Gasc-Vdr

Gasc-Vdr அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - தண்ணீர்பந்தம்பட்டி, வேடசந்தூர் - 624702,
திண்டுக்கல் மாவட்டம். Official page.

📊 Census of India 2027 Awareness Meeting at GASC Vedasandur.On 17.07.2026 (Friday), Government Arts and Science College,...
20/07/2026

📊 Census of India 2027 Awareness Meeting at GASC Vedasandur.

On 17.07.2026 (Friday), Government Arts and Science College, Vedasandur, organized a special Census of India 2027 Awareness Meeting aimed at encouraging student and community participation in national planning and public welfare programs.

The event was organized by Dr. A. Karthikeyan, NSS Officer, under the leadership of our esteemed Principal, Dr. K. M. Sumathi, and featured Mr. R. Rajendran, Tahsildar (Vedasandur Taluk), as the chief guest.

The interactive session highlighted:
✅ The administrative impact of an accurate nationwide census
✅ How youth and NSS volunteers can drive community participation
✅ Key operational insights shared by local administrative officers (Mr. J. Raymondraj, Mr. Madurai Veeran, and Mr. Sathiriyan)

💻 Self-Enumeration Portal: Fill up your census details directly online at https://se.census.gov.in/

Our NSS unit and students are ready to lead the way in ensuring full participation for Census 2027! 🇮🇳✨

🏛️ Empowering Students through Essential Services! 💳​In the presence of our respected Principal, Dr. K. M. Sumathi, an A...
16/07/2026

🏛️ Empowering Students through Essential Services! 💳

​In the presence of our respected Principal, Dr. K. M. Sumathi, an Aadhaar Correction Camp was organized on our campus on July 14th & 15th, 2026. Organized in collaboration with the Head Post Office, Vedasandur, the initiative greatly benefited our students by providing easy access to vital documentation updates.

​A special thanks to our NSS Officer, Dr. A. Karthikeyan, for seamlessly organizing this impactful event! 🤝✨

முதலாமாண்டு மாணவர்கள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி – ஆறாம் நாள் நிகழ்வு (08.07.2026):​கல்லூரி முதல்வர் முனைவர் க. மா. சுமத...
15/07/2026

முதலாமாண்டு மாணவர்கள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி – ஆறாம் நாள் நிகழ்வு (08.07.2026):

​கல்லூரி முதல்வர் முனைவர் க. மா. சுமதி அவர்கள் பேசுகையில், "ஒழுக்கத்தோடு கூடிய கல்வியே இன்றைய இளைஞர்களுக்கு வேண்டும். இயற்கையிலே மனிதனுக்கு உடல், மனம், அறிவு என்ற மூன்று அளப்பரிய சக்திகள் அமைந்துள்ளன. இவற்றை முறையான பயிற்சியின் மூலம் பயன்படுத்தும்போது மனிதனின் வாழ்வியல் சிறப்பாக அமையும்" என்றார்.

​திண்டுக்கல் மனவளக்கலை மன்ற இயக்குநர் திரு. பாஸ்கரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், "பிராணாயாமம், மனவளம் பெருக்குதல், உடல் ஆரோக்கியம் பெறுதல், பாதுகாப்பான உணவு முறை, மன அழுத்தம் குறைத்தல், மனத்திற்கும் மூச்சிற்கும் உள்ள தொடர்பு, மூச்சினை அடக்கி ஆளக் கற்றவர்க்கு ஆயுள் அதிகரிக்கும் முறைமை" ஆகியன பற்றிப் பேசினார்.

​எரியோடு அரசு மருத்துவர் விஜயசாரதி அவர்கள் மாணவர்களை வாழ்த்திப் பேசினார். அவர்தம் உரையில், "குழந்தைத் திருமணம் சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளமானவை. இளம் வயதுத் திருமணம் ஏற்படுத்தும் பாதிப்புகள் மற்றும் உடல் ஆரோக்கியம் பேணும் முறைகள் குறித்து அவர் விளக்கினார். சாதாரண சிக்கல் மற்றும் பிரச்சினைகளுக்குக் கூடத் தீர்வுகாண இயலாமல், இறுதியில் தற்கொலை அளவிற்குச் செல்லும் நிலை இன்னும் வேடசந்தூர் வட்டாரத்தில் காண முடிகிறது. உலக அளவில் 20 கோடி நபர்கள் HIV பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 1986-இல் சென்னையில் முதன்முதலில் HIV நோய் பாதிப்பைக் கண்டறிந்து ஆராய்ந்த மருத்துவர் நிர்மலா அவர்கள் குறித்தும்" தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

​நிகழ்ச்சியின் பிற்பகுதியில், 250-க்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாணவர்களுக்கு எண்வகை யோக முறை பற்றிய செயல்முறைப் பயிற்சி சிறந்த பயிற்றுநர்களால் வழங்கப்பட்டது.

​தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர். அ. கார்த்திகேயன் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, இறுதியாக நன்றியுரையாற்றினார்.

முதலாமாண்டு மாணவர்கள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி - இரண்டாம்  நாள் நிகழ்வு (02.07.2026) : முதலாமாண்டு மாணவர்களின் ஆற்றுப்...
14/07/2026

முதலாமாண்டு மாணவர்கள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி - இரண்டாம் நாள் நிகழ்வு (02.07.2026) :

முதலாமாண்டு மாணவர்களின் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வாக தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த துறைத்தலைவர்கள் முனைவர். ச. அமுதவல்லி, பேரா. ச. முத்துக்குமார், பேரா. அ. திருமுருகன், முனைவர். தா. நாகலெட்சுமி மற்றும் முனைவர். அ. நித்யா ஆகியோர் துறை சார்ந்த கல்வி குறித்தும், மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு குறித்தும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

பிற்பகல் அமர்வில் கல்லூரி மாணவர்களுக்கான 'நான் முதல்வன்' பாடத்திட்டம் குறித்து அனைத்துத் துறை மாணவர்கள் பெற வேண்டிய பொதுவான விழிப்புணர்வு குறித்து முனைவர் தா. நாகலெட்சுமி விரிவுரை நிகழ்த்தினார்.

கல்லூரியில் நடைபெறும் அகமதிப்பீட்டுத் தேர்வு மற்றும் பல்கலைக்கழகத் தேர்வு குறித்து பேராசிரியர் ச. முத்துக்குமார் விளக்கவுரை நிகழ்த்தினார்.

இரண்டாம் நாள் நிகழ்வுகளை முறையாகத் தொகுத்து வழங்கி, விழாவின் நிறைவாக வணிகவியல் துறைப் பேராசிரியர் முனைவர். மு. அமுதா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

முதலாமாண்டு மாணவர்கள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி –  ஐந்தாம்  நாள் நிகழ்வு (07.07.2026) : 5-ஆம் நாள் புத்தாக்கப் பயிற்சிய...
13/07/2026

முதலாமாண்டு மாணவர்கள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி – ஐந்தாம் நாள் நிகழ்வு (07.07.2026) :

5-ஆம் நாள் புத்தாக்கப் பயிற்சியில், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகள், அரசுப் பணி மற்றும் சுயதொழில் குறித்து மாணவர்கள் எவ்வாறு தங்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பது பற்றிய தகவல்களைப் பேரா. முனைவர். பெ. இளஞ்செழியன் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட மையக் கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள், வங்கிக் கணக்குத் தொடங்குதல் மற்றும் பணப்பரிவர்த்தனை முறைகள் குறித்துப் பேசினார்.

கூட்டுறவு வங்கியின் தகவல் தொடர்பு மேலாளர், பணப்பரிவர்த்தனையில் ஏற்படும் சைபர் குற்றங்கள் குறித்த தகவல்களை வழங்கினார். இணையதள மோசடிகளை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும் அதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் அவர் பேசினார்.

வேடசந்தூர் கூட்டுறவு வங்கியின் மேலாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள், மாணவர்களின் எதிர்காலத் திட்டமிடல் குறித்துப் பேசினார்.

கல்லூரியின் முன்னாள் மாணவரும் தமிழ்த்துறையைச் சார்ந்தவருமான அருண்குமார் (தமிழ்நாடு மின்வாரியம்) மற்றும் ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவர் S. சரத்குமார் (வேளாண்மைத் தொழில்) ஆகியோர் மாணவர்களின் எதிர்காலத் திட்டமிடல் குறித்துப் பேசினர்.

கணிதத்துறைப் பேராசிரியர் முனைவர். ஆ. செபஸ்தியான் செல்வராஜ் அவர்கள், கல்லூரியின் நாள்காட்டி மற்றும் ஆண்டுவிழா மலர் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் முனைவர். க. மா. சுமதி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இப்பயிற்சிப் பட்டறைக்கு ஆங்கிலத்துறைத் தலைவர் பேரா. ச. முத்துக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நாள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கி, விழாவின் நிறைவாக முனைவர். அவர்கள் நன்றியுரை வழங்க, நான்காம் நாள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

பிற்பகல் வேளையில், தொழில் முனைவு குறித்தும் தொழில் தொடங்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பினாயில் தயாரித்தல், சோப்புத் தூள் தயாரிப்பு மற்றும் சோப்பு ஆயில் தயாரிப்பு குறித்த செயல்முறைப் பயிற்சியையும் விளக்கத்தையும் வணிகவியல் துறைப் பேராசிரியர் Dr. G. தங்கமணி அவர்கள் நிகழ்த்திக் காண்பித்தார்.

ஐந்தாம் நாள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கி, விழாவின் நிறைவாக தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர். எம். முத்து வைரம் அவர்கள் நன்றியுரை வழங்க, ஐந்தாம் நாள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

முதலாமாண்டு மாணவர்கள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி – நான்காம் நாள் நிகழ்வு (06.07.2026) :​முதலாமாண்டு மாணவர்களுக்கான ஆற்று...
09/07/2026

முதலாமாண்டு மாணவர்கள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி – நான்காம் நாள் நிகழ்வு (06.07.2026) :

​முதலாமாண்டு மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சியின் நான்காம் நாள் நிகழ்வுகள் 06.07.2026 அன்று சிறப்பாக நடைபெற்றன.

​முற்பகல் நிகழ்வுகள்:

விழாவின் முற்பகல் அமர்வில், தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி. செந்தாமரைச்செல்வி அவர்கள், மாணவர்கள் பெறக்கூடிய கல்வி உதவித்தொகைகள் குறித்தும், அவற்றைப்பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் விரிவாகப் பேசினார். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சிறந்த திட்டங்களான 'தமிழ்ப்புதல்வன் திட்டம்', 'புதுமைப்பெண் திட்டம்' மற்றும் நலவாரியத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பெறக்கூடிய பல்வேறு கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் குறித்துப் பேராசிரியர்கள் திரு. சந்திரசேகர், முனைவர் இளஞ்செழியன், முனைவர் அமுதவள்ளி ஆகியோர் மாணவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தனர்.

​இதன் தொடர்ச்சியாக, கல்லூரியின் சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுத் தொடக்க நிகழ்வில், எரியோடு காவல் நிலையச் சிறப்பு காவல் ஆய்வாளர்கள் திரு. பாலமுருகன், திரு. செல்வராஜ் மற்றும் தலைமைக்காவலர் திரு. வடிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகள், விதிகளை மீறுவோருக்கான தண்டனைகள் மற்றும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து விரிவான விழிப்புணர்வு உரையாற்றினர்.

​மேலும், சாலை பாதுகாப்பு மன்றத்தின் மற்றொரு நிகழ்வாக, ஆங்கிலத்துறை இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குச் சாலை பாதுகாப்பு குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டு, விதிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பா. சந்திரசேகர் அவர்கள் சிறப்பாகச் செய்திருந்தார்.

​பிற்பகல் நிகழ்வுகள்:

நிகழ்ச்சியின் பிற்பகல் வேளையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திரு. பாலமுருகன் அவர்கள், சமூக நல விடுதிகளின் கட்டமைப்பு மற்றும் சிறப்புகள் குறித்து உரை நிகழ்த்தினார்.
​நிறைவாக, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைப் பயிற்றுநர் செல்வி. சரோஜினி அவர்கள், மாணவர்களுக்கான அரசுப் பணிகள் குறித்தும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினார்.

நிறைவுப் பகுதி:

நான்காம் நாள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கி, விழாவின் நிறைவாக முனைவர். ஆர்.டி. நெல்சன் டேனியல் (Dr. RD. Nelson Daniel) அவர்கள் நன்றியுரை வழங்க, நான்காம் நாள் ஆற்றுப்படுத்தும் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

🧘‍♂️ Focus on Yoga & Mental Well-being:"Your growth as a human being is just as important as your growth as a student. B...
07/07/2026

🧘‍♂️ Focus on Yoga & Mental Well-being:

"Your growth as a human being is just as important as your growth as a student. Balance your mind, nourish your well-being, and the success will follow."

📢 Day 6: Six-Day Orientation Programme For the Entrants 🎓

Government Arts and Science College, Vedasandur, cordially invites all new students, faculty, and members to the final day of our Orientation Programme for the Academic Year 2026–2027! ✨

🗓️ Event Details (Day - 6)

Date: 08.07.2026 (Wednesday)
Time: 9:30 AM
Venue: Thiruvalluvar Auditorium

🏛️ Programme Schedule & Sessions:

Presidential Address
Speaker: Dr. K. M. Sumathi, Principal (FAC)
Government Arts and Science College, Vedasandur.

Institutional Best Practices:
Yoga🧘‍♂️
Organized by Valga Valamudan from Vethathiri Maharishi.

Psychological Counselling:
Mental Well-being & Expert Counselling🧠
Resource Person:
Mr. Vijaya Sarathi
(ICTC Counsellor, PHC, Eriyodu).

Extension Activities & Service Clubs🤝:
Introduction to NCC, NSS, RRC, YRC, Enviro Club, SSL, Women Development Cell, Entrepreneurial Cell, Student Counselling Cell, Website, AISHE, LMS, IQAC, Electoral Literacy Club, etc.
Resource: Club Coordinators.

Student Feedback💬

Interactive evaluation & Feedback Collection Session.

🌐 Connect With Us
Website: gascvdr.ac.in
YouTube: GASC-VDR
Instagram:
Facebook: Gasc-Vdr

We look forward to welcoming you! 🙌

🛡️ Safety First! இணையப் பாதுகாப்பு மற்றும் 'சிங்கப்பெண்' அதிரடிப்படையின் அசத்தல் விழிப்புணர்வு அமர்வுகள்! ✨2026-2027 ஆம்...
07/07/2026

🛡️ Safety First! இணையப் பாதுகாப்பு மற்றும் 'சிங்கப்பெண்' அதிரடிப்படையின் அசத்தல் விழிப்புணர்வு அமர்வுகள்! ✨

2026-2027 ஆம் கல்வியாண்டின் முதலாண்டு மாணவர்களுக்கான ஆறு நாள் வழிகாட்டுதல் முகாம் (Orientation Programme) கடந்த 01.07.2026 அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்விழாவின், மூன்றாம் நாள் நிகழ்வு (03.07.2026, வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கல்லூரியின் திருவள்ளுவர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இனிமையான துவக்கமாக, வந்திருந்த அனைவரையும் அன்போடு வரவேற்று வரவேற்புரை (Welcome Address) ஆற்றினார் முனைவர். அ. நித்யா அவர்கள்! 💐✨

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் (FAC) முனைவர். கே.எம். சுமதி அவர்கள் தலைமை தாங்கி, தலைமையுரை (Presidential Address) ஆற்றி நிகழ்ச்சியினை முறைப்படி தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில், உயர்கல்வியில் காலடி எடுத்து வைக்கும் மாணவ-மாணவிகள் தங்களின் இலக்குகளை எவ்வாறு நிர்ணயித்து சாதிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இணைய குற்றத்தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு:
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில், "மனித உரிமைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு" (Human Rights and Women Safety) என்ற தலைப்பில் திண்டுக்கல் சைபர் கிரைம் (இணைய குற்றப்பிரிவு) காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர் திரு. எஸ். ராஜமாணிக்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தங்களது மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தற்கால டிஜிட்டல் உலகில் மாணவர்கள் எதிர்கொள்ளும் இணையவழி ஆபத்துகள், அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து மாணவர்களிடையே அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மாணவர் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியம்:
"மாணவர் நல்வாழ்வு, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்" (Student Wellbeing Health and Hygiene) என்ற தலைப்பில் மனித உரிமைகள் கழகத்தின் செயலாளரும், திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், வேலுநாச்சியார் சீனை அறக்கட்டளையின் செயலாளரும், அகஸ்தியா அறக்கட்டளையின் உறுப்பினரும் மற்றும் 'சைல்டு வாய்ஸ்' அறக்கட்டளையின் அறங்காவலருமான Dr. பி. ஜெயவனிதாமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் மாணவர்களின் மனநலம், உடல் ஆரோக்கியம் மற்றும் தூய்மையின் அவசியம் குறித்து மிக விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.

மாணவர் உதவி அமைப்புகள் விழிப்புணர்வு:
மேலும், "மாணவர் உதவி அமைப்புகள்" (Student Support Systems) என்ற தலைப்பில் திண்டுக்கல் மாவட்ட 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப் படையைச் சார்ந்த பெண் காவலர் குழுவினர் நேரில் வருகை தந்து, மாணவிகளுக்கான அவசர உதவி எண்கள், தற்காப்பு முறைகள் மற்றும் அரசு வழங்கி வரும் பல்வேறு உதவி அமைப்புகள் குறித்து செயல்முறை விளக்கங்களுடன் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஜெ. மருதுபாண்டி அவர்கள் மாணவர்களின் விளையாட்டுத் துறை சார்ந்த வாய்ப்புகள் மற்றும் உடற்தகுதி குறித்து உரையாற்றினார். இறுதி நிகழ்வாக, விடுதி காப்பாளர்கள் (Hostel Wardens) விடுதி மாணவர்களுக்கான விதிமுறைகள், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்து மாணவர்களிடையே விரிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை முனைவர். அரு. முருகன் அவர்கள் தொகுத்து வழங்கியதுடன், விழாவின் நிறைவாக நன்றியுரையையும் வழங்கினார்."

"The best way to predict the future is to create it." — Abraham Lincoln.🎉👍Exciting times ahead! 🚀 Day 5 of the Six-Day O...
06/07/2026

"The best way to predict the future is to create it." — Abraham Lincoln.🎉👍

Exciting times ahead! 🚀 Day 5 of the Six-Day Orientation Programme for our new entrants at Government Arts and Science College, Vedasandur, is all about paving the way for the future.

Join us tomorrow as we dive into crucial insights on Career Guidance & Placement to help our students build their dream careers.

Day 5:

📅 Date: 07.07.2026 (Tuesday)
⏰ Time: 9:30 AM
📍 Venue: Thiruvalluvar Auditorium

We are honored to have Dr. K. M. Sumathi (Principal, FAC) delivering the Presidential Address, alongside our esteemed guest speakers, Ms. R. Subhashini (Managing Director, DCCB Ltd.) and Dr. P. Ilanchezhian (GL in Commerce, GASC).

We look forward to welcoming you all! 🎓✨

"Your direction is more important than your speed."Day 4 of our Orientation is all about setting the right direction—fro...
06/07/2026

"Your direction is more important than your speed."

Day 4 of our Orientation is all about setting the right direction—from career awareness to student welfare. Welcome to the GASC family! 🌟

✨ INVITATION: Day 4 of the Orientation Programme ✨

The Principal, Members of the Faculty, and Students cordially invite you to grace


A Six Day Orientation Programme For the Entrants (Academic Year 2026-2027).

📅 Date: 06.07.2026 (Monday)
⏰ Time: 9:30 AM
📍 Venue: Thiruvalluvar Auditorium

🎙️ Presidential Address:

👤 Dr. K.M. Sumathi
Principal (FAC),
GASC, Vedasandur.

📋 TODAY'S SESSIONS & TOPICS:

💡 Government Schemes Benefitting Students:

• Scholarship:
Mrs. S. Senthamaraiselvi (GL in Tamil) &
Dr. P. Ilanchezhian (GL in Commerce)

• Pudhumai Penn:
Dr. S. Amuthavalli (HOD & GL in Tamil)

• Thamiz Pudhalvan:
Mr. P. Chandrasekar (GL in English)

🛡️ Student Safety Drive & Social Responsibilities:

• Special Address by:
Ms. S. Vinotha, M.Sc., The Inspector of Police (Eriyodu Police Station, Dindigul)

📚 TNPSC Awareness, Anti-Ragging & Drug Awareness:

• TNPSC Awareness:
By an Expert TNPSC Trainer

• Anti-Ragging Awareness:
Dr. K. Tamilselvi (GL in Tamil)

• Anti-Drug Awareness (Videos):
Dr. R. Sundararaj (GL in English) &
Dr. J. Maruthupandi (PD & GL).

🤝 Grievance Redressal, ICC & Club Activities :

• Internal Complaints Committee (ICC):
Dr. S. Amuthavalli (HOD & GL in Tamil) &
Dr. T. Nagalakshmi (HOD & GL in Commerce)

• Grievance Redressal Systems & Clubs: Briefing by Club Coordinators

✨ We look forward to welcoming you! ✨

Address

Thaneerpanthampatti, E-Chithoor
Vedasandur
624702

Alerts

Be the first to know and let us send you an email when Gasc-Vdr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category