17/10/2025
பேட்டை புனித அந்தோனியார் உயர்நிலைப் பள்ளியில் 17.10.2025 அன்று பேட்டை தீயனைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் அவர்களால் மாணவ மாணவியர்களுக்கு புகையில்லா மற்றும் மாசிலா தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் இயற்கை பேரழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.பெல்சிட்டா அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். மாணவ மாணவிகள் ஆர்வமுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மாணவ மாணவிகள் தீபாவளி கொண்டாடும் சார்பான உறுதி மொழியை எடுத்தனர் .இறுதியில் ஆசிரியர் திரு. தங்கராஜ் நன்றி கூற தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.