GHSS Mazhaiyur

GHSS Mazhaiyur Our School Students score the District level toppers rank in Board exams. we need Volunteers and Sponsors to support our students academic activities.

Our school students are energetic to participate in Competitions and achieved various level prizes.

https://youtu.be/uf3KGXSfhKc?feature=shared
22/01/2025

https://youtu.be/uf3KGXSfhKc?feature=shared

ிழகம் முழுவதிலும் 4483 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட "SIDP" எனப்படும் பள்ளி புத்தாக்க மேம்...

13/01/2025

வேலூர் VIT பல்கலைக்கழகம் நிகழ்த்திய அறிவியல் போட்டியில் மொத்தம் ரூ 8000 ரொக்கப்பரிசு வெற்றி பெற்று அசத்திய மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

வட்டார அளவிலான வினாடி வினா( தேன்சிட்டு மற்றும் பொது அறிவு) போட்டியில் பங்கேற்று மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ...
08/01/2025

வட்டார அளவிலான வினாடி வினா( தேன்சிட்டு மற்றும் பொது அறிவு) போட்டியில் பங்கேற்று மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். நன்றி

https://youtu.be/0Aiar1Q0jE0?feature=sharedஅரசினர் மேல்நிலைப்பள்ளி மழையூர் திருவண்ணாமலை மாவட்டம்.நாட்டு நலப்பணித்திட்ட ச...
03/10/2024

https://youtu.be/0Aiar1Q0jE0?feature=shared

அரசினர் மேல்நிலைப்பள்ளி மழையூர் திருவண்ணாமலை மாவட்டம்.

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிகழ்வுகள்-02.10.2024-Day-5

மழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் +1 பயிலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கான சிறப்பு முகாம், கடம்பை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
நாட்டு நலப்பணித்திட்ட மாணவத் தொண்டர்கள்
காலையில் எழுந்து தேநீர் அருந்திய பிறகு, கிராம குடிநீர் குழாய் கிணறை சுற்றி தூய்மை செய்தனர், முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்தனர்.

அதன் பின்னர் காலை உணவு முடித்த பின்பு பள்ளி வளாகத்தை தூய்மை செய்தனர்.

காலை நிகழ்வில்,
மழையூர் அரசுப்பள்ளியின் கணினி ஆசிரியை திருமதி கா பத்மினி அவர்களும், தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் முனைவர் திரு பிரபாகரன் ஐயா அவர்களும் முகாமிற்கு வருகை புரிந்தனர்.

திரு பிரபாகரன் ஐயா அவர்களை வரவேற்று, கணினி ஆசிரியை திருமதி பத்மினி அவர்கள், பிரபாகரன் அவர்களுக்கு, சிறப்பு செய்தார்.

மேலும் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி சிற்றுணவு, நிதி உதவி அளித்து மகிழ்ந்தார்.

அதன் பின் +2 மற்றும் +1 NSS மாணவர்கள்,கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றனர்.

கிராமசபை கூட்டத்தில் வீதி நாடகம் "நெகிழி ஒழிப்பு, சுற்றுசூழல் பாதுகாப்பு" என்ற தலைப்பில், அற்புதமாக +2 மாணவர்கள் நிகழ்த்தினார்கள்.

2023- 2024 கல்வியாண்டு NSS மாணவர்கள் சிறப்பு முகாமுக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு குளிர்பானம் மற்றும் சிற்றுணவு அளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அவர்கள் கிராம சபை கூட்டத்தில் திரு பிரபாகரன் ஐயா அவர்களின் தலைமையில் சிறப்பானதொரு வீதி நாடகத்தை நிகழ்த்தினார்கள்.

அதன் பின்னர் அங்கன்வாடி மையத்தை சுற்றி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் தொண்டர்கள் தூய்மை செய்தனர்.

நூலக கட்டிடத்தை சுற்றி மாணவர்கள் தூய்மை செய்தனர்.

மதிய உணவிற்கு பின்பு, மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி பா.உமாமகேஸ்வரி அவர்கள் முகாமிற்கு வருகை புரிந்து, மதிய நிகழ்வின் சிறப்பு விருந்தினரான, அல்லியந்தல் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும், தமிழக அரசின் நல்லாசிரியர் விருத்தாளருமான திரு மாலவன் ஐயா அவர்களை வரவேற்றார்.

திரு.மாலவன் அய்யா அவர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துரை, வழங்கி போட்டிகளை நிகழ்த்தி, ரொக்கப் பணத்தை பரிசளித்தார்.
முகாம் சிறக்க நிதியுதவி அளித்து மகிழ்ந்தார். பல்வேறு போட்டிகளை மாணவர்களுக்கு அறிவித்தார்.

இந்த நிகழ்வில் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மேனாள் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி J.பிரதா அவர்களும் உடன் இருந்தார்.

அதன் பின்பு முனைவர் திரு பிரபாகரன் ஐயா அவர்கள் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளையும், நிகழ்வுகளையும் நடத்தி மாணவர்களுக்கு உற்சாகம் அளித்தார்.

அவரின் நிகழ்வு சிறப்புக்கு, சாட்சியாக மாணவிகளும், மாணவர்களும் ஏற்புரை வழங்கியது மிகச் சிறப்பாக அமைந்தது.

அதன் பின்னர் தலைமையாசிரியர் அவர்கள் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இரவு உணவுக்குப் பின்பு அடுத்த நாள் நிகழ்வு குறித்து மாணவர்களிடையே திட்டமிடப்பட்டு அதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் மாணவர்கள் உறங்க சென்றனர். மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும் மழையூர் அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு தீபன் சக்கரவர்த்தி அவர்கள் உடனிருந்து ஒருங்கிணைத்தனர்.

நன்றி

அரசினர் மேல்நிலைப்பள்ளி மழையூர் திருவண்ணாமலை மாவட்டம்.நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிகழ்வுகள்-02.10.2024-Day...

இன்று நடைபெற்ற"உயர்வுக்கு படி" முகாமில் இரண்டு மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை உறுதி செய்ய...
14/09/2024

இன்று நடைபெற்ற
"உயர்வுக்கு படி" முகாமில் இரண்டு மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை உறுதி செய்யப்பட்டது.

இவ்வாய்ப்பினை வழங்கிய தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறைக்கு நன்றி

ஓர் அரசுப்பள்ளி மாணவனின் அற்புத படைப்பு...+2 வேதியியல் பாடத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும் Online Test  ம...
23/06/2024

ஓர் அரசுப்பள்ளி மாணவனின் அற்புத படைப்பு...

+2 வேதியியல் பாடத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களையும் Online Test முறையில் பயிற்சி பெற சிறப்பாக ஒரு இணையதளப் பக்கத்தை வடிவமைத்துள்ளார்.

இதில் எத்தனை முறை வேண்டுமானாலும், தேர்வு எழுதிப் பார்த்து பயிற்சி பெறலாம், உடனுக்குடன் முடிவுகளையும் தெரிந்து கொள்ளலாம். தவறான வினாக்களுக்கான விடைகளையும் தெரிந்து கொள்ளலாம்.

இணையதளப் பக்கம்
ghssmazhaiyur.pages.dev

வேதியியல் பாடத்தை போன்று பிற அனைத்து பாடங்களுக்கும் இது போன்ற பயிற்சியை மேற்கண்ட இணையதளப் பக்கத்தில் சென்று பயிற்சி பெறலாம்.

இது முழுக்க முழுக்க மாணவனே உருவாக்கியது ஆகும்...

விளக்க காணொளி
👇
https://youtu.be/A6WRXbRMIdI?feature=shared

No choreographer, No makeup artist, No costume designer,  But the students performed well....
01/05/2024

No choreographer, No makeup artist, No costume designer, But the students performed well....


30/09/2023

Address

Vandavasi

Alerts

Be the first to know and let us send you an email when GHSS Mazhaiyur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to GHSS Mazhaiyur:

Shortcuts

Share

Category