Sri Rajalakshmi Typewriting Institute

Call Directions Contact the school

Sri Rajalakshmi Typewriting Institute முயற்சி திருவினை ஆக்கும், விடா முயற்?

02/10/2025

அனைவருக்கும் காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் காந்தியசிந்தனைகளை கையாள்வோம்... அகிம்சை எப்போதும் வெற்றியை மட்டுமே தரும்.

01/10/2025
10/05/2023

*அனைத்து உறுப்பினர்களுக்கும் இனிய காலை வணக்கம்.*

பிப்ரவரி 2023 அரசுத் தொழில்நுட்பத் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் விடைத்தாள் நகல் கோருவதில் எந்த மாணவருக்கு விடைத்தாள் நகல் வேண்டுமோ அந்த மாணவரின் பெயர் மற்றும் பாடக்குறியீட்டு எண் சரி பார்த்து "APPLY FOR SCANNED COPY OF ANSWER SCRIPT" இல் Tick செய்து Update கொடுக்கவும்.

பின்பு "ONLINE PAYMENT GATEWAY" மூலம் பணம் செலுத்தியவுடன் "DRAFT COPY" எடுத்து சரி பார்த்துக்கொள்ளவும்.

*"FINAL COPY" ஒரு முறை கொடுத்துவிட்டால் பின்பு புதிதாக ஒரு விண்ணப்பம் சேர்க்கவோ முன்பு இருந்த விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றமோ செய்ய இயலாது. ஆதலால் வேறு மாணவர்கள் யாரேனும் விண்ணப்பிக்க விரும்புகிறார்களா என்பதை ஒரு முறைக்கு இரு முறை உறுதி செய்த பின்பு FINAL COPY கொடுக்கவும்.*

*_குறிப்பு:_*
*_1) FINAL COPY கொடுத்த பின்பு புதிதாகவே அல்லது முன்பே பதிவு செய்த விண்ணப்பத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்ய இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்._*
*_2) கடைசி தேதியான 15ம் தேதி வரை காத்திருக்காமல் 14ம் தேதிக்குள் விண்ணப்பித்து முடித்தால் நல்லது._*

20/10/2021

நன்றி : ஆனந்த விகடன்

தட்டுங்கள் திறக்கப்படும்... டைப்ரைட்டிங் மறந்த தலைமுறை!

80 களில் மத்திய தர வகுப்பினரின் வாரிசுகள் அரசு வேலைக்கு செல்ல ஒரே வழியாக இருந்தது தட்டச்சு பயிற்சி. பள்ளிப்படிப்பை முடித்து தொடர்ந்து படிக்காதவர்கள் தட்டச்சு பயிற்சி பெறுவதை வழக்கமாகக் கொண்ட ஒரு காலம் இருந்தது. அன்றைக்கு வீட்டின் தொந்தரவிற்காக தட்டச்சு பயிற்சி நிலையங்களை நாடியவர்கள்தான் பின்னாளில் அரசு அலுவலகங்களில் பெரிய பெரிய மின்விசிறிகளின் கீழ் பணிபுரியும் வாய்ப்பு பெற்றனர்.

பட்டப்படிப்பு மேற்படிப்பு படித்தவர்களுடன் ஒரே அறையில் அமர்ந்து பணிபுரியும் வாய்ப்பு பெற்ற அவர்களில் பலர் பள்ளிப்படிப்போடு பள்ளிக்கூடத்திற்கு முழுக்கு போட்டவர்கள்.

70 களில் வெறும் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து பலர் ஐ.ஏ.எஸ்களாக பணி உயர்வு பெற்ற கதைகளும் உண்டு. இப்படி பல தலைமுறைகளை உயர்த்திவிட்ட தட்டச்சு பயிற்சி இன்று இளைஞர்களால் சீண்டப்படாததாக இருக்கிறது என்பது வேதனை.

கணினியின் வளர்ச்சி இன்று இளைய தலைமுறையை தட்டச்சு பற்றிய புரிதலை தடுத்துவிட்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் மட்டுமின்றி தனியார் அலுவலகங்களிலும் பேனாக்கள் பயன்படுத்தாத காலம் இது. மேஜையின் முன் இருக்கும் கணிப்பொறியில்தான் மொத்த வேலைகளையும் முடிக்கிறோம். பல லட்சங்கள் கொடுத்து கணிணி பயிற்சி எடுத்தவர்கள் கணிணியை இயக்க அடிப்படையான விஷயமான தட்டச்சு பயிற்சியை சில நுாறுகள் கொடுத்து கற்றுக்கொள்ள முயலுவதில்லை.

இதனால் இன்று தங்கள் அலுவலகங்களில் கணினியை இயக்கும் பலர் ஒற்றை விரல்களில் கோலம் போட்டுக்கொண்டிருக்கின்றனர். கணினியின் பொருத்தப்பட்டுள்ள விதவிதமான தட்டச்சு வடிவங்கள் அவர்களை இன்னும் சோம்பேறிகளாக்கிவிட்டிருக்கிறது. இதனால் தட்டச்சு பயிற்சி நிலையங்கள் இன்று வெறிச்சோடிக்கிடக்கின்றன.

“80-கள் வரையில், பள்ளி இறுதி வகுப்பு தேர்வு எழுதியவுடன் மாணவர்கள் தட்டெழுத்து பயிலகங்களுக்குச் சென்று தட்டெழுத்து படித்துவிட்டு அரசு மற்றும் தனியார் துறைகள்ல வேலைக்கு சென்றார்கள். அப்போதெல்லாம் மாணவனோ அல்லது மாணவியோ தட்டச்சு பயில்வது என்பதை அடிப்படை கல்வி போன்று படிப்பார்கள். 90 களின் மத்தியில் கணினி வந்த பிறகு கணினி மோகத்தில் தட்டெழுத்து கற்பதை தவிர்த்தனர். ஆனால் கணினியை வேகமாகவும் திறனாகவும் இயக்குவதற்கு தட்டெழுத்து பயிற்சி அவசியம் என்று உணர்ந்து இப்பொழுது தட்டெழுத்து பயில வருகின்றனர்” என்கிறார் சென்னையை சேர்ந்த தட்டெழுத்துப் பயிலக முதல்வர்.

தொடர்ந்து அவர் கூறும்போது, “இக்காலத்தில் வேலை வாய்ப்பிற்கு தட்டெழுத்து மிகமிக அவசியம். தட்டச்சு பற்றிய புரிதல் இல்லாதவர்கள் பலர் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு நேர்முகத் தேர்விற்கு செல்லும்பொழுதுதான் அந்த சிரமத்தை உணர்கிறார்கள். தட்டெழுத்து தெரியுமா என்கிற கேள்வி அங்கு எழுப்பப்படும்போது சங்கடம் அடைகிறார்கள். அதன்பிறகுதான் தட்டெழுத்து பயிலகத்தை நோக்கி படை எடுக்கின்றனர்.

முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெற்றவர், தேர்ச்சி பெறாதவர் மட்டும்தான் தட்டெழுத்து தேர்விற்குச் செல்லலாம் என்று இருந்தது. ஆனால் இப்பொழுது 6-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் புதிய இளநிலை தேர்விற்குச் செல்லலாம் என்றும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இளநிலை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தேர்விற்குச் செல்லலாம் என்றும், அதனைத் தொடர்ந்து முதுநிலை தேர்விற்குச் செல்லலாம் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதனால் மாணவர்கள் 8-ம் வகுப்பு படிக்கும் போதே தட்டெழுத்து பயின்றால், எட்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவுடன் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் தேர்விற்குச் சென்று, தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலையில் தேர்ச்சிப் பெறலாம். 9-ம் வகுப்பு படிக்கும் பொழுது தொடர்ந்து தட்டச்சு பயிற்சி செய்து, அதனைத் தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி மாத தேர்வில் விண்ணப்பித்து, தட்டெழுத்து முதுநிலை (தமிழ், ஆங்கிலம்) தேர்ச்சிப் பெறலாம். பள்ளிப் பாடச்சுமை குறைவாக இருக்கும் பொழுதே பள்ளி இறுதி வகுப்பு தேர்விற்கு முன்னதாகவே தட்டெழுத்துப் பாடத்தில் முதுநிலையில் (ஆங்கிலம் தமிழ்) தேர்ச்சி பெற்றுவிட வாய்ப்புள்ள இந்த திட்டம் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்.

இதனால் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் நீங்கள் எங்கு சென்றாலும் கணினியை இயக்குவது வெகு சுலபம். மற்றவர்களை விட தட்டெழுத்து படித்தவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுத்துப் பிழை வருவது குறைவாகவே இருக்கும். ஆங்கில மொழி அறிவும் ஏற்படுகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாதவர்களுக்கு இன்னொரு தீர்வு உண்டு. பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்த மறுநாளே தட்டெழுத்து கற்றுக்கொள்ளச் சென்றால், கல்லூரிக்கு மனு செய்து காத்திருக்கும் காலத்தில் தட்டெழுத்தை பயின்று இளநிலையில் (junior grade) தேர்ச்சி பெற்று விடலாம். இதனால் கல்லூரிக்குச் சென்று கணினியை மற்றவர்களை விட வெகு சுலபமாக, வேகமாகவும் இயக்கலாம். BE, B.Tech கணினி Course படித்தவர்களும் கணினியை வேகமாகவும், திறனாகவும் இயக்குவதற்கு தட்டெழுத்து பயிலுகின்றனர்.

தமிழ்நாடு அரசு தொழில் நுட்ப இயக்ககம், Office Automation Course தேர்வு நடத்துகிறது. பள்ளிப்படிப்பு மற்றும் தட்டெழுத்து இளநிலை தேர்ச்சி பெற்றிந்தால் மட்டுமே அத்தேர்விற்குச் செல்ல முடியும். அது மட்டுமல்லாமல் புதியதாக தமிழக அரசு அலுவலகங்களில் பணிக்கு சேர்ந்தவர்கள் Office Automation Course சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டி ருப்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு பணிகளுக்கு ஆங்கில தட்டெழுத்து இளநிலை, முதுநிலை சான்றிதழ் இருந்தால் நேர்முகத்தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் IV தேர்வில் ஆண்டுக்கு குறைந்தது 1000 தட்டெழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்” என்றார்.

மருத்துவமும் பொறியியலும் மட்டுமே வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கல்விப்படிப்புகள் அல்ல. வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்ற அறிவியல் தத்துவத்தைப்போல், நமக்கான ஒரு இலக்கு நம் தகுதிக்குட்பட்டதாக இருக்கும்போது அது எத்தகையதாக இருந்தாலும் அதை நாம் அடைய முடியும்.

மாணவர்களே தயாராகிவிட்டீர்களா...?

நன்றி : ஆனந்த விகடன் 24/02/2016

18/06/2021

அன்பார்ந்த தட்டச்சு பயிலும் மாணவ, மாணவிகளே விரைவில் நமது தட்டச்சு பயிலகம் திறக்கப்பட உள்ளது. மாணவர்கள் தங்கள் தகுதியினை வளர்த்துகொள்ள வேண்டும். பள்ளி செல்லும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தேர்ச்சி தமிழக அரசு அறிவித்துள்ளது, இந்த நேரத்தில் நாம் காலத்தை வீணாக்காமல் நாம் நமது தணி திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். admission is going on typewriting and computer class only...

12/12/2020

தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் சென்னை 600025-கூடியவிரைவில் தேர்வுகளுக்கான அறிவிக்கையை வெளியிடும் என எதிர்பார்ப்பு. Dote, சென்னை - 25 தனி மனித சமூக இடைவெளியைக் கடைபிடித்து, தட்டச்சு, சுருக்கெழுத்து, C.O.A., தேர்வுகளை நடத்த வேண்டியிருப்பதால், மேலும் பல புதிய தேர்வு மையங்களை அமைத்து வருவதாக தெரிய வருவதால், (டென்டேட்டிவ் புரோகிராம்) G.T.E., C.O.A., அரசுத் தேர்வுகளின் அறிவிக்கை வெளியிட நேரம் தேவைப்படுவதாகத் தெரியவருகிறது. தேர்வர்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும் தேர்வு மையங்களைப் பிரித்து புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. புதிய தேர்வு மையங்கள்: அரசு, தனியார் பாலிடெக்னிக், அரசு கலைக்கல்லூரிகள், தனியார் கலைக்கல்லூரிகள், அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள் தட்டச்சு, சுருக்கெழுத்து, தேர்வு மையங்களாக செயல்பட இருப்பதாகவும் தெரியவருகிறது. அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களிடமும் ஒப்புதல் பெறும் முயற்சியால் தேர்வுவாரியம், சென்னை ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இவைகளைப் போன்ற பற்பல வேலைகளை தேர்வு வாரியம், சென்னை 25 செய்து, புனரமைக்க உள்ளதாகவும் தெரியவருகிறது. டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட் டின் உரிமையாளர்கள். மற்றும் உறுப்பினர்கள் நலன் கருதி தகவலுக்காக அனுப்பப்படுகிறது.

24/11/2020

*BREAKING..*

*தமிழகத்தில் நாளை பொது விடுமுறை..* 25-11-20

*நிவர் புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..*

மாணவர்கள்  காலத்தை வீணாக்காமல் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
17/11/2020

மாணவர்கள் காலத்தை வீணாக்காமல் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

இந்த 2021  பிப்ரவரி மாதம் typewriting exam கட்டாயம் நடைபெறும்....
16/11/2020

இந்த 2021 பிப்ரவரி மாதம் typewriting exam கட்டாயம் நடைபெறும்....

Address

EAST PONDY MAIN Road, (OPP) GOVT. HR. SEC. SCHOOL, KOLIYANUR
Villupuram
605103

Opening Hours

Monday 7am - 8pm
Tuesday 7am - 8pm
Wednesday 7am - 8pm
Thursday 7am - 8pm
Friday 7am - 8pm
Saturday 7am - 8pm

Telephone

+919047557255

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Rajalakshmi Typewriting Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Rajalakshmi Typewriting Institute:

Shortcuts

Share

Category