23/04/2020
+2 விற்கு பிறகு
#என்ன_படிக்கலாம்?
#எங்கு_படிக்கலாம்? 📚
23/04/2020
#நெஸ்ட்_நுழைவுத்_தேர்வு
-
#கல்வி_நிறுவனம்
1. National Institute of Science Education and Research (NISER), Bhubaneswar
2. Centre for Excellence in Basic Sciences (CEBS), Mumbai
#படிப்புகள்
M.Sc. Integrated Course - (B.Sc+M.Sc)
Physics,
Chemistry,
Biology &
Mathematics
#புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (NISER),
#மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் (CEBS) ஆகியவை
இந்திய அணுசக்தித் துறையின்கீழ் செயல்படும் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள்.
#அறிவியல்_துறையில் ஆய்வை மேற்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஏற்ற முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இவை.
#பிளஸ்_டூ வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளை (உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் உள்ளிட்டவை) எடுத்துப் படித்த மாணவர்கள் இந்தக் கல்வி நிலையங்களில் உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.
(5-year Integrated M.Sc.) படிக்கலாம். அதற்கு நெஸ்ட் நுழைவுத்தேர்வை (National Enthinee Sareen Test - NEST) எழுத வேண்டும்.
#அணுசக்தித்_துறையில் பணிபுரிய திறமையான அறிவியல் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்படும் இந்தப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கு ஊக்கம் அளிக்கப்படும்.
#நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையத்தில் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. படிப்பில் 170 இடங்களும் மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் கல்வி நிலையத்தில் 45 இடங்களும் உள்ளன. இதுதவிர, ஜம்மு - காஷ்மீர் மாணவர்களுக்காக இந்தக் கல்வி நிலையங்களில் தலா இரண்டு இடங்கள் உள்ளன.
#இந்தப் படிப்புகளில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் #மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
#மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை வழங்கும் இன்ஸ்பயர் ஃபெல்லோஷிப் (INSPIRE Fellowship) திட்டத்தின் கீழ் இந்த உதவித்தொகை வழங்கப்படும். அத்துடன், கோடைக்கால அல்லது குளிர் கால விடுமுறையில் புராஜெக்ட்டுகளை மேற்கொள்வதற்காக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். இங்கு படிக்கும் திறமையான மாணவர்கள்
#பாபா அணு ஆராய்ச்சி மையம் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கு நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவார்கள்.
#இந்தப் படிப்பில் சேர பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
#தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய நகரங்கள் உள்பட மொத்தம் 60 நகரங்களில் 'நெஸ்ட்' நுழைவுத் தேர்வை எழுதலாம். நுழைவுத் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்தில் இருக்கும். தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும்.
இந்த வினாத்தாளில் ஐந்து பிரிவுகள் இருக்கும்.
#இதில்_பொதுப்_பிரிவுக்கான (General Section) கேள்விகள் அனைவருக்கும் பொதுவானவை. வானியல், அறிவியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், Environmental engineering போன்ற பாடப் பிரிவுகளிலிருந்து வரலாற்று ரீதியான முக்கிய நிகழ்வுகள் (Major Historical Milestones) குறித்து மாணவர்களின் அறிவை சோதனை செய்யும் வகையில் வினாக்கள் இருக்கும். பொதுப் பிரிவுக்கு #நெகட்டிவ்_மதிப்பெண்கள்_கிடையாது.
#இதற்கான பாடத்திட்டம் எதுவும் வரையறுக்கப்படவில்லை.
#இந்த_நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி.(NCERT), சி.பி.எஸ்.இ.(CBSE), 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம்வகுப்பு பாடத்திட்டத்தையொட்டியதாகவே இருக்கும். பத்தாம் வகுப்புக் கணிதத்தை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளும் இதில் கேட்கப்படலாம்.
#கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்மூலம், இத்தேர்வு எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அத்துடன், அந்தக் கேள்வித்தாள்களை வைத்துக் கொண்டு மாதிரித் தேர்வையும் எழுதிப் பார்க்கலாம்.
#தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, கிரீமிலேயர் அல்லாத ஓ.பி.சி.மாணவர்களுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு உண்டு.
https://www.nestexam.in/
#மேலும் மற்ற படிப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள உடனே அணுகவும்
#திருவேல்_அகாடமி
Thiruvel Academy
திருவண்ணாமலை
செல்: 88 70 760 558