் வேலை செய்வோருக்கு இயற்கை கூலி கொடுக்கிறது. அந்தக் கூலி... ஆனந்தம். ...மனநிறைவு. அது, குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுதிலே தாய்க்குக் கிடைக்கிறது.

ஆனால் வாடகை தாய்க்கு, இன்னொருத்தியின் குழந்தைக்கு பால் கொடுத்து கிடைக்கும் பணத்திலிருந்து தான் மகிழ்ச்சி பிறக்கிறது. பணம், சமூகத்தில் சதிராட்டம் போடுவதால்தான் , மனித மாண்புகள் கேள்விக்குரியவை ஆகிவிட்டன."

- இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்

சாதனைக்காரி சாய்னா நேவால்...
29/03/2015

சாதனைக்காரி சாய்னா நேவால்...

Congrats Saina ....

Address

Vriddhachalam
606001

Opening Hours

Monday 8am - 5pm
Tuesday 8am - 5pm
Wednesday 8am - 5pm
Thursday 8am - 5pm
Friday 8am - 5pm

Telephone

04143 260243

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiru Kolanjiappar Government Arts College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category