Alumni & School Development Trust - Pollikalipalayam

Alumni & School Development Trust - Pollikalipalayam A small effort of former students of the school to support the continued development of Pollikalipalayam Government School.. Let's work together...

08/08/2024
திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் நமது மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடையே வாசிப்பு பழக்க...
06/07/2024

திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் நமது மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்திடவும் பொது அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தினசரி பத்திரிகைக்களை வழங்கிடும் முகமாக மாவட்டத்தில் உள்ள 104 அரசு பள்ளிகளுக்கு ஆண்டு முழுவதும் பள்ளி வேலை நாட்களில் இலவசமாக வழங்கிட ஒரு திட்டத்தை முன்னெடுத்து அவன் ஒரு பகுதியாக நமது அரசு பள்ளியில் கடந்த 03/07/2024- ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியினை நமது பள்ளியின் முன்னாள் மாணவரும் ரோட்டரி சங்கத்தின் தலைவருமான Rtn.MPHF . Dr.K. மோகன சுந்தரம் மற்றும் சங்கத்தின் திட்ட இயக்குநர் ஆகியோர் துவக்கி வைத்தனர். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை திருமதி. C.P. கிருஷ்ணவேணி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ மாணவியர், முன்னாள் மாணவர்கள், முன்னாள் மாணவர் சங்கம் & பள்ளி வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் இரத்தினசாமி, முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பங்களிப்பிற்கு நம் அனைவரின் சார்பில் ரோட்டரி சங்கத்திற்கு நன்றிகள்....

திருப்பூர் தாராபுரம் ரோடு, பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பணிபுரிந்து வந்த தலைமை ஆசிரியை திருமதி சி.ப. கிருஷ்ண...
06/07/2024

திருப்பூர் தாராபுரம் ரோடு, பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பணிபுரிந்து வந்த தலைமை ஆசிரியை திருமதி சி.ப. கிருஷ்ணவேணி அவர்களின் பணி நிறைவினை ஒட்டி அவருக்கு பாராட்டு விழாவும் பிரிவுபச்சார விழாவும் பொல்லிக் காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உகாயனூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கனகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யு. எஸ். பழனிசாமி, பள்ளி வளர்ச்சி குழு மற்றும் முன்னாள்கள் மாணவர் அறக்கட்டளையின் தலைவர் இரத்தினசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இராஜேந்திரன் கணக்கம் பாளையம் அரசு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்தி பேசினர் .நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன ... இறுதியில் தலைமையாசிரியை கிருஷ்ணவேணி ஏற்புரை வழங்கினார். தமிழ் ஆசிரியர் பரந்தாமன் நன்றி கூறினார்.

06/07/2024
26/06/2024

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நமது பள்ளியின் மதிப்பிற்குரிய தலைமையாரியை திருமதி. கிருஷ்ணவேணி அவர்கள் இம்மாதம் 30-ஆம் தேதி பணி நிறைவு பெற்று ஓய்வு பெறுகிறார். அவருக்கான பாரட்டு விழாவும், பிரிவுபச்சார நிகழ்ச்சியும் வருகின்ற 29-ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நமது பள்ளியில் நடபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நமது முன்னாள் மாணவர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுறார்கள்.

வணக்கம்.

With Mohan K Karthik – I just got recognised as one of their top fans! 🎉
29/05/2024

With Mohan K Karthik – I just got recognised as one of their top fans! 🎉

இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கட்டணமின்றி அறிந்து கொள்ளலாம்.
11/05/2024

இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கட்டணமின்றி அறிந்து கொள்ளலாம்.

06/05/2024

இன்று வெளியான + 2 தேர்வு முடிவுகளில் நமது பொல்லிக் காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 124 மாணவ மாணவிகளில் 123 பேர் தேர்ச்சி பெற்று 99.19 சதவீதத்தினை பெற்று பள்ளி பெருமை கொள்கிறது .... இதற்காக நேரம் காலம் பார்க்காமல் கற்பித்த பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் ...

வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ...

நமது  பள்ளியில் ஆசிரியர் தின விழா நேற்று 05/09/2023)  சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்...
06/09/2023

நமது பள்ளியில் ஆசிரியர் தின விழா நேற்று 05/09/2023) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

கடந்த 10, மற்றும் +2 இறுதி தேர்வுகளில் மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் இரத்தினசாமி, பொருளாளர் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் இராஜேந்திரன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்..

தலைமை ஆசிரியை திருமதி. கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

Address

Https://goo. Gl/maps/A8dwtVJd97Cjg6fg 7
Tirupur
641665

Telephone

+919442225500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alumni & School Development Trust - Pollikalipalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category