09/08/2026
🌿 குரும்பூர் அதாயி அரபிக் கல்லூரி 🌿
📅 தேதி : 09.08.2026
அல்ஹம்துலில்லாஹ்…!
நமது குரும்பூர் அதாயி அரபிக் கல்லூரிக்கு நம் *பாசமிகு* *ஆருயிர் அண்ணல் அஃலா உஸ்தாத்* அவர்கள் பொன்வருகை புரிந்து, மாணவர்களுக்கு நீண்ட நேரம் பயனுள்ள நல்லுபதேசங்களையும், வாழ்வியல் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்கள்.
அவர்களுடன் நம் மரியாதைக்குரிய *அஜ்மல் மௌலா* அவர்களும், Athayi Knowledge Cityயின் முதல்வர் Y. *அப்துல் பாசித் உஸ்தாத்* அவர்களும், திண்டுக்கல் அதாயி அரபிக் கல்லூரியின் முதல்வர் அல்ஹாபிழ் *முஹம்மது அஹ்சன் உஸ்தாத்* அவர்களும் வருகை புரிந்து, மாணவர்களை ஊக்கப்படுத்தி சிறப்புரையாற்றினார்கள்.
மாணவர்களிடையே நடைபெற்ற இந்த சிறப்பான சந்திப்பில், “ஒரு அதாயி மாணவன் எப்படி இருக்க வேண்டும்?” என்பதிலிருந்து, அவன் தனது கல்வி, ஒழுக்கம், சிந்தனை, செயல்பாடு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் எவ்வாறு சிறந்து விளங்க வேண்டும் என்பது வரை பல்வேறு முக்கியமான விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
📚 கல்வி என்பது வெறும் பட்டத்திற்காக அல்ல!
ஒரு மாணவன் அரபிக் கல்வியையும் மார்க்க ஞானத்தையும் பெறுவதோடு, உலகக் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும். மார்க்க அறிவு, நவீன கல்வி, மொழித்திறன், சிந்திக்கும் திறன், தலைமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்த கல்வியே ஒரு முழுமையான கல்வியாகும்.
அந்த வகையில், அதாயி கல்விக் குழுமத்தின் கல்விப் போக்கு மாணவர்களை வெறுமனே ஒரு பட்டதாரியாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதல்ல. மாறாக, மார்க்க அறிவும், உலக அறிவும், சிறந்த ஒழுக்கமும், தலைமைத்துவ பண்பும் கொண்ட ஒரு முழுமையான மனிதனாக மாணவர்களை உருவாக்குவதே அதன் உயரிய நோக்கமாகும்.
✨ ஒரு அதாயி மாணவன் எங்கு சென்றாலும், அவனது பேச்சிலும் நடத்தையிலும் அவன் பெற்ற கல்வியும் ஒழுக்கமும் வெளிப்பட வேண்டும்.
அவனது ஆடை, பேச்சு, நடத்தை, சிந்தனை, நேர்மை, பொறுப்பு, பிறருடன் பழகும் விதம் என அனைத்திலும் அதாயி கல்வியின் அடையாளம் தெரிய வேண்டும். தனக்காக மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கும் பயனுள்ள ஒருவராக உருவாக வேண்டும் என்பதும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த சிறப்பான சந்திப்பு மாணவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், புதிய சிந்தனைகளையும், தங்களது கல்வி மற்றும் வாழ்க்கைப் பயணத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் உத்வேகத்தையும் அளித்தது.
இறுதியாக, மாணவர்கள், கல்லூரி, அதாயி கல்விக் குழுமம் மற்றும் அனைவரின் நலனுக்காக நடைபெற்ற துஆவுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்…! 🤲🏻
اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علماً