Jeevakaa - Centre For Peace & Happiness

Jeevakaa - Centre For Peace & Happiness Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jeevakaa - Centre For Peace & Happiness, Educational Research Center, 12/22 Paygopuram 11 th Street, Tiruvannamalai.

ஜெயசீல ஸ்டீபன் அவர்களின் எல்லா புத்தகங்களும் (ஆங்கிலம்) ஜீவகா நூலகத்தில் உள்ளன, வேண்டுவோர் வந்து பயன்படுத்திக் கொள்ளவும்...
28/02/2024

ஜெயசீல ஸ்டீபன் அவர்களின் எல்லா புத்தகங்களும் (ஆங்கிலம்) ஜீவகா நூலகத்தில் உள்ளன, வேண்டுவோர் வந்து பயன்படுத்திக் கொள்ளவும்.

Jeevakaa - Centre For Peace & Happiness
9944236236 / 9944755008

தம்மபதம் தொடர் வகுப்புகள் Cohort 3தனிநபர்களின் பௌத்தம் குறித்த தொடர்ச்சியான கேள்விகளுக்கு பல ஆண்டுகளாகவே உரையாடல்களை நிக...
22/02/2024

தம்மபதம் தொடர் வகுப்புகள் Cohort 3

தனிநபர்களின் பௌத்தம் குறித்த தொடர்ச்சியான கேள்விகளுக்கு பல ஆண்டுகளாகவே உரையாடல்களை நிகழ்த்தி வருகிறேன், சில நண்பர்கள் புத்தரின் பேருரைகளை வகுப்பாக எடுக்கச் சொல்லி கேட்டுக் கொண்டதன் விளைவாக கடந்த சில வருடங்களாக என் தனிப்பட்ட அனுபவங்களை, வாசிப்புகளை வரிசைப்படுத்தி தொகுத்து வகுப்புகளாக திட்டமிட்டிருக்கிறேன்.

வராத்திற்கு இரண்டு வகுப்புகள், 13 வாரம்.
Zoom செயலி மூலம் வகுப்புகள் நிகழும்,
வகுப்பு துவங்கும் நாள் 02.03.2024

நேரம் சனி மற்றும் ஞாயிறு காலை 6.00 - 7.30

Course Structure

•Weekly readings from the Dhammapada and supplementary texts
•Group discussions and reflections on assigned readings
•Guided meditation sessions focusing on key themes from the Dhammapada
•Writing exercises and journaling prompts to deepen understanding and integration of teachings
•Apply teachings in daily life and cultivate mindfulness and compassion

பதிவு, மேலதிக விவரங்களுக்கு
Whatsapp +919944236236

Jeevakaa - Centre For Peace & Happiness க்கு உஷா அக்கா வரைந்து கொண்டு வந்த ஓவியம். ஒவ்வொரு கோட்டிலும் உயிர் இருக்கிறது, ...
22/09/2023

Jeevakaa - Centre For Peace & Happiness க்கு உஷா அக்கா வரைந்து கொண்டு வந்த ஓவியம்.

ஒவ்வொரு கோட்டிலும் உயிர் இருக்கிறது, ஜீவகா நிறைந்தது. அன்பும் நன்றியும் அக்கா Usha Naganathan

உணவை மையமாக வைத்து ஆரோக்கியம், நுகர்வு, கட்டுப்பாடுகளென மூன்று தளத்திலும் துறவிகளுக்கும் ஏனையோருக்கும் புத்தர் பேசியது, ...
03/09/2023

உணவை மையமாக வைத்து ஆரோக்கியம், நுகர்வு, கட்டுப்பாடுகளென மூன்று தளத்திலும் துறவிகளுக்கும் ஏனையோருக்கும் புத்தர் பேசியது, போதித்தது, பயிற்சி அளித்தது, உரையாடல் நிகழ்த்தியது என்னவெல்லாம்னு பேசப் போறேன். வழக்கம் போல ஒருமணி நேரம் நான் பேசுறேன்.

Video Link in Comment 👇

"நஞ்சில்லா சோறும் நல்ல கல்வியும்", மூன்று நாட்கள் கல்வி மற்றும் நஞ்சில்லா வேளாண்மைக்கான பயிற்சி. உடல் மனம் இரண்டின் ஆரோக...
27/06/2023

"நஞ்சில்லா சோறும் நல்ல கல்வியும்", மூன்று நாட்கள் கல்வி மற்றும் நஞ்சில்லா வேளாண்மைக்கான பயிற்சி. உடல் மனம் இரண்டின் ஆரோக்கியத்தையும் மையப்படுத்தி மூன்று நாட்கள் களப்பயிற்சியாக அமையும்.

நஞ்சில்லா சோறு:

பயிற்றுநர்கள் : சந்திரசேகர்.

*உணவின் வரலாறு.
*நல்ல உணவு நமக்கேன் தேவை?
*விதை சேகரிப்பு, நேர்த்தி பரவலாக்கம்.
*நஞ்சில்லா உணவு உற்பத்தி, களப்பயிற்சி.
*இடுபொருட்கள் தயாரிப்பு.

நல்ல கல்வி :

பயிற்றுநர்: பாஸ்கர் மணிமேகலை.

*எது கல்வி?
*கல்வி - நேற்று இன்று நாளை.
*குழந்தைகள் எவ்வாறு கற்கின்றனர்?
*உரையாடல் வழி கற்றல் முறைகள்.
*வளரிளம் பருவம், சிக்கல் தீர்வுகள்.
*சுற்றுச்சூழலும் கல்வியும்.

மேலே கூறிய தலைப்புகளில் பயிற்சிகள் அமையும். அதிகபட்சம் பனிரெண்டு நபர்கள் மட்டும் பதிவு செய்ய இயலும், இது குழந்தைகளுக்கான பயிற்சி அல்ல.

நாள் 30 ஜூன் 1,2 ஜூலை 2023
வெள்ளி, சனி, ஞாயிறு.

இடம் : ஜீவகா, திருவண்ணாமலை மற்றும் செங்காந்தள் வனம், சோர்பனந்தள்.

கட்டணம் : 2100 ரூ உணவு தங்குமிடம் உட்பட.

மேலும் விவரங்கள், முன்பதிவிற்கு : 099442 36236

பாலினம் சார்ந்து நமக்கிருக்கும் புரிதல்களை செழுமைப்படுத்த நண்பர்களுடன் மாலை நேர  உரையாடல், உடலும் உள்ளமும் இணைந்து நாம் ...
13/06/2023

பாலினம் சார்ந்து நமக்கிருக்கும் புரிதல்களை செழுமைப்படுத்த நண்பர்களுடன் மாலை நேர உரையாடல், உடலும் உள்ளமும் இணைந்து நாம் யாரென்பதையும், எப்படி அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறோமோ அதற்கான சுதந்திரம், உரிமை எல்லோருக்கும் இருக்கிறது என்பதையும் அழுத்தம் திருத்தமாக அனைவரும் உணரவேண்டும், பாலின புரிதல், உடல் அரசியல், உளவியல் என பன்முக தலைப்புகளில் நேரடி மற்றும் இணையவழி நிகழ்வாக புழுதி இலக்கிய இதழும், ஜீவகாவும் இணைந்து திட்டமிட்டுள்ளோம், நண்பர்கள் இணைந்து கொள்ளவும்.

Puzhuthi and Jeevakaa invites for an engaging and thought provoking discussion on gender equality as we explore ways to empower voices and transform our society. This event aims to shed light on the importance of gender equality, the challenges faced, and the progress made in achieving a more inclusive and equitable world for all.

"Bodies That Matter "
16.06.2023 Staurday
6.00-07.30 PM

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/84108546671?pwd=K1dFOXpjSWg0QU9BR1dHb0hhOWdkZz09

Zoom ID: 841 0854 6671
Passcode: equality

"நிலமும் பொழுதும்" வளரிளம் பருவத்து குழந்தைகளுக்கான ஐந்து நாட்கள் செயல்வழி கற்றல் நிகழ்வு. அறிவியல்,  நஞ்சில்லா உணவு உற்...
16/05/2023

"நிலமும் பொழுதும்" வளரிளம் பருவத்து குழந்தைகளுக்கான ஐந்து நாட்கள் செயல்வழி கற்றல் நிகழ்வு.

அறிவியல், நஞ்சில்லா உணவு உற்பத்தி, அரசியல், தம்மா பயிற்சிகள், ஜவ்வாது மலைத்தொடர் பயணம், வளரிளம் பருவத்து குழந்தைகளுக்கான சந்தேகங்களை உரையாடல் வழி தெளிவு பெறுதல் என் பல்வேறு செயல்வழி கற்றலுக்கான ஒருங்கிணைப்பை ஜீவகா செய்யவுள்ளது.

• பத்து முதல் பதினைந்து வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு மட்டும்.

• பத்து குழந்தைகளுக்கு மட்டும் இடம் உள்ளது.

• ஐந்து நாட்களும் செல்போன் பயன்பாடு கிடையாது, அவசர அழைப்பிற்கு இரண்டு எண்கள் வழங்கப்படும்.

• முதல் நாள் ஜீவகா திருவண்ணாமலையில்
அறிவோடு அறிவியல், நண்பர் அறிவரசன் அவர்களோடு அறிவியல் கற்றல்.

• இரண்டு மற்றும் மூன்றாம் நாள், செங்காந்தள் வனம், சோர்பனந்தல் கிராமத்தில், நண்பர்கள் சந்திர சேகர் அவர்களோடு நஞ்சில்லா உணவு உற்பத்திக்கான களப்பயிற்சி, உள்ளூர் மக்களோடு உரையாடல், உள்ளூர் நஞ்சில்லா பல்சுவை உணவுகளோடு, ஆட்டம் கொண்டாட்டம், ஆறு, குன்றுகள் என, உடம்பு மூளை இரண்டுக்கும் சமஅளவில் பயிற்சி.

• நான்கு மற்றும் ஐந்தாம் நாள், அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்தான அறிமுகத்தோடு தம்மபத பயிற்சிகள், அவர்களின் வயதுக்கு ஏற்ப செயல்வழி கற்றல், ஜவ்வாது மலைத்தொடர் பயணம்.

• நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் பயிற்சி திட்டமிட்டுள்ளோம்.

வாய்ப்பும் விருப்பமும் இருக்கும் நண்பர்கள் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்கலாம்.

உள்ளூர் பயணங்களுக்கு ஆட்டோவும், ஜவ்வாது மலைத்தொடர் பயணத்திற்கு காரும் ஏற்பாடு செய்யவுள்ளோம்.

உணவு மற்றும் தங்குமிடத்திற்கான அழகான திட்டம் வடிவமைத்துள்ளோம்.

ஐந்து நாட்களுக்காகும் செலவுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் தொகை 3500/- கட்டணமாக வைத்துள்ளோம். அதற்கு மேலாகும் செலவுகளை ஜீவகாவும் செங்காந்தள் வனமும் ஈடு செய்வோம்.

19.05.2023 வெள்ளிக்கிழமை காலை 08.00 மணிக்கு குழந்தைகள் ஜீவகாவில் இருக்குமாறு பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளவும், 23.05.2023 மாலை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்து கொள்ளவும்.

ஜீவகா திருவண்ணாமலை
பாஸ்கர் 9944236236

Address

12/22 Paygopuram 11 Th Street
Tiruvannamalai
606601

Telephone

+919944236236

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jeevakaa - Centre For Peace & Happiness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jeevakaa - Centre For Peace & Happiness:

Shortcuts

Share