16/08/2025
லிம்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 79வது சுதந்திர தின விழா : பள்ளியின் செயலாளர் A.காஜா முஹையதீன் அவர்கள் தேசிய கொடியேற்றினார்.
விழாவிற்கு லிம்ரா பள்ளியின் தலைவர் ஹாஜி K.முகமது இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் பொருளாளர் A.அப்துல் அஜிஸ் அவர்கள் முன்னிலை வகிக்க, பள்ளியின் துணை தலைவர் எஸ்.இ.பி.ஏ.சையது இப்ராகிம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
பள்ளியின் செயலாளர் A.காஜா முஹையதீன் அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. பின்பு சுதந்திர தினத்தைப் பற்றி தமிழ்,ஆங்கிலம், ஹிந்தி, அரபி உள்ளிட்ட மொழிகளில் மாணவ, மாணவியர்கள் பேசினர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் M. சிக்கந்தர் பாட்ஷா அவர்கள், செயலாளர் R.கான் முகமது அவர்கள்,பொருளாளர் N.ராபின் (எ) சையது முகமது இப்ராஹிம் அவர்கள் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் பள்ளியின் செயற்குழு உறுப்பினர்கள் K.ஜமால் முகமது அவர்கள், A. அப்துல் காதர் அவர்கள், K.முகமது ஹாரூன் அவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ராயல் சகுபர் அலி அவர்கள், புரோஸ் கான் அவர்கள், உசேன் முகமது அவர்கள், அப்பாஸ் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் A. முகமது ரபீக் அவர்கள், சமஸ்கான் பள்ளிவாசல் செயலாளர் . J.சமஸ்கான் அவர்கள், அல்அக்சா பள்ளி தலைவர் இதயத்துல்லா அவர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக பள்ளியின் நிர்வாக அலுவலர் ஹாஜி J.சக்கரை முகமது அவர்கள் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினரும், முதல்வர் N.ஜாஸ்மின் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.