15/07/2026
நம் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் {கல்வி வளர்ச்சி நாள்) விழா கொண்டாடப்பட்டது. காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவப்பட்டது. தலைமை ஆசிரியர் சுதாநந்தினி வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் தலைமையாசிரியர் ராமசாமி அவர்கள் தலைமை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை,ஓவியம் பொது அறிவு ஆகிய போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.