St. Marys Higher Secondary School, Vickramasingapuram

St. Marys Higher Secondary School, Vickramasingapuram A centre of excellence and pride standing tall in the banks of perennial river Tamirabarani and Poth Our school is such a kind.

Education has become a business nowadays but still some institutions doing this as a service. It is a government aided school run by Sacred Heart brothers.The students of our school has become great personalities other than great earners. I am proud to be a student of this school.

31/12/2023

விக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் (St Mary's HSS) படித்த விஜயகாந்த் 🥹 ...

நமது புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவரும்,தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேசி...
28/12/2023

நமது புனித மரியன்னை மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவரும்,

தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும்,

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவருமான

பேரன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய #கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் திரு #விஜயகாந்த் அவர்கள் உடல்நிலை குறைவால் காலமானார்கள்.

அன்னாருக்கும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும், நமது பள்ளியின் சார்பிலும், இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்களின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்!

Everyone

16/11/2022
Welcome to Tamilnadu, India
24/07/2022

Welcome to Tamilnadu, India

10/11/2016
நல்லவை என நினைப்பின் சற்றும் தாமதிக்காதே  உடனே செயல்படு வாய்ப்புகள் கிடைப்பது அரிது :)
08/09/2016

நல்லவை என நினைப்பின் சற்றும் தாமதிக்காதே உடனே செயல்படு வாய்ப்புகள் கிடைப்பது அரிது :)

செந்தமிழ் நாடென்னும் போதினிலே சாதித் =தீப்பற்றி எரியுது பாருங்களே சந்ததம் சாராயக் கடைகளிலே மக்கள் =சாதன்னை வாங்குது குப்...
15/07/2016

செந்தமிழ் நாடென்னும் போதினிலே சாதித்
=தீப்பற்றி எரியுது பாருங்களே

சந்ததம் சாராயக் கடைகளிலே மக்கள்
=சாதன்னை வாங்குது குப்பியிலே

வந்தவர் சுருட்டிடும் நோக்கினிலே சொந்த
=வாக்குதனை விக்குது தேர்தலிலே

இந்தொரு நிலையினை காண்பதற்கோ அன்று
=எம்முன்னோர் குருதியை சிந்தினரோ?

பாலியல் கொடுமைகள் பெருகியதே பலபடு
=பாதக செயல்களும் கூடிடிச்சே

வாலிப பசங்களின் எண்ணத்திலே காம
=வாசனை நித்தமும் வீசிடுதே

கூலிக் கொலைகளும் வளர்ந்திடுச்சே கெட்டுக்
=குட்டிச் சுவராய் ஆகிடுச்சே

தாலி அருப்புகள் நிரம்பிடுச்சே நெஞ்சம்
=தவிக்குது ஐயகோ என்செய்வேன்

ஏழைக் குழந்தைப் படிப்பெல்லாம் இங்கு
=எட்டாக் கனியாய் போயிடுச்சே

வாழைக் குமரியர் வாழக்கைஎலாம் காசால்
=வாங்குற நிலைமை ஆகிடுச்சே

கூழைக் கடிப்பவர் நோய்களுக்கும் கையில்
=கோடித் திணிக்கிற கேவலமே

ஊழல் நிறைந்த நாட்டினிலே வாழ
=உயிர்கொளல் பிழையென மாண்டிருப்பான் !

*மெய்யன் நடராஜ்

#படித்ததில்பிடித்தது

04/09/2015

Dear Friends ! Yaaryaar Entha Entha vaathiyaar.kitta (adigal Idigal) semmaiya vangirkeenga namma school.a?

04/09/2015

ஆண்டு விழாவுக்காக அன்று பள்ளி விடுமுறை.சிறுவன் ஒருவன் பள்ளியில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள பள்ளிக்கு சென்றான்.அங்கு தோரணம் கட்டிக்கொண்டிருந்தனர்.ஊர் மக்கள் எல்லோரும் பள்ளி தலைமையாசிரியருக்கு மரியாதை செலுத்தினர்.இதை பார்த்த சிறுவனுக்கு அடடா உலகிலேயே உயர்ந்த பதவி H.m தான்
என்று நினைத்தான். சிறிது நேரத்தில் D.e.o வந்தார். அவரை பார்த்த H.m ஓடோடி சென்று வரவேற்றார். இதை பார்த்தவன் Deo தான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில்Ceo வந்தார். இதை பார்த்த இருவரும் ஓடிச்சென்று அவரை வரவேற்றனர். அதனால்Ceoதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் Jd வந்தார். இதை பார்த்த மூவரும் ஓடிச்சென்று வரவேற்றனர். இதை பார்த்தவன் Jdதான் பெரியவர் என்று நினைத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கல்விஅமைச்சர் வந்தார்.எல்லோரும் சென்று வரவேற்றனர். இதை பார்த்தவனுக்கு கல்விஅமைச்சர் தான் பெரியவர் என்று நினைத்தான். விழா முடிந்ததும் கல்விஅமைச்சர் பக்கத்தில் இருந்த ஒரு சந்தில் நடந்து சென்றார். கூடவே அவர் பின்னால் எல்லோரும் சென்றனர். அவர் அந்த சந்தின் இறுதியில் இருந்த ஒரு குடிசை வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே இருந்த ஒரு பழைய கட்டிலில் ஒரு முதியவர் படுத்திருந்தார். அவரிடம் அமைச்சர்,''ஐயா! நான் முத்து வந்திருக்கிரேன்'' என்றார். அதற்கு அவர் ,''எந்த முத்து'' என்றார். ''ஐயா உங்கள் வகுப்பில் படித்த முத்து. நீங்க கூட அடிக்கடி குறும்புக்கார பயலே அப்படினு கூப்பிடுவிங்களே.. அந்த முத்து யா இப்போது அமைச்சராய் இருக்கிறேன்.'' என்று சொல்லிக்கொண்டே நெடுஞ்ஞாண் கிடையாக அவர் காலில் விழுந்தார். இதையேல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் 'ஆஹா!! இந்த உலகிலேயே ஆசிரியர்தான் உயர்ந்தவர். அதனால் நானும் நல்லா படித்து ஆசிரியராய் ஆவேன்'' என்று நினைத்துக்கொண்டானாம்.

அனைவருக்கும்
ஆசிரியர் தின வாழ்த்துககள்

31/08/2015

Address

Vickramasingapuram
627425

Opening Hours

Monday 8:30am - 5:30pm
Tuesday 8:30am - 5:30pm
Wednesday 8:30am - 5:30pm
Thursday 8:30am - 5:30pm
Friday 8:30am - 5:30pm
Saturday 8:30am - 12:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when St. Marys Higher Secondary School, Vickramasingapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category