Gnanam friends

Gnanam friends Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gnanam friends, Education, erode, Uthangarai.

18/09/2014

கம்பீரம் குறையாத கம்பீர் அணி!
By dn, ஹைதராபாத்
First Published : 18 September 2014 03:39 AM IST
புகைப்படங்கள்

சென்னை அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில், ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோல்வியின் விளிம்பில் இருந்த கொல்கத்தா அணிக்கு முக்கியமான கட்டத்தில் ஆண்ட்ரூ ரùஸல், டென் டஸ்சடே அதிரடியாக அரைசதம் அடித்து கை கொடுத்தனர்.

சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடர் ஹைதராபாதில் புதன்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தாவும், சென்னை அணியும் மோதின.

முதலில் பேட் செய்த சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கல்லம் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே தப்பிப் பிழைத்த ஸ்மித் அதை சாதகமாகப் பயன்படுத்தத் தவறினார். அவர் 13 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கைகொடுத்த சுழற்பந்து: கொல்கத்தா கேப்டன் கம்பீர் சுழற்பந்து வீச்சாளர்களிடம் பந்தைக் கொடுத்தார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, யூசுஃப் பதான் ஆகியோர் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தினர். 19 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த மெக்கல்லம், யூசுஃப் பதான் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

பொறுப்புடன் ஆடி வந்த ரெய்னா (28 ரன்கள்), சுனில் நரைன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். டூ பிளஸ்ஸிஸ் (14 ரன்கள்), சாவ்லா பந்தில் நடையைக் கட்டினார். பின்னர் கேப்டன் தோனி, பிராவோ இருவரும் இணைந்து ரன் ரேட்டை உயர்த்தினர்.

நரைன் பந்தில் தடுமாற்றம்: கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரில் பிராவோ இரண்டு சிக்ஸர்கள் பறக்க விட்டார். ஆனால், சுனில் நரைன் வீசிய அடுத்த ஓவரின் ஐந்து பந்துகளையும் பிராவோ வீணடித்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்ஸரும் அடித்தார் தோனி.

இருபது ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. தோனி 35 ரன்களுடனும் (20 பந்து), பிராவோ 28 ரன்களுடனும் (28 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடக்கமே அடி: கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் மன்விந்தர் பிஸ்லா (2 ரன்கள்), கம்பீர் (6 ரன்கள்) மற்றும் மணிஷ் பாண்டே (டக் அவுட்) ஆகியோரை நெஹ்ரா அனுப்பி வைத்தார். மொஹித் சர்மா பந்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார் யூசுஃப் பதான்.

சூரிய குமார் யாதவ் 19 ரன்களில் வெளியேற டென் டஸ்சடே, ரùஸல் ஆகிய இருவரும் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.

ரùஸல் அரைசதம்: ரவீந்திர ஜடேஜா ஓவரில் இரண்டு சிக்ஸர், பவுண்டரி அடித்து வியக்க வைத்தார் ரùஸல். மறுமுனையில் நின்றிருந்த டஸ்சடேவும் சிக்ஸர் பறக்க விட, கொல்கத்தா அணி வெற்றியை நோக்கி நடைபோட்டது.

மொஹித் சர்மா வீசிய 16-வது ஓவரில் இரண்டு சிக்ஸர், பவுண்டரி விளாசி அரைசதத்தைக் கடந்தார் ரùஸல். சென்னை ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த ரùஸலை, அடுத்த ஓவரில் நெஹ்ரா பெவிலியன் அனுப்பி வைத்தார். அவர் சரியான சமயத்தில் 58 ரன்கள் (25 பந்துகள்) அடித்தார்.

மறுமுனையில் நின்றிருந்த டஸ்சடே பொறுப்புடன் ஆடி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

19 ஓவரில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து கொல்கத்தா வெற்றி பெற்றது. டஸ்சடே 51 ரன்களும் (41 பந்து), சாவ்லா 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை தரப்பில் நெஹ்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரùஸல் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

18/09/2014
21/08/2014

Ebola virus disease
From Wikipedia, the free encyclopedia
"Ebola" redirects here. For other uses, see Ebola (disambiguation).
Ebola virus disease
Classification and external resources
7042 lores-Ebola-Zaire-CDC Photo.jpg
A 1976 photograph of two nurses standing in front of Mayinga N., a person with Ebola virus disease; she died only a few days later due to severe internal hemorrhaging.
ICD-10 A98.4
ICD-9 065.8
DiseasesDB 18043
MedlinePlus 001339
eMedicine med/626
MeSH D019142

Ebola virus disease (EVD) or Ebola hemorrhagic fever (EHF) is a disease of humans and other primates caused by an ebolavirus. Symptoms start two days to three weeks after contracting the virus, with a fever, sore throat, muscle pain and headaches. Typically, vomiting, diarrhea and rash follow, along with decreased functioning of the liver and kidneys. Around this time, affected people may begin to bleed both within the body and externally.[1]

The virus may be acquired upon contact with blood or bodily fluids of an infected animal.[1] Spreading through the air has not been documented in the natural environment.[2] Fruit bats are believed to carry and spread the virus without being affected. Once human infection occurs, the disease may spread between people, as well. Male survivors may be able to transmit the disease via semen for nearly two months. To make the diagnosis, typically other diseases with similar symptoms such as malaria, cholera and other viral hemorrhagic fevers are first excluded. To confirm the diagnosis, blood samples are tested for viral antibodies, viral RNA, or the virus itself.[1]

Prevention includes decreasing the spread of disease from infected animals to humans. This may be done by checking such animals for infection and killing and properly disposing of the bodies if the disease is discovered. Properly cooking meat and wearing protective clothing when handling meat may also be helpful, as are wearing protective clothing and washing hands when around a person with the disease. Samples of bodily fluids and tissues from people with the disease should be handled with special caution.[1]

No specific treatment for the disease is yet available.[1] Efforts to help those who are infected are supportive and include giving either oral rehydration therapy (slightly sweet and salty water to drink) or intravenous fluids.[1] The disease has a high risk of death, killing between 50% and 90% of those infected with the virus.[1][3] EVD was first identified in Sudan and the Democratic Republic of the Congo. The disease typically occurs in outbreaks in tropical regions of sub-Saharan Africa.[1] From 1976 (when it was first identified) through 2013, the World Health Organization reported a total of 1,716 cases.[1][4] The largest outbreak to date is the ongoing 2014 West Africa Ebola outbreak, which is affecting Guinea, Sierra Leone, Liberia and Nigeria.[5][6] As of mid-August 2014, 2,127 suspected cases resulting in the deaths of 1,145 have been reported.[7] Efforts are under way to develop a vaccine; however, none yet exists.[1]

19/08/2014

RAD is a world-wide leader in the design and manufacture of high quality robotic and automation tooling solutions. We strive to invent exciting, useful products and technologies that solve automation challenges while making your environment more productive. RAD has been a trusted source for innovative, practical, well-engineered solutions and outstanding service for over 25 years.



Collision Sensors
Robotic Collision Sensors mechanically detect when the robot arm* has encountered an obstruction, absorb the crash energy and quickly stop the robot to prevent costly damage to the robot arm and tooling.


Compliance Devices
Robotic Compliance Devices (Alignment Devices) compensate for fixture misalignments, positioning errors, shifting parts, and/or variances in part tolerances by providing the robot arm* with a little 'give' so production continues uninterrupted.


Deburring Tools
RAD Compliant Deburring Tools enable your robot or automated system to economically and consistently: deburr, degate, deflash, chamfer, brush, finish and grind.


Grippers
All RAD robotic grippers are pneumatic and use parallel motion to enable you to effectively grip, manipulate, and place objects in your automated manufacturing process. All RAD robot grippers are designed to be extremely durable for maximum life.

Our solutions are used in a variety of industries including medical, aerospace, manufacturing, automotive, defense and energy. RAD products can operate on a robot wrist, linear actuator, gantry, plasma cutter, laser cutter, pick & place machine or other automated equipment. Our end effector line includes Collision Sensors, Compliance Devices (Alignment Devices), Finishing & Deburring Tools, Grippers, and Automatic Tool Changers

19/08/2014

ஒகேனக்கல் ஆற்றில் பரிசல்களை இயக்கத் தடை நீக்கம்

By dn

First Published : 19 August 2014 02:31 PM IST

புகைப்படங்கள்

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததையடுத்து, பரிசல்களை இயக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மாவட்ட நிர்வாகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கர்நாடக மாநிலத்தில் பெய்த பருவ மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியதையடுத்து, காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நொடிக்கு 20 ஆயிரம் கன அடி முதல் 80 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து இருந்தது.

எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்ததுள்ளது.

இதையடுத்து, உரிய பாதுகாப்புடன் காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்க அனுமதியளித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

இருப்பினும், பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் இடங்களில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடையும் வரை அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கிறது.

14/08/2014

மூளையை பலப்படுத்தும் உணவுப் பொருட்கள்

By dn

First Published : 28 July 2014 01:08 PM IST

புகைப்படங்கள்

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவில் தான் சிறந்த உடல் நலத்தை பெற முடியும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? அப்படியானல் எந்த வகையான உணவை தினமும் எடுத்துக் கொள்ளலாம்....

மாணவர்களின் மூளை அன்றாடும் பலவிதமான வேலைகளை செய்து வருகின்றது. பல்வேறு பிரச்னைகள் தீர்ப்பதில், கற்றல், படித்தல், தேடுதல் என்று பல உயிரி-வேதியியல் செய்முறைகளை செய்து வருகின்றது.

இந்த பணிகளை தொடர்ச்சியாக செய்வதற்கு மூளையின் செல்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.

ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம் மூளைக்கு செல்லும் நரம்புகள் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மாணவர்கள் வகுப்பறையில் முழு ஈடுபாட்டுடன் இயங்குவதோடு, இலக்குகளை சுலபமாக கைபற்ற உறுதுணையாக உள்ளது.

ஊட்டச்சத்து அதிகமாக உள்ள பலவகை உணவு பொருட்கள் மூளை இயக்கத்திற்கும், செயல்பாட்டிற்கும் உதவி புரிகிறது.

• பைபர் நிறைந்த ஓட்ஸ், ஓட்ஸ், பழுப்பு அரிசி, கோதுமை, ரொட்டி மற்றும் பழுப்பு பாஸ்தா போன்ற உணவு பொருட்களும், தாணியங்களும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

• ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்களை எடுத்துக் கொள்வதால் மூளையில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக பணிபுரிய உதவுகிறது. இந்த ஓமேகா பெரும்பாலும் கடல் உணவுப் பொருட்களான மீனில் அதிகம் காணப்படுகிறது.

• கருப்பு திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

• நட்ஸ் போன்ற உணவு வகைகளில் வைட்டமீன் இ அதிகமாக உள்ளது. இதை, தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

• கீரை வகைகளில் உயர்தர மெக்னீஷியம், பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது மூளையை வலுவடைய செய்கிறது.

• ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது.

• வைட்டமீன், பி6, வைட்டடமீன் பி12, கால்சியல், மெக்னீஷியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் பாலில் அதிகம் உள்ளது.

• அன்றாடம் ஒரு காய்கறியாவது உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் உட்கொள்ளும் உணவு பொருட்களில் தினமும் இதை பின்பற்றி வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, மூளையும் வலுவு பெறுகின்றது.

13/08/2014

அஜித் 56வது படம்: இயக்குனரை திக்கு முக்காட வைத்த ரசிகர்கள்

By Sasikumar Balakrishnan

First Published : 12 August 2014 01:05 PM IST

புகைப்படங்கள்

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. எனவே, இந்தப் படம் அனைவராலும் அஜித்55 என அழைக்கப்பட்டு வருகின்றது. இப்படத்திற்குப் பிறகு அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிற பெரிய கேள்வி நிலவியது.

இந்நிலையில் அஜித்தின் 56வது படத்தை இயக்கும் வாய்ப்பு வீரம் படத்தின் இயக்குனர் சிவாவிற்கே கிடைத்திருக்கிறது. ஒரே வரியில் கதை சொல்லி அஜித்திடம் ஒ.கே. வாங்கிவிட்டாராம் சிவா. இந்த செய்தி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதை வெளிப்படுத்தும் வகையில் இன்று (ஆகஸ்ட் 12) பிறந்தநாள் காணும் இயக்குனர் சிவாவை வாழ்த்துக்களால் திக்கு முக்காட வைத்துக் கொண்டிருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நன்றி தல ரசிகர்களே...’’ என டுவிட் செய்திருக்கிறார். ரசிகர்கள் மட்டுமின்றி கூடவே, திரை பிரபலங்களிடமிருந்தும் சிவாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. ஹிட் கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணைந்து படம் பண்ண எந்த நடிகருக்கும் ஆசை இருக்கும். அஜித்துக்கும் அப்படியே.

Address

Erode
Uthangarai
91

Telephone

8680088116

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gnanam friends posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category