Al Ameen Matriculation School, Valinokkam

Al Ameen Matriculation School, Valinokkam education Arabic is now taught only through Quraan. It is very useful for the students to learn Quraan with meaning as well as learning justg language.

This is a religious teaching school at first and worldly education was also taught during night for voluntarily students from local school by me covering basic knowledge of tamil arabic and english. Allah may Help us to go on our mission.

28/06/2022

This year 11th 12th full pass. 10th all pass except two.

30/11/2020

அல்லாஹ உதவி கொண்டு இந்த ஆண்டு இரண்டு ஆலிமாக்கள் நம் மதரஸாவில் அப்சலுல் உலமா வாகி இருக்கிறார்கள், இத்துடன் ஐந்து ஆலிமாக்கள் பட்டம் பெற்றுள்ளனர். ஆண் பிள்ளைகள் படித்த வுடன் எங்கே யாவது பிழைப்பு தேடியும் மேற்படிப்பு நாடியும் சென்று விடுகிறார்கள். நம்மிடத்தில் பணி புரியும் ஆலிமாக்கள் தான் கஷ்டத்தோடு கஷ்டமாக ஓதி அத்துடன் சென்னை சென்று பத்து நாட்கள் தங்கி இருந்து தேர்வு எழுதி பாஸ் ஆகிறார்கள். இந்த ஆண்டு அங்கே போய்த் தங்க வேண்டியதை இந்தக் கொரானா தடுத்து வீட்டிலிருந்தே எழுதும் பாக்கியத்தைத் தந்தது. அல்ஹம்துலில்லாஹ். எல்லோரும் துஆச் செய்யுங்கள்.

18/08/2020

ஜனாதிபதி யாக இருந்த. Dr. இராதாக் கிருஷ்ணன் ஆசிரியராக இருந்தவர் தான் டாக்டர் அப்துல் கலாம் பேராசிரியராக இருந்தவர். ஆனால் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் போதே ஆசிரியப் பதவியைத் துறந்தனர். அது தான் முறை. அந்த. முறையைக் கடைபிடித்தவர்கள் நம் பள்ளியிலும் இருந்தனர். ஒருவர் திரு. செல்வராஜ். அடுத்து ஒரு ஆசிரியை திருமதி வசந்தி.அது கணவர் தேர்தலில் போட்டியிப் போகிறார் என்பற்காக. விலகிச் சென்றது.

18/08/2020

பள்ளி ஆசிரியர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடலாமா என்ற ஒரு கேள்வி சமீபத்தில் எழுந்து லாம் என்றும் லாகாதென்றும் கட்சிப் பிரிவினை மாதிரி ஆகியது. தெளிவான பதிலை யாரும் தர வில்லை. அரசுப் பள்ளி என்றால் கூடாது என்று தேர்தல் அதிகாரிகள் சொன்னார்களாம். கூடாது என்று சொல்லிட்டார்ல. தனியார் பள்ளியில. அங்கீகாரம் யார் தர்ரது? அங்கீகாரம் இல்லாம நடத்தினா ஏத்துக்குவீங்களா? ஆசிரியர் பயிற்சி பெறாதவர்கள் தனியார் பள்ளியில் வேலை பார்க்கக் கூடாது தெரியுமா? . அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு என்ன விதிமுறையோ அது தா னே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும். தேர்லில் போட்டியிட்டால் அவர்கள் பள்ளிகளிலோ வேறு எந்தப் பதவியிலுமோ வேலை பார்க்கக் கூடாதூ.
ஒரு மிஸ் சொல்லாமற் கொள்ளாமல் தேர்தலில் போட்டி போட்டது. போட்டது மட்டுமல்ல. ஜெயித்தும் விட்டது. இப்ப நம் பள்ளியில் பணி செய்ய. வழக்கம் போல் வருகிறது. நாம் வரக் கூடாது என்று சொன்னால் அதை மறுக்கிறது. வேலை பார்க்கலாம் என்கிறது. அதுக்கு ஆதரவு தர நம்ம இடத்திலே ஆள் இருக்கிறது. இது எப்படி?

10/08/2020

மார்ச் 27 ந்தேதியுடன் ஸ்கூல் மூடப் பட்டது. எப்போது திறப்பு என்று இது வரை தெரிய வில்லை. பனிரெண்டாம் வகுப்பு முடிவு ஒரே ஒரு பிள்ளை தேர வில்லை. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று தெரிவிக்கப் பட்டது. எல்லாமே நானூறுக்கும் மேல். அல்லாஹ் போது மானவன்,பதினொன்னு ரிசல்ட் வரணும் வரும்போது இங்கே எழுதுவோம்.இன்ஷா அல்லாஹ்.

24/05/2020

வண்ணா ஊற்று இடம் ஒன்று என் பணத்தில் மர்ஹூம் பீர்முஹம்மத் சம்மாட்டி மாமா அவர்களிடம் . யாம் உத்தியோகத்தில் இருந்ததால் மர்ஹூம் தாஜுதீன் பெயருக்கு வாங்கினோம். அந்த விஷயம் என் மைத்துனன் சைபத்துல்லாஹ் வுக்கும் எஸ் வி பஷீருக்கும் தெரியும். பக்கத்தில் என் இடம் இருக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்று என்னிடம் பணம் வாங்கினான். அதற்கு சிபாரிசு செய்தவன் சைபத்துல்லாஹ். ஆனால் பஷீர் பிறகு இடம் தர முடிய வில்லை. ஆகவே வாங்கின காசைத் தந்தான். தாஜுதீன் பெயரில் போட வேண்டாம் என்று மர்ஹூம் அப்துஸ் ஸலாம் சொன்னார்கள். ஆனால் வேறு வழி இன்றி தாஜு பெயருக்கு ஸ்கூலுக்காக வாங்கிய தாகப் போடப் பட்டது.. எல்லைத் தகராறு சம்பந்தமாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அதை தாஜுதீன் மகன் அமான் தான் தந்தைக்காக வழக்கை எதிர் கொள்கிறான். அப்துஸ் ஸலாம் சாச்சா அப்போது ஊரில் இருந்தார்கள். அவர்களின் நிதி எதுவும் இதில் போடப் பட வில்லை. அறிக.

28/03/2020

சிலருக்கு இடையில் சம்பளம் உயர்த்த முடிவு செய்தேன். குறிப்பாக எட்டரைக்கெல்லாம் ஒரு ஸார் வந்து விடுவார். அவருக்கு ஒரு ஆயிரம் கூட்டு வோம் என்று நினைத்துக்கொண்டு இருக்கையில் அவரை அடிக்கடி விசாரிக்க ஆரம்பித்தேன். அவர் ஒரு நாள் மருமகளின் பிறந்த நாள் கொண் டாட்டத் துக்கு லீவு எடுத்தார். ஏன் இதெற்கெல்லாம் லீவு எடுத்தீர்கள் என்று கேட்டதற்காக அவர் கோபத்தைக் காட்டி 9 மணிவாக்கில் வர ஆரம்பித்தார். ஒரு நல்ல ஆசிரியர் நல்லா வந்து கொண்டிருந்தவர் எல்லா அறைகளையும் வந்து பார்த்து பிள்ளைகளை ஆட விடாமல் பார்த்தவர் எல்லோரையும் போல்ற் றான் நானும் என்றுசொல்லாமல் சொல்ல வாரம்பித் தார்.அரபி நடத்துவதில் கூட சம்பளம் கொடுக்க லாம் என்று பார்த்தால் ஒருவன் முடியாது என்று சொல்லி விட்டான். இன்னொருத்தி அரபி சொல்லிக் கொடுக்க ஒரு ஆலிமாவை நான் ஏற்பாடு செய்தவுடன் தான் ஒதுங்க ஆரம்பித்தாள். இப்ப இவ்விரு வருமே ஸ்கூ லிலும் மத்ரஸாவிலும் இல்லை. காரணம் இருவரை யுமே நான் செல்லமாக அடித்தேன். எங்களை எங்கள் பெற்றோர் அடித்து வளர்க்க வில்லை. நீங்கள் மட் டும் எப்படி அடிக்கலாம் என்று நேரடியாகச் சொல்லி முகத்திலடித்தாற்போல் பேசி ஆள்களைத் திரட்டி ஒரு பெரிய ஆர்ப்பாட்டமே செய்து விட்டது. அமை திக்குப் பெயர் போன அதற்கு இவ்வளவு கோபம் வருமா என்று எனக்கு பெரிய ஆச்சரியம். யாரை நான் நேசிக்க ஆரம்பிப்பேனோ அங்கிருந்து தான் எனக்கு எதிர்ப்பு வரும். இன்னொரு ஆலிமா என் தோதுக்கு நடக்கக் கூடியவள். எது சொன்னாலும் நடக்கக்கூடியவள் . அவள் இப்போது திருமணம் நடந்து விட்டதால் கொஞ்சம் தடுமாற்றம்.ஆனால் எதையும் செய்யத் தயாராக இருக்கிறாள். அல்லாஹ் இந்த ஒருத்தியை யாவது என் தோதுக்கு நடக்க வைப்பானாக.

16/03/2020

நமது அல் அமீன் பள்ளி கடனில் உள்ளது என்பது யாருக்காவது தெரியுமா?நம் பள்ளி மட்டுமல்ல. நிறையப் பள்ளிகள். ஏன் தெரியுமா? capitation fee என்று இருந்தது.அது தான் பள்ளி உரிமையாளர் களைக் காப்பாற்றியது.இப்ப அது வாங்கக் கூடாது.வாங்கினால் அங்கீகாரம் ரத்து என்று அரசு எழுதி வாங்கியுள்ளது. முன்பு அங்கீகாரம் வாங் காமல் ஸ்கூல் நடத்த முடிந்தது. இப்ப அது முடி யாது.இந்த கட்டணம் ஆயிரக் கணக்கில். நாம் மாதந்திரக் கட்டணத்தையே இன்னும் ஆயிரம் ஆக்க வில்லை. முதலீடு கட்டணம் நாம் இந்த ஊரில் வசூலித்ததே இல்லை. அது தான் capitation fees பார்த்ததே இல்லை. ரஹ்மத்துல்லாஹ் பள்ளிவாசல் பொறுப்பை ஏற்று என்னென்னவெல்லாம் இழந்து கொண்டிருக்கிறானோ அது தான் தனியார் சுய நிதிப் பள்ளிகள். கீழக்கரை புலவர் முஸ்தபா சொன்னதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன் . ஏர்வாடி எலைட் ஸ்கூல் ஓனர் ஜின்னா வேறு நல்ல தொழில் பார்க்கிறார். அதிலிருந்து இதற்குப் போடுகிறார். சிக்கல் பஷீர் அப்படித்தான். வேறு நல்ல தொழிலில் இருப்பவர்கள் அதிலிருந்து இதற்குப் போட்டால் நன்மையை நாடி நடத்தலாம். இதிலிருந்து எடுக்க நினைத்தால் முடியாது. நம் கடன் சுமார் 200 கோடி .புலவர் முஸ்தபா சொன்னார். முன்பெல்லாம் பள்ளி நடத்தி வீடு கட்டினார்கள். இப்போது வீடுகள் விற்றுப் பள்ளி நடத்துகிறார்கள்.

13/03/2020

இப்போது பத்தாம் வகுப்புப் படிக்கிற பசங்கள் இடத்தில் பதினொன்னுக்கு இங்கே வருவீர்களா என்று கேட்டோம். எல்லோரும் ஆமாம் வருவோம் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது நடக்க அல்லாஹ் உதவ. இப்பள்ளியின் உரிமையாளர் என்ற முறையில் நான் எதற்காக ஆரம்பித்தேனோ அதன் பலனை மக்கள் முழுமையாக அனுபவிக்க எம் துஆ. நூர்தீன் அது இது என்று ஒரு ஸ்பொன்சர் சொன்னான். கடைசியில் சில இலட்சம் தந்தார் என்று அதை gst வரி இருப்பதால் இப்போதைக்கு பாங்கிலிருந்து எடுக்க முடியாது என்றான். அவனிடமிருந்து ஒரு துரும்பு கூட வர வில்லை. என்பதை இதன் மூலம் சொல்லி வைக்கிறேன்.

04/03/2020

இப்போது பள்ளியில் எல்லா வகுப்புகளுக்கும் தேர்வு நடக்கிறது. 11 12 க்கு பொதுத் தேர்வு நடக்கிறது. அரபிக் மேல் வகுப்புகளுக்கு நானும் என் ஆலி மாக்களும் காலை 9 மணிக்கு நடத்துகிறோம். தேர்வில் வெற்றி யடைய வாழ்த்துகிறோம.

09/02/2020

அரபி வகுப்பு நடத்துவதில் சிறிய வகுப்புகளுக்கு ஆள் உண்டு. பெரிய வகுப்புகளுக்கு ஆள் இல்லை. ஆகவே நானே காலை ஒன்பது மணி முதல் 9.30 வரை 9, 1௦,11 ,12 வகுப்புகளுக்கு நான் தான் நடத்து கிறேன்.பெண் பிள்ளைகளுக்கு நடத்த மஷ்ஹூதா ஆலிமா வை நான் சொல்லி வைத்து செவ்வாய் வியாழன் இரண்டு நாட்கள் மட்டும் டைம் கொடுக் கிறது. ஆனால் பெண் பிள்ளைகள் அதனிடமே மத்தியான வகுப்புகளில் போய் பாடம் கொடுக்கி றார்களாம். ஆண் பிள்ளைகள் மட்டுமே என்னிடம் வருகிறார்கள். நான் எழுதிய அம்மயத் ஜுஸ்உ மட்டும் மதரசா வராத வர்களுக்கு மட்டுமே கேட்கிறோம்.அல்லாஹ் அதை முழுமையாக்கித் தருவானாக.

Address

Old Mosque Street
Valinokkam
623528

Alerts

Be the first to know and let us send you an email when Al Ameen Matriculation School, Valinokkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category