26/01/2026
25.01.26 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரதிய பண்பாட்டு வகுப்பில் விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய இளைஞர் தின விழா ஆன்லைனில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சி ஒட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஓவிய போட்டி மாறுவேட போட்டி கவிதை Poster கிரியேஷன் போன்ற பல போட்டிகள் மூன்றாம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.
40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைன் போட்டி கலந்து கொண்டனர்.
10 ஆசிரியர்கள் நடுவராக இருந்து சிறப்பாக வெற்றியாளர்களை தேர்வு செய்தார்கள்
மாலை 4 மணிக்கு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகி உயர்திரு ராஜேந்திரன் ஜி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
வெற்றி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் வெற்றியாளருக்கான online சான்றிதழ் வழங்கப்பட்டது.
பங்குபெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது.