Senaithalaivar Higher Secondary School

Senaithalaivar Higher Secondary School find old schoolmates!

😎🤩🥳
28/09/2022

😎🤩🥳

😎
29/05/2022

😎

இன்று 50வது ஆண்டு திருமணநாள் காணும் விக்கிரமசிங்கபுரம் சேனைத்தலைவர் பள்ளிகளின் நிர்வாகி அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குக...
03/06/2017

இன்று 50வது ஆண்டு திருமணநாள் காணும் விக்கிரமசிங்கபுரம் சேனைத்தலைவர் பள்ளிகளின் நிர்வாகி அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்..
=====================

26/02/2016

Multiplication easy way to learn...

19/02/2016

ஜெயித்துக் கொண்டே இரு, நீ வளரும் வரை அல்ல..
உன்னை வெறுத்தவர்கள் வாழ்த்தும் வரை.

Aathisudi is written by Avvaiyaar the great Tamil Poet===========================ஒளவையார் - ஆத்திசூடி===============1. அ...
09/01/2016

Aathisudi is written by Avvaiyaar the great Tamil Poet
===========================
ஒளவையார் - ஆத்திசூடி
===============
1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார். (Tamil Poet)

31/12/2015
எண்ணங்களை மாற்றுங்கள்... எதிர்காலம் மாறும்!!!========================================‘என் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது...
22/12/2015

எண்ணங்களை மாற்றுங்கள்... எதிர்காலம் மாறும்!!!
========================================

‘என் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது? எனக்கு மட்டும் ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது? எல்லாமே என் தலையெழுத்து...’ என, சிலர் விரக்தியுடன் புலம்புவதுண்டு. இம்மாதிரியான நபர்கள், தமக்கு நேரிடும் பாதிப்புகளுக்கு வேறு யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்றுதான் காரணம் என, பழிபோட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர்; உண்மை அவ்வாறில்லை!

நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் வெற்றி, தோல்விகள், சவால்கள், பிரச்னைகள், துயரங்கள் என, அனைத்திற்கும் நம் மனதில் தோன்றும் எண்ணங்களே அடிப்படைக் காரணிகள்.

ஒரு விமான பயிற்சி நிறுவனம், கல்லூரி மாணவர்கள் 100 பேரை தேர்வு செய்து, ‘பைலட்’ பயிற்சி அளித்தது. ஒரே மாதிரியான பயிற்சி கையேட்டையே வழங்கியது. பயிற்சியாளர்கள், அனைவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சியே அளிக்கப்பட்டது. அது, ஓராண்டு பயிற்சித் திட்டம். இருந்தபோதிலும், ஆறு மாதத்திலேயே 30 பேர் பயிற்சியை சிறப்பாக முடித்தனர்.

சிலர் இரண்டாண்டு கடந்தும் தேர்ச்சி பெற முடியவில்லை. சிலர், பாதிக் கட்டத்திலேயே ஓடிவிட்டார்கள். இதற்கு காரணம் அவர்களது விதியோ, கண்ணுக்கு புலப்படா சக்திகளின் சதியோ அல்ல! வெற்றி பெற்ற மாணவர்கள் எடுத்துக்கொண்ட லட்சிய எண்ணமும், தீவிர பயிற்சியும், விடாமுயற்சியும், தோல்வி கண்டவர்களிடம் இல்லை!

ஒருவரது வாழ்வில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது அவரது சமூக, பொருளாதார வசதிகள் அல்ல. மனதில் தோன்றி மறையும் எண்ணங்களே! வாகனத்தை எப்படி எரிபொருள் இயக்குகிறதோ, அதே போன்றுதான், நித்தம் நித்தம் நம் மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் நம்மை இயக்குகின்றன. ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நம்மை தள்ளிச் செல்கின்றன. தோன்றும் எண்ணங்கள் நல்லவையாக இருப்பின், வாழ்வின் நகர்வும் நற்பயனை நோக்கி இருக்கும். தீயதாக இருப்பின், தீங்கிழைக்கும்!

ஒருவரது மனதில், ‘நான் ஓட்டப்பந்தய வீரனாக வேண்டும்’ என்ற எண்ணம் தோன்றுமானால், எந்நேரமும் அதைப் பற்றியே அவரது சிந்தனையும், செயல்பாடும் அமையுமானால், உலகளவில் யாரெல்லாம் ஓட்டப்பந்தயத்தில் சாதித்திருக்கிறார்கள் என, தகவல் திரட்டுவார். தனக்குரிய உடற்பயிற்சி ஆசிரியரை தேடி அலைவார். அதிவேகமாக ஓடத்தேவையான உடல், மனத் தகுதிகளை வளர்த்துக் கொள்வார். பந்தயம் எங்காவது நடந்தால் பறந்து சென்று பங்கேற்பார்; வெற்றி பெறுவார்!

அதுவே, ஒருவரது மனதில் எவ்வித நோக்கமும் இன்றி தவறான எண்ணங்கள் தோன்றுமானால், தவறான நண்பர்களையும், ஒழுக்கமான வாழ்வியல் நெறிகளுக்கு பொருந்தாத பழக்கங்களையும் ஏற்படுத்திக்கொள்கிறார். மீளமுடியா நிலைக்கு தள்ளப்பட்டு சமூக அந்தஸ்து, மரியாதையை இழந்து, சுய வாழ்க்கையையும் இழந்துவிடுகிறார். இந்நிலையில், ‘என் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது? எல்லாம் தலைவிதி’ என புலம்பினால், அது அறியாமை.

‘எண்ணங்கள்’ என்ற அஸ்திவாரத்தின் மீதே ‘எதிர்காலம்’ எனும் கனவுமாளிகை கட்டி எழுப்பப்படுகிறது. எனவே, எண்ணங்களை நல்லவையாக மாற்றுங்கள். அது, உங்களின் எதிர்காலத்தையே மாற்றும்; பிரகாசமாக்கும்!

Source: Dinamalar

24/11/2015

Address

Tirunelveli
627425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Senaithalaivar Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category