Sembodai R.V.Group of Institutions

Sembodai R.V.Group of Institutions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sembodai R.V.Group of Institutions, Education Website, Velankanni-Vedaraniam Main Road, Sembodai, Vedaranyam.

13/01/2024
எமது கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் திருநாள்-2024 கொண்டாட்டங்கள்.
12/01/2024

எமது கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் திருநாள்-2024 கொண்டாட்டங்கள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
12/01/2024

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

மயிலாடுதுறை AVC பாலிடெக்னிக் கல்லூரியில் ப்ரேக்ஸ் இந்தியா (Brakes India Ltd) நிறுவனம் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் நமது...
06/01/2024

மயிலாடுதுறை AVC பாலிடெக்னிக் கல்லூரியில் ப்ரேக்ஸ் இந்தியா (Brakes India Ltd) நிறுவனம் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் நமது பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் 20 பேர் கலந்து கொண்டு அதில் 17 மாணவர்கள் தேர்ச்சி பெற்று பணிநியமன ஆணை பெற்றனர்

06/01/2024

செம்போடை R.V கல்வி நிறுவனங்களின் சார்பாக அனைத்து மாணவர்களுக்கும் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம் .

எமது செம்போடை R.V கல்வி நிறுவனங்கள் வாயிலாக நடத்தப்பட இருக்கும் வினாடி வினா காண செய்முறை விளக்கம்:

Link: https://forms.gle/btmPq9oWNUqsFoUY8

கல்லூரி சார்பாக அனுப்பப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் ஒரு QR Code இருக்கும் அதனை உங்கள் மொபைல் மூலம் ஸ்கேன் செய்தால் ஒரு google பார்ம் லிங்க் ஓபன் ஆகும். அந்த google ஃபார்மில் உங்களது தகவல்களை நீங்கள் பூர்த்தி செய்து Next பட்டனை அழுத்தும் பொழுது உங்களுக்கான 25 வினாக்கள் இடம் பெற்றிருக்கும் இருக்கும். அதற்கான விடையை தாங்கள் 15 நிமிடத்திற்குள் விடையளித்து சமர்ப்பித்தால் உங்களது மதிப்பெண் உங்களது ஈமெயில் ஐடிக்கு வந்து சேரும்.

முதல் மூன்று இடங்களை பிடித்து மாணவர்களுக்கு Attractive prizes காத்திருக்கிறது . அதுமட்டுமின்றி ஆறுதல் பரிசாக 10 மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்பட உள்ளது.

போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் Certificate மற்றும் 50 சதவீதம் வரை ஸ்காலர்ஷிப் சலுகையும் வழங்கப்பட உள்ளது.

அனைத்து மாணவர்களும் போட்டியில் பங்கேற்ற வெற்றி வெற்றி பெற எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .
நன்றி

Sembodai R.V.Group of Institutions
Sembodai-614 809 | Vedaraniam | Nagapattinam | Tamil Nadu | India

Arts | Science | Engineering | Polytechnic

வேதாரண்யம், செம்போடை R . V.  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "மாணவர்களின் திறன் மேம்பாடு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் (...
03/01/2024

வேதாரண்யம், செம்போடை R . V. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "மாணவர்களின் திறன் மேம்பாடு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் (02-01-2024) செவ்வாய் அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் திரு. G. ஜெயச்சந்திரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு. Rtn . R .V .செந்தில் அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார். கல்வி நிறுவனங்களின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு. P .புஷ்பராஜா அவர்கள் மாணவர்களின் திறன் மேம்பாடு குறித்த கருத்துகளை எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் S . லோகநாதன் அவர்கள் மாணவர்களின் திறன் மேம்பாடு குறித்த கருத்துகளை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியில் தமிழ் துறைத் தலைவர் திருமதி.C .சுதா அவர்கள் , ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் செல்வி C .மேகலா அவர்கள், வணிக மேலாண்மை துறைத் தலைவர் திருமதி N . சாந்தி அவர்கள் , வணிகவியல் துறைத் தலைவர் திருமதி. V . ஜெயா அவர்கள் , வேதியியல் துறைத் தலைவர் திருமதி. T .கவிதா அவர்கள் , கணினி அறிவியல் துறைத் தலைவர் திருமதி S .கிரோஞ்ஜனா அவர்கள் ஆகியோர் மாணவர்களின் திறன் மேம்பாடு குறித்த கருத்துகளை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியாக தமிழ் துறை உதவிப் பேராசிரியர்
திரு. P .முருகானந்தம் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர்கள், மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்,  செம்போடை R.V.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், (29-12-2023)- வெள்ளிக்கிழமை  அன்று  தொழில்முனைவோர்  மேம்பாடு...
02/01/2024

வேதாரண்யம், செம்போடை R.V.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், (29-12-2023)- வெள்ளிக்கிழமை அன்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிரல் திருவிழா – (HACKATHON - 2023 -24) பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைப்பெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் S. லோகநாதன் அவர்கள் தலைமையேற்று தொழில் முனைதல் குறித்து கருத்துரை வழங்கினார்கள். மேலும் கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.N.சாந்தி அவர்களால் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிரல் திருவிழா பற்றிய விழிப்புணர்வு காணொளி ஒளிப்பரப்பபட்டு , விளக்கங்களை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சில் அனைத்து துறைத் தலைவர்கள் , உதவிப் பேராசிரியர்கள் , மற்றும் மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர்.

29/12/2023

வேதாரண்யம், செம்போடை R.V.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் "புதிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு" ஏற்படுத்தும் வகையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓவியப்போட்டி நடத்தி, அதனில் முதல் பரிசு பெற்ற மாணவி (B. ரதியா-B.B.A மூன்றாம் ஆண்டு) அவர்களின் ஓவியப் படத்தினை (27-12-2023) புதன் அன்று வேதாரண்யம் தாலுக்கா தேர்தல் துணை வட்டாட்சியர் திரு. மாதவன் அவர்களிடம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் G.ஜெயச்சந்திரன் அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.

Address

Velankanni-Vedaraniam Main Road, Sembodai
Vedaranyam
614809

Alerts

Be the first to know and let us send you an email when Sembodai R.V.Group of Institutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sembodai R.V.Group of Institutions:

Shortcuts

Share