14/02/2024
www.thirukural.ai
சாட் ஜிபிடி காலம் இது. அறிவுத் தேடலின் புதிய திறவுகோல். அப்படியான புதிய வழிமுறை மூலம் இனி திருக்குறள் எனும் தமிழ் மறையை அணுக முடியும்.
மனப்பாடமாக குறளை வாசிப்பது ஒரு வகை . குறள்களை படித்து புரிந்து அது சொல்லும் பொருளை ஒன்றோடு ஒன்று இணைத்து ஒப்புமை படுத்தி பார்ப்பதும் மற்றுமொரு வகை.
இப்படி குறளை அறிந்த அறிஞர்களோடு உரையாடுவது மிக பயனுள்ள செயலாக இருக்கும். நமக்கு விருப்பமான செயலும் கூட.
அப்படியான அறிவை செயற்கை அறிவு தொழில் நுட்பத்தில் எளிமையாக்கியுள்ளார்கள் நம் இளைஞர்கள்.
குறள் குறித்த நமது சந்தேகங்கள், கேள்விகள் போற்றவற்றை இந்த thirukural.ai யிடம் கேட்டால் அரை நிமிடத்தில் எளிமையாகவும் தெளிவாகவும் பதில் தருகிறது.
மழை குறித்து வள்ளுவர் என்ன சொல்லிருக்கிறார்?
காதலும் ஊழும் இணைந்து வரும் குறள் எத்தனை?
தாய்மை குறித்து சொல்லுவது என்ன?
இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு இந்த thirukuralAi பதில் சொல்லும்.
இந்த thirukural.ai மிக அற்புதமான முன்னெடுப்பு. இதை சாத்தியப்படுத்திய இளைஞர்களுக்கு நம் தமிழ் வணக்கம்.
https://www.thirukural.ai/
An open source contribution from Dream Tamilnadu for the 10 crore tamils worldwide ❤️🙏