Seed Tiny Kids

Seed Tiny Kids Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Seed Tiny Kids, Education, Indra Nagar Extension, Turaiyur.

02/05/2021
உண்ண கனி,ஒதுங்க நிழல்,உடலுக்கு மருந்து,உணர்வுக்கு விருந்து,அடைய குடில்,அடைக்க கதவு,அழகு வேலி,ஆட தூலி,தடவ தைலம்,தாளிக்க எ...
09/04/2021

உண்ண கனி,ஒதுங்க நிழல்,
உடலுக்கு மருந்து,உணர்வுக்கு விருந்து,
அடைய குடில்,அடைக்க கதவு,
அழகு வேலி,ஆட தூலி,
தடவ தைலம்,தாளிக்க எண்ணை,
எழுத காகிதம்,எரிக்க விறகு,

மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!!
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!!

பிறந்தோம் ,தொட்டில் மரத்தின் உபயம்,
நடந்தோம் ,நடைவண்டி மரத்தின் உபயம்,
எழுதினோம் பென்சில் பலகை மரத்தின் உபயம்,
மணந்தோம் மாலை-சந்தனம் மரத்தின் உபயம்,
கலந்தோம் கட்டில் என்பது மரத்தின் உபயம்,
துயின்றோம் தலையணை பஞ்சு மரத்தின் உபயம்,
நடந்தோம் பாதுகை ரப்பர் மரத்தின் உபயம்,
இறந்தோம் சவப்பெட்டி பாடை மரத்தின் உபயம்,
எறிந்தோம் சுடலை விறகு மரத்தின் உபயம்,
மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்,
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்,
மனிதா மனிதனாக வேண்டுமா மரத்திடம் வா ஒவ்வொரு மரமும் போதி மரம்!!
வைரனின் கவிதை...ஆழமானது! மரத்தைப் போலவே...!

12/03/2021

Hello Teachers!! We are looking for Montessori teachers to various schools with fun, artistic,charm, positive and sportive attitude to teach mixed ages 2.5 - 5 years! If you're searching for schools please contact:9865695773

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் என தாய்க்கும் ...சந்தேசி ஆத்தி ஹை,ஹூமே டாப்தே ஹை என தனக்கு கிடைத்த கடித...
01/09/2020

அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம் என தாய்க்கும் ...
சந்தேசி ஆத்தி ஹை,ஹூமே டாப்தே ஹை என தனக்கு கிடைத்த கடிதத்தை ஒரு இராணுவ வீரன்கொண்டாடுவதும்..
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்,
ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்...
என காதலர்கள் வரை 80,90களில் ஒருவரை ஒருவர் நினைத்ததும் பார்ப்பதற்கும்,குறளை கேட்பதற்கும் இன்று போல் அன்று தொழில்நுட்பங்கள் இல்லை.. ஆயினும் எழுதப்பட்ட வரிகள் கண்ணீரையும், எழுத்து வடிவில் உணர்வுகளையும்..கடிதத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, பதில் எழுதி பதிலுக்கு காத்திருந்த தருணங்கள் அலாதியானது.. கடிதம் எழுத படிக்க தெரியாதவர்கள் கிராமத்து பட்டதாரியை படுத்திய பாடுகளை பல திரைப்படங்களிலும் கண்டு ரசித்தோம்... பாரதிராஜாவின் மண்வாசனையில் வீரன்னனின் வரிகளுக்காக காத்திருந்த முத்துப்பேச்சி,ஒச்சாயிக்காக வாத்தியார் எழுதிய கடிதங்கள் இன்றும் காட்சியாய் திரை செய்கிறது..வரிக்கு வரி பாசமும், ஒரு முறை எப்படியாவது பார்த்து விடமுடியாதா என கடல் தாண்டி சென்றவருக்காக கடிதங்களும், பதிலுக்கு காத்திருந்த நாட்களும் மிக அற்புதமானது.முழு ஆண்டு தேர்வெழுதி மே மாதம் எப்பொழுது வருமோ என அச்சத்தோடு கலந்த மகிழ்ச்சியில் கோலி குண்டு விளையாடும் போது போஸ்ட்மேனை நிறுத்தி "அண்ணே ரிசல்ட் வந்துருக்கா"என கேட்ட தருணங்கள்,உத்திரகிரியை பத்திரிகை, பொங்கல் வாழ்த்து அட்டைகள், வேலைக்கான அரசாணை,தந்தி சேதி என நம் வாழ்வில் பெரும் பங்கினை ஆற்றிய பெருமை கடிதத்தையே சாரும்.
ஆம் செப்டம்பர் 01 இன்று உலக கடித நாள்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் 2014-ஆம் ஆண்டு கொடையாக உலகிற்கு பரிசளித்தார்.இன்றைய தினத்தில் நமது டிஜிட்டல் தகவல் தொடர்புகளை தாண்டி, நமக்கு பிடித்தமான ஒருவருக்காவது ஒரு கடிதம் எழுதுவோம்....

Address

Indra Nagar Extension
Turaiyur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Seed Tiny Kids posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category