We Change

We Change Changes thru Visual Media

தமிழை பாதுகாத்து நமக்குத் தந்த பனை மரத்தை நாம் பாதுகாக்க சரியான தருணம் இது...  பனம்பழங்கள் மரத்திலிருந்து கொட்டிக் கொண்ட...
17/09/2025

தமிழை பாதுகாத்து நமக்குத் தந்த பனை மரத்தை நாம் பாதுகாக்க சரியான தருணம் இது... பனம்பழங்கள் மரத்திலிருந்து கொட்டிக் கொண்டிருக்கிறது... பனை மரங்களை முற்றிலும் அழித்து ஒழிக்க தொடர்ச்சியாக சூழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. 800 க்கும் மேற்பட்ட பலன்களை வாரி வழங்கும் பூலோக கற்பக விருட்சத்தை சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாத்து மீட்டெடுப்போம்... ஆளுக்கு ஒரு பழத்தையேனும் அருகில் உள்ள ஏரி குளங்கள் மற்ற இடங்களில் நட்டு அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து விட்டுச் செல்வோம்...
photo courtesy: புதுயுகம் தொலைக்காட்சி தலைமை நிர்வாக அதிகாரி கார்மல் அவர்கள்

யார் அந்த வி.ஐ.பி. சொல்லுங்க...பரிசுகளை வெல்லுங்க...ஹாபியில் ஈடுபாடுக்கொண்ட சினிமா, அரசியல், மற்ற துறைகள் சார்ந்த நட்சத்...
06/08/2025

யார் அந்த வி.ஐ.பி. சொல்லுங்க...
பரிசுகளை வெல்லுங்க...

ஹாபியில் ஈடுபாடுக்கொண்ட சினிமா, அரசியல், மற்ற துறைகள் சார்ந்த நட்சத்திரங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா..?
ஒரு நல்ல முயற்சிக்காக அந்த நட்சத்திரத்தின் பெயர், அவரின் ஹாபி எது, என எங்களுக்கு அடையாளப்படுத்துங்கள். குழந்தைகளின் மனதில் ஹாபி என்கிற நல்லொழுக்கத்தை விதைக்கும் விதமாக இந்த
‘ஹாபி திருவிழா’ முன்னெடுக்கப்பட உள்ளது. முன்னுதாரணமாக விளங்கும் நட்சத்திரங்களின் பங்களிப்பு இந்நிகழ்விற்கு வலுசேர்க்கும். ஹாபி வி.ஐ.பி.க்களை அடையாளப்படுத்துங்கள். பாராட்டு சான்றிதழ்களுடன் அட்டகாசமான பரிசுகளை வெல்லுங்கள்.

விரைவில்...
ஹாபி திருவிழா
இடம்: சென்னை அரசு அருங்காட்சியகம், எழும்பூர்.

தொடர்புக்கு: 98410 21069
இன்ஸ்டாகிராம்: gandhiworldfoundation
பேஸ்புக்: Gandhi World Foundation

26/06/2025

வாருங்கள் கொண்டாடி பாதுகாப்போம்...

25/06/2025

https://youtu.be/hpk4ixXa-hE
பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் வகையில்

23/06/2025
25/05/2025

ஒரு கல்... மூணு மாங்கா...

உடல் ஆரோக்கியம், விவசாயம் மற்றும் சிறுவியாபாரிகளுக்கு ஆதரவு...

24/05/2025

தாவரம் (தா"வரம்") இது இல்லையேல் எதுவும் இல்லை...

07/05/2025

சிறிய வியாபாரிகளுக்கு ஆதரவு அளியுங்கள்,,, இந்த காணொளி உங்கள் கண்களை ஈரமாக்கும்...

பெரிய கடைகளைவிட பல மடங்கு விலை குறைவாக விற்கிறார்கள்... சைக்கிள், தள்ளுவண்டி மற்றும் சாலையோரம் என்பதால் கடைக்கு வாடகை இல்லை கரண்ட் பில் இல்லை வேலையாட்கள் இல்லை... இதனால் கடையில் விற்கப்படும் விலையை விட குறைந்த விலைக்கே விற்பனை செய்கிறார்கள். இதை புரிந்தவர்கள் ஆதரவு தருகிறார்கள் ஒரு சிலர் சிறு வியாபாரிகளிடம் துணி எடுப்பதை கவுரவ குறைச்சலாகவும், விலை குறைவாக இருப்பதினால் தரம் குறைவாக இருக்குமோ? என நினைத்து வாங்கமறுக்கிறார்கள். இந்த விற்பனையால் அவர் குடும்பம் இரண்டு வேலையாவது உணவு உண்ணுவார்கள் குழந்தைகளை படிக்க வைப்பார்கள்.

இன்று சாலையோர வியாபாரிகளிடம் உணவு, உடை மற்றும் பல தரமான பொருட்கள் கிடைக்கின்றன... உழைத்து சாப்பிட நினைக்கும் இதுபோன்ற சிறு வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி அவர்களை ஊக்கப்படுத்துவது நம் கடமை...

சிறு வணிகர்களின் நலன் காத்திட ஆன்லைன் வணிகத்தை முடிந்தவரை தவிர்ப்போம்.வணிகர் நலம் காப்போம்.

தயவு செய்து சிறிய வியாபாரிகள ஆதரியுங்கள் நான் இன்றளவும் சாலை ஓர வியாபாரிகளிடம் உணவுடன் மற்ற பொருட்களை வாங்க தவறுவதில்லை... இன்றிலிருந்து நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதி எடுப்போமாக... இந்த காணொளியை உருவாக்கிய பாண்டிச்சேரி சரவணன் அவர்களை நான் வணங்குகிறேன்...
கண்ணீர்துளிகளுடன்...
எம் எல் ராஜேஷ்

"இன்னும் பத்து வருடத்தில் 🔥🌋🌅வெயில் இப்போது உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும். அப்போது நம்மால் தாங்க இயலாது. குழந்தை...
06/05/2025

"இன்னும் பத்து வருடத்தில் 🔥🌋🌅வெயில் இப்போது உள்ள அளவை விட ஒரு மடங்கு அதிகரிக்கும். அப்போது நம்மால் தாங்க இயலாது. குழந்தைகள் காப்பாற்றுவதற்கு சிரமம். இந்த வருடமே ஒவ்வொரு ஊரிலும் குழந்தைகளுக்கு கொடும் வெயிலால் கோடை கொப்புளம் வந்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது. நம்ம வீட்டை சுற்றி இடமிருப்பின் முடிந்த அளவிற்கு மரங்களை நடுங்கள் !...
மரம் நடுவோம்!
இயற்கையை காப்போம்!
வரும் ஆவணி மாதம் மழை காலம் துவங்கும். அப்போது தமிழகத்தில் 10 கோடி மர கன்றுகள் நட இப்போதே திட்டமிடுவோம்.....
மரக்கன்றுகள் உற்பத்தியாளர்கள்,
வன துறை, பள்ளி தாளாளர்கள்,
உயர் பதவிகளில் இருப்போர்,
பிரபலங்கள், ஆன்மீக தலைவர்கள்,
அனைத்து மதங்களின் குருமார்கள்,
கிராம தலைவர்கள், ஊர்தலைவர்கள்,
அனைத்து கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி செயல்படுவோம்.
அதற்கு இப்போதிருந்தே தயார் ஆகிக்கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு குழுவை இப்போதே உருவாக்கி கொள்ளுங்கள்......
1 கோடி குடும்பமும் தலா 10 மரக்கன்றுகள் நட்டு சாதிக்க முடியும். ஒவ்வொரு மர கன்றிற்கும் அடுத்த 1 வருடம் தினமும் 1 லிட்டர் நீர் விட்டால் போதும்.
இதே போல் சில வருடங்கள் செய்தால், 2030க்குள் தமிழகமும் குளிர்ந்து போகும்.
அவரவர் ஊர்களில் சிறு சிறு குழுக்களாக இன்றே ஆயத்தம் ஆகுங்கள். கிராமங்களில் இன்னும் அதிக மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடுங்கள்.
இதற்கான வாட்ஸ்அப் குழுக்கள் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இன்றே துவங்குங்கள்.
மரக்கன்றுகள் நடுங்கள்,
அல்லது மரக்கன்றுகள் வாங்கிக் கொடுங்கள் அல்லது மரக்கன்றுகள் நட உதவுங்கள்.
மரக்கன்றுகள் தேவைக்கு உங்களுக்கு அருகில் உள்ள நாற்று பண்ணைகளில், நர்சரிகளில் இப்போதே முன் பதிவு செய்யுங்கள்!
பொது இடங்களில்.....
1. புங்கன் மரம்
2. வெப்ப மரம்
3. ஆவி மரம்
4. அரச மரம்
5. குருவி பழம் என்ற சர்க்கரை பழம், லட்டு பழம் இவைகளை வளர்ந்த கன்றுகளாக பார்த்து வாங்கி நடுவது நன்று. இதில் புங்கன் மரத்தை ஆடு மாடுகள் கடிக்காது.
நீர் வழித்தடங்கள் அருகில்,
1. பூவரசு மரம்
2. பனை மரம்
பாதுகாப்பு உள்ள வீட்டு அருகில் உள்ள இடங்களில் அவரவர் விருப்ப மர கன்றுகள் நடலாம்.
1. கறிவேப்பிலை
2. லட்ச கொட்டை கீரை
3. தேக்கு
4. நாட்டு மா மரம்
5. நாட்டு பலா
6. நாட்டு அத்தி
7. குமிழ்
8. மகா கனி
9. மலை வேம்பு
போன்ற மரங்கள் நடலாம்.
வழிபாட்டு தலங்கள்....
1. மர மல்லி
2. மகிழம் மரம்
3. மனோரஞ்சிதம்
4,பாரிஜாதம்
5. புன்னை மரம்
6. செண்பக மரம்
7. மருதாணி போன்றவற்றை நடலாம்
2030இல் பச்சைப்பசேல் என்ற தமிழகம் உருவாக்குவோம்.
இனி வரும் காலங்களில் உண்டாக இருக்கும் கோடை கால கடும் சூரிய வெப்ப அலைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். விழிப்புணர்வு செய்யுங்கள்.
மரக்கன்றுகள் நடுவதற்கு ஆவணி மாதத்தில் முதல் மழை பெய்ததும் 1 நாள் பொது விடுமுறை அறிவிக்க வேண்டுகிறோம்.
வெப்ப அலைகளுக்கெதிரான ஒரு போர் போல் தான் இதுவும்!
ஒன்றுபட்டு வென்று காட்டுவோம்!
நன்றே செய்வோம்!
அதனை இன்றே துவங்குவோம்!

மது மற்றும் சூதுவிற்கு அடிமையானவர்களை, மீட்டெடுக்க அவர்களை சரி செய்ய, மறுவாழ்வு மையங்கள் மற்றும்  மருத்துவமனைகள் பல ஆண்ட...
17/04/2025

மது மற்றும் சூதுவிற்கு அடிமையானவர்களை, மீட்டெடுக்க அவர்களை சரி செய்ய, மறுவாழ்வு மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன... பல பேர் இதற்கும் மறுவாழ்வு மையங்கள் வரும் காலங்களில் வந்து விடும், என்ற கூற்றை நிரூபிக்க வகையில் போதையை விட கொடூரமாக அனைவரையும் விழுங்கி கொண்டிருக்கும்... மொபைல் அடிமைகளை மீட்டெடுக்கும் மருத்துவமனை தனது விளம்பரத்தின் மூலம் கடை விரிக்க தொடங்கிவிட்டன... மருத்துவமனைகள் நிரம்பி வழியும் முன் நாம் விழித்துக் கொள்வோம்... இல்லையேல் மொபைல் எனும் அரக்கன்... நம் சந்ததிகளை மாயவளையில் சிக்க வைத்துக் கொள்ளும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு...
இடம் வடபழனி
அன்புடன்... எம் எல் ராஜேஷ்

14/09/2023

REMIND HISTORYINDIA FIRST ROCKET - INDIA NAME CHANGE TO BHARATH ...

Address

Gummudipoondi
Tiruvallur
601201

Website

Alerts

Be the first to know and let us send you an email when We Change posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category