*அறம் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்கள் :*
1.பொருளாதார ரீதியாகவும், பிற வகையிலும் பின் தங்கியிருக்கும் ஆண், பெண் இருபாலரும் பள்ளி, கல்லூரி கல்வி பயில எல்லா வகையிலும் உதவுதல்..
2.ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அனைவருக்கும் உணவு, உடை, வசிப்பிடம் ஆகியவற்றுக்கு வழிகாட்டுவது அல்லது அவற்றை ஏற்படுத்துதல்..
3.ரத்ததானம், உடல்தானம், உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சட்ட விதிகளுக்கு உட்பட்டு இவைகளை செய்ய உதவுதல்..
4.சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலைவிதிகளை பின்பற்றுதல், நன்னெறிகளை போதித்தல் போன்றவற்றில் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்துதல், பரிசளித்தல்..
5.ஏழை - எளியவர்களுக்கு திருமண உதவி செய்வது..
6.இயற்கை பேரிடர் ஏற்படும்போது பாதிப்படைந்த மக்களுக்கு உதவி செய்வது..
7.அன்னதானம் செய்வது..
8.ஊனமுற்றோருக்கு உபகரணங்கள் தந்து உதவுவது..
9.எதிர்காலத்தில் முதியோர் காப்பகம் அமைத்தல்..
10.மரக்கன்று நடுதல்..
11.நலிந்தோருக்கு தொழில் பயிற்சி அளித்தல்..
12.ஆம்புலன்ஸ் வாங்கி அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்தல்..
13.பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்குவது..
14.இறந்தவர்கள் உடலை கெடாமல் வைத்திருக்க குளிர்பதனப்பெட்டி (கூலர்) இலவசமாக வழங்குதல்..
15.பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டு பின்தங்கிய மாணவர்களுக்கு சமூக நிலை, பகுத்தறிவு மற்றும் கல்வி போதித்தல்..
16.நூலகம் ஏற்படுத்துதல், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என அனைவருக்கும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்..
17.கர்ப்பிணிப்பெண்கள், சிறுமிகள், இளம்வயதினர், வயதான பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படுவதால் அவர்களுக்கு சமச்சீர் உணவு மற்றும் ஊட்டச்சத்து கிடைக்க உதவி செய்தல்..
18.பொருளாதார நலிவுற்ற அனைத்து மக்களுக்கும், எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து உதவிகளையும் செய்து மேம்படுத்துதல் மற்றும் சமுதாயத்தின், தேசத்தின் இதர நல்ல நோக்கங்களுக்காக இந்த அறக்கட்டளை முயன்று செயல்படும்.