Vijay E-Academy

Vijay E-Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vijay E-Academy, Education & Learning, Tirunelveli.

சரியான மொழிபெயர்ப்பும் கூகுள் மொழிபெயர்ப்பும் .. உதாரணமாக இது நான் செய்த மொழிபெயர்ப்பு... அந்த துறையை/தகவலை/செய்தியை உள்...
27/09/2024

சரியான மொழிபெயர்ப்பும் கூகுள் மொழிபெயர்ப்பும் ..

உதாரணமாக இது நான் செய்த மொழிபெயர்ப்பு...
அந்த துறையை/தகவலை/செய்தியை உள்வாங்கி மொழிபெயர்த்தால் மட்டுமே கேள்வி சரியாக புரியும்

The percentage of Out-of-Pocket expenditure in total health expenditure in 2021-22 was:
2021-2022 ஆம் ஆண்டில் மக்கள் செலவழித்த மருத்துவம் சார்ந்த சொந்த செலவினம் எத்தனை சதவீதம் குறைந்துள்ளது ?

24/09/2024

இன்றைய குருப் இரண்டு மெயின் வகுப்பில்..

Bt பருத்தி
தங்க ரக அரிசி
Flavr Savr தக்காளி

போன்ற முக்கிய தலைப்புகள்

தரமான Notes உடன் நடத்தப்பட இருக்கின்றன.

கட்டாயம் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்

For class Link

https://chat.whatsapp.com/INj7HVzQyolLF0Kb7zuzlm

24/09/2024

GROUP II MAINS 2024

135+ கேள்விகளுக்கு மேல் சரியாக பதிலளித்தவர்கள் மேற்கொண்டு குருப் இரண்டு மெயின் தேர்வுக்கு படிப்பதா வேண்டாம என குழப்பம் என்பது தேவையற்றது.

மெயின் தேர்வு பாடத்திட்டம் தான் PRELIMS ல இருக்கு... அதுவும் அப்படியே... மொழித் தேர்வில் இலக்கணமும்..
நீங்க Syllabus அ படித்தாவே இரண்டுக்கும் தான் தயாராவீர்கள் ..

அப்புறம் எதுக்கு படிக்கவா வேண்டாமா ன்னு யோசனை ?

சரி ஒரு வேளை ரிசல்ட் நெகடிவ் ன்னு வந்தா என்ன பண்ண அதானே ?

ரிசல்ட் வரதுக்கு மூணு மாசம் இருக்கு..

அந்த மூணு மாசத்துல படிக்காம இருக்க போறீங்களா ?
அப்டின்னா அடுத்த தோல்விக்கு தயாராகிக் கொண்டு இருக்கீறீர்கள் என்று அர்த்தம்.

தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் நதி தான் கடைசியில் கடலில் சங்கமிக்கும்...

சாக்கடையில் தேங்குவதா அல்லது கடலில் சேர்வதா என்பது உங்கள் முடிவு...

21/09/2024

GROUP 2 2024 மெயின் தேர்வுக்கு தயாராக விரும்பும் நபர்கள் இந்த வாட்ஸ் அப் குழுவை பயன்படுத்தி கொள்ள அழைக்கிறேன்

எளிமையாக்கப்பட்ட குருப் 2 மெயின் தேர்வு பாடத்திட்ட வடிவம்
20/09/2024

எளிமையாக்கப்பட்ட குருப் 2 மெயின் தேர்வு பாடத்திட்ட வடிவம்

15/09/2024

திருந்த வேண்டிய டி என்.பி.எஸ்.சி

நீங்க நீண்ட காலமா டி.என்.பிஎஸ்.சி தேர்வுகளை ஆராய்ந்து வந்தா ஒரு உண்மை புலப்படும். யாரும் கண்டுக்காத தேர்வுகளில் சாதாரண கேள்விகளை கேட்டு கமுக்கமாக இருக்கும் தேர்வாணையம் பல லட்சம் பேர் எழுதும் குருப் 1,2,4 தேர்வுகளுக்கு மட்டும் தன்னோட மொத்த வித்தையையும் இறக்கி விடும்.

அதாவது எப்டின்னா கடினமான கேள்விகளை கேப்பது.. சொப்பனத்திலும் கண்டிராத தாய் மாமன் வேட்டி தென்னங் கீத்து சீலை ன்னு கேள்வி கேட்டு தேர்வர்களை அதிர்ச்சி வைத்தியத்திற்கு உள்ளாக்கும். இவங்க கேள்வி கேக்றது தேர்வர்களை அரசுப் பணிக்கு உகந்தவர்களா ன்னு சோதிக்கிறத விட்டுட்டு கேள்வி கேட்கும் பேராசிரியர்களின் மேதாவித்தனத்தை சுய விளம்பரம் செய்ற மாறி இருக்கும். “எங்கிட்டயும் சீப்பு இருக்கு.. நாங்களும் சீவுவோம்” என்கிற மொமன்ட். அப்டி தான் இருந்துச்சு நேத்து நடந்த குருப் இரண்டு தேர்வின் பொது அறிவு கேள்விகள்.

விதிவிலக்கா பொது ஆங்கிலம் கேள்விகள் எளிமையாக இருந்தன. நல்லா படித்து பொது ஆங்கிலத்தில் 90 க்கு மேல் சரியாக பதிலளித்தவர்கள் மெயின் தேர்வுக்கு செல்வதற்கு பிரகாசமான வாய்ப்பு உண்டு. பொதுத் தமிழையும் வச்சு செய்ததாக தகவல்.

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு கேள்விகள் இன்றைய காலக் கட்டத்தில் ஒரு நாட்டை முன்னேற்ற என்னனென்ன ஒரு தேர்வருக்கு தெரிந்து இருக்க வேண்டுமோ அதை பரிசோதிக்கும் வண்ணம் இருக்க வேண்டுமே தவிர

வெறும் மொழி,கலாச்சாரம்,இனம் ன்னு பழைய பஞ்சாங்கத்தை பாடிட்டு இருந்தா நாடு எப்படி முன்னேறும் ?

இன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள "பிழையின்றி எழுதுவோம்" கையேடு அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல். முயற்சிக்கு பாராட்டு...
27/08/2024

இன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள "பிழையின்றி எழுதுவோம்" கையேடு அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல்.

முயற்சிக்கு பாராட்டுகள்

To download

Group II Vacancies 2030Exam Date 28.9.2024
16/08/2024

Group II

Vacancies 2030

Exam Date 28.9.2024

COMBINED TECHNICAL SERVICES EXAM
15/05/2024

COMBINED TECHNICAL SERVICES EXAM

25/04/2024

ஆங்கிலம் ஒரு ஆயுதம் . ஆங்கிலம் பல வாசல்களுக்கான ஒரு திறவுகோல்

தாய்மொழியாம் தமிழ் மொழியில் படித்தாலும்,படித்திருந்தாலும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள்..

உங்கள் பலமே வேறு.அந்த பலம் வேகமாக சுழலும் பூமியில் உங்களை தற்காக்கும்.

ஆங்கிலம் தெரியாமல் நீங்கள் கோப்புகளை புரிந்து கொள்ள முடியாது.

அரசு அரசாணை வெளியிடுவதில்லை. நீதிபதி தீர்ப்புகளை வெளியிடுவதில்லை. கணினி இயங்குவதில்லை.

அவ்வளவு ஏன் ? தேர்வாணையங்கள் ஆங்கில வழி கேள்விகளே இறுதியானது என பகிரங்கமாக கூற காரணம் என்ன ?

ஆங்கிலம் உலக மொழி.

தமிழ் மொழியைத் தவிர்த்து மற்ற அனைத்து துறைகளின் தகவல்களும் ஆங்கில மொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டவையே.

ஆங்கிலம் கற்றுக் கொண்டு வெற்றி பெரும் வாய்ப்பை அதிகப் படுத்திக் கொள்ளுங்கள்

JUNIOR REPORTER
15/03/2024

JUNIOR REPORTER

Address

Tirunelveli

Alerts

Be the first to know and let us send you an email when Vijay E-Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Vijay E-Academy:

Shortcuts

Share