All is One and Always One

Call Directions Contact the school

All is One and Always One This is a new philosophy in the world. It's in my Swamiji's gifted in my soul that dated as 07/06/2020, 3.40 AM. so, I am realising in the Philosophical Thought.

If anyone interested in this syllabus call me. my whatsup no. +91 99762 45021.

05/11/2024

🙏

Hi Everyone...

கேள்வி - ஐயா எனக்கு சக்கரங்களின் இருப்பிடம் பற்றி தெளிவாக கூறுங்கள் ஏனெனில் பலரும் பல விதமாக கூறுவதால் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் நான் எப்பொழுதும் தேவையற்ற கற்பனைகளிலே சிக்கி தவிக்கிறேன் தியானத்தின் பொழுதும் கற்பனைகளே தோன்றுகின்றன. இதில் இருந்து விடுபட தியானத்தில் நிலைக்க உதவுங்கள்.

இராம் மனோகர் - எண்ணங்கள் நமது முயற்சி ஏதுமின்றியே தானே கிளம்பி வருகின்றன. இன்ன விதமான எண்ணம்தான் எழ வேண்டும் என்று யாரும் உத்தவு போட முடியாது. எண்ணங்களை செயல்படுத்தாமல் விடலாம் அவ்வளவுதான். நமது பழைய பதிவுகளில் இருந்து புறச் சூழல் காரணமாகவோ, வட்டச் சுழற்சியாகிய காலச் சுழற்சியின் அடிப்படையிலோ எண்ணங்கள் எழுகின்றன. ஆனால், கற்பனைகள் என்பது தாமே எழுவதல்ல. கற்பனைகள் என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது. அப்படிப்பட்ட கற்பனைகளைக் கட்டுப்படுத்துவதற்கு நமக்கு வேறு யாரும் உதவி செய்ய முடியாது. அது நமக்கு நாமே செய்ய வேண்டிய முயற்சி. தேவையற்ற இச்சைகள், பேராசை, காமம் போன்ற முரண்பட்ட உணர்வுகளே கற்பனைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

எண்ணங்களைப் புற விஷயங்களோடு பொருத்திப் பார்ப்பதே கற்பனையாக வடிவெடுக்கிறது. எனவே நாம் எண்ணங்களைக் குறைக்கிற அளவு புற விஷயங்களோடு அவற்றைத் தொடர்பு படுத்தும் செயல் குறைந்து போகிறது. எண்ணங்களைக் குறைப்பதற்கான முயற்சியே தியானம். தியானத்தால் எண்ணங்கள் குறைவதோடு மட்டுமல்ல, புலன்களும் புற விவகாரங்களில் இருந்து விடுபடுகின்றன. இதுதான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது. ஆரம்பத்தில் நாம் தியானம் செய்ய அமரும் பொழுது எண்ணங்களும் கற்பனைகளும் வந்து ஆர்ப்பாட்டம் செய்யத்தான் செய்யும்.

ஏனெனில் புற விஷயங்களோடான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ஏற்படும் பதட்டமான நிலையாக அது அமைந்து விடுகின்றது. புற விவகாரங்களுக்கு அங்கே இடமில்லை எனும் பொழுது அவை தங்களுக்குள்ளாகவே அதாவது நமது சித்தத்தில் பதிந்து கிடக்கின்ற சம்ஸ்காரங்களும், வாஸனைகளும் தங்களுக்குள்ளாகவே எண்ணங்களையும், கற்பனைகளையும் தோற்றுவித்து ஆடிப் பார்க்கும். ஆனால், அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் அடுத்த கட்டமான செயல் அங்கே நடைபெற முடியாமல் போய் விடுகின்றது. எனவே அவை வலிமையிழந்து காணாமல் அழிந்து போய் விடும். எனவே விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் தியானம் செய்வதைத் தவிர இதற்கு வேறு வழியேதும் இல்லை.

ஆறு ஆதாரங்கள் பற்றிப் பேசும் பொழுது ஔவைப் பிராட்டியை நினைக்காமல் இருக்க முடியாது. குண்டலினியின் யோக இரகசியங்களை வெளிப்படுத்திய பெண் சித்தர் அவர். ஆன்மீக, யோக காரியங்களிலிருந்து பெண்களை விலக்கி வைத்து அடிமைப்படுத்திய காலகட்டங்களில் அதிரடியாக குண்டலினி யோகத்தைப் பற்றிப் பேசி, பெண்களுக்கு நம்பிக்கையூட்டியவர் அவர். குண்டலினி என்கிற வாலையே பெண்தானே என்று சொல்லி ஆண்களின் அடக்கு முறையை உடைத்தெறிந்த முதல் பெண்மணி ஔவைதான். அவர் தன் வினாயகர் அகவலில்.... ''ஆறாதாரத்து அங்குச நிலையும்
பேறா நிருத்திப் பேச்சுரை அறுத்தே'' என்பார்.

அவர் குறிப்பிடுகின்ற இந்த ஆறு ஆதாரங்களும் சூக்கும உடலைச் சார்ந்தவை. நமது ஸ்தூல உடலானது பஞ்ச பூதங்களின் காரியாத்மமாகவும், சந்திர, சூரிய, அக்னிகளால் ஒளிரும் ஜீவ பர்ரும்ம ரூபமாகவும் விளங்குகிறது. குறிப்பாக முதுகுத் தண்டின் உச்சியில் சந்திரன் விளங்குகிறான். இதில் ஆறு ஆதாரங்களுடன் சூரிய, சந்திர கலைகள் இரண்டும் சேர்த்து உடல் சக்கரத்தின் உறுப்புகள் எனப்படும். அங்குசம் கொண்டு யானையை அடக்கும் பாகனைப் போல, பிராணனை வசப்படுத்தி, அடக்கி இடகலை, பிங்கலை வழியாக வீணே விரையம் செய்யாமல், சுழுமுனை வழியாக மேலேற்றி ஆறு ஆதாரங்களையும் துளைத்துக் கொண்டு மேலே செல்லுமாறு செய்து மௌனமாக இருக்க வேண்டும் என்பது கோட்பாடு.

வெட்டவெளியிலிருந்து பஞ்சபூதங்களில் முதலில் தோன்றியது ஆகாயம். கடைசியில் தோன்றியது மண். அதாவது ஆகாயம் என்பது தலை. பிருதிவி என்கிற மண்தான் கால். இந்த காலைக் கொண்டு போய் தலையில் இணைப்பதுதான் குண்டலினி யோகம். மரணமிலாப் பெருவாழ்வின் இரகசியக் குறியீடுகள் இந்தத் தலையும், காலும். வள்ளலார் சொல்லும் பொழுது
''சாகாக் கல்வி தரம் அறிதல் வேண்டும்
வேகாத கால் உணர்தல் வேண்டும் உடன் சாகாத்
தலையறிதல் வேண்டும் தனியருளில் உண்மை
நிலையடைதல் வேண்டும் நிலத்து'' என்பார். விளக்கங்கள் பலவாறு தரப்பட்டாலும், சூக்கும இரகசியம் என்னவோ ஒன்றுதான். அதாவது மண் தத்துவமாகிய மூலாதாரத்து உறையும் குண்டலினி சக்தியை, ஆகாய தத்துவமாகிய தலையில் விளங்கும் சிவபெருமானிடம் சேர்க்க வேண்டும் அவ்வளவுதான். சேர்த்தால் மரணமிலாப் பெரு வாழ்வு சித்திக்கும். அதற்கு ஆறு ஆதாரங்களைக் கடக்க வேண்டும். இனி அந்த ஆறு ஆதாரங்கள் எங்கிருக்கின்றன என்று பார்ப்போம்.

மூலாதாரம் - ஆசனவாய்க்கும், குறிக்கும் இடையே உள்ள முக்கோண பீடத்தில் குண்டலினி சக்தியானவள் நிலைபெற்று விளங்குகிறாள். அந்த ஆதாரஸ்தானத்திற்கு மூலாதாரம் என்று பெயர். ப்ராணன், மூலக்கனல், நாதம், ஹம்ஸ மந்திரம் எல்லாம் உண்டாவது இங்கிருந்துதான். இதை காமகிரி பீடம் என்றும் சொல்வார்கள். மற்ற ஆதாரச் சக்கரங்களுக்கு ஆதாரமாக இருப்பது மூலாதாரமே. இது முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் உள்ளது. இதில் உள்ள யோக நாடிகள் நான்கு. அவை தாமரை மலரின் நான்கு இதழ்களாக உருவகம் செய்யப்பட்டுள்ளன. அந்த நான்கு தளங்களும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்கிற அந்தகரணங்களைக் குறிக்கின்றன. வ, ச, ஷ, ஸ இவற்றின் அக்ஷரங்கள். பிருதிவி தத்துவம், பூ மண்டலம். உருவம் சதுரம், நடுவில் இச்சை, கிரியை, ஞானம் என்கிற மூன்றையும் குறிக்கும் முக்கோணம். தெய்வம் சித்தி, புத்தி சமேத கணபதி. மூலாதாரத்தை அகோரம் என்றும் சொல்வார்கள். இங்குள்ள அம்பிக்கைக்கு காமா என்று பெயர். இதன் அக்னி கலைகள் 56 என்றும், இதன் மத்திய கர்ணிகையில் சுயம்பு லிங்கம் பின்புறமாகத் திரும்பி உள்ளது என்றும் சொல்வார்கள். எனவே மூலாதாரத்தில் தியானம் செய்ய விரும்புபவர்கள் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் மனதை வைத்து தியானிக்க சித்தி உண்டாகும்.
தொடரும்.......

சுவாதிஸ்டானம் - இது நாபிக்கும், குறிக்கும் இடையே உள்ள சக்கரமாகும். குண்டலினி தானே இதில் அதிஷ்டானமாகி விளங்குவதால் இதை சுய + அதிஷ்டானம் = சுவாதிஷ்டானம் என்று அழைக்கிறார்கள். சரியாகச் சொல்வதென்றால் குறியின் ஆரம்பத்தில் இரைப்பையின் இடது புறம் உள்ளது. யோக நாடிகள் ஆறு. புவர் லோகம். தெய்வம் சாவித்ரி, சரஸ்வதியுடன் கூடிய பிரம்மா. இங்கு குண்டலினி தேவி குமரி என்ற அவத்தையில் திகழ்கிறாள். அக்னிக் கலைகள் 52. எனவே குறிக்கு மேல் நாபியாகிய தொப்புளுக்குக் கீழ் மனதை வைத்து தியானிக்கவும்.

மணிபூரகம் - இங்கு சந்திராம்ருதம் என்ற வஸ்து இருக்கிறது. ஜீவராசிகள் அன்னபானம் செய்யும் பொழுது, சங்கினி நாடியின் மேல் புறத்தில் சுரக்கின்ற சுரப்பு நீர் மணிகள் போல் தோன்றுவதால் இது மணிபூரகம். இது தொப்புள் பகுதியில் உள்ளது. யோக நாடிகள் பத்து. ஜல மண்டலம். தெய்வம் ஶ்ரீதேவி பூதேவியுடன் கூடிய மஹா விஷ்ணு. சூரிய கலைகள் 62. ஸுவர் லோகம். குண்டலினி தேவி சகஸ்ராரத்தில் அமுதத்தை ருசிக்கும் பொழுது, அவை நுண்ணிய திவலைகளாக, சிதறிய மணிகளைப் போல இந்த ஆதாரத்தில் விழுகின்றனவாம். எனவே தியானிக்கிறவர்கள் நாபியில் மனதை வைத்து தியானிக்க சித்தி உண்டாகும்.

அநாகதம் - இது பூர்ணகிரி பீடம் என்று அழைக்கப்படும். சப்த ப்ரும்மம் இங்கு ஸவதிந்தரமாக விளங்குவதால் இது அநாகதம் எனப்படுகிறது. இருதயஸ்தானம். யோக நாடிகள் 12. காற்று மண்டலம். தெய்வம் மஹேஸ்வரன். மகா லோகம். இதன் மத்திய கர்ணிகையில் விளங்கும் ஒளியை பாண லிங்கம் என்பர். சூரிய கலைகள் 54. இங்குள்ள இருட்டு தேவியின் மின்னலால் ஒழிந்து விடுகின்றது. ஆனால் இந்த மின்னல் தோன்றி மறையும் மின்னலலல்ல. கிரமமாக இதர சக்கரங்களைக் கடந்த சாதகன் இங்குதான் தேவியின் அருளைப் பூரணமாகப் பெறுகிறான். அதற்கு அறிகுறியாக ஒரு சப்தம் எழுகின்றது. இதையே நாதம் என்பர். அந்த சப்தம் அபூர்வ ஒலியைக் கொண்டிருப்பதால் அநாகதம் என்று வழங்கப்படுகின்றது. இங்கு குண்டலினி தேவி தருணி எனப்படுகிறாள். இருதயத்தை தியானிக்கவும்.

விசுத்தி - இங்குள்ள ஹம்ஸ வடிவமான பரமாத்மாவைப் பார்த்து ஜீவன் பரிசுத்தமடைவதால் இது விசுத்தம். இது ஜாலாந்திர பீடம். யோக நாடிகள் 16. சந்திர கலைகள் 72. ஆகாய தத்துவம். தெய்வம் சதாசிவம். ஜன லோகம். கழுத்து அல்லது தொண்டைக் குழியை தியானிக்கவும்.

ஆக்ஞா - யோக சாதகர்களுக்கு குருவின் கட்டளைகள் இங்குதான் கிடைக்கும். எனவே இது ஆக்ஞை. இரு புருவங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. யோக நாடிகள் இரண்டு. ஆகாய தத்துவம். உள் மண்டலம். தெய்வம் பரமசிவம். அக்ஷரம் ஓம். சந்திரகலை 64. தலோ லோகம். இங்கு விளங்கும் ஒளியை துரீய லிங்கம் என்பர். இதுபோக நெற்றியில் ஐந்து துணை ஆதாரங்கள் உண்டு. அவை கைலாஸம், மோதினி, கலா, நாதம், சக்தி என்பவையாம். புருவ மத்தியை தியானித்தால் ஒளி காணலாம்.

இந்த ஆதாரங்களைத் தியானிப்பதால் அவை தூண்டப்படும் பொழுது ஏற்படும் மாற்றங்கள், நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம். மூலாதாரம் தூண்டுதல் பெறும் பொழுது மனோமயகோசத்தில் இவ்வுடல் உணர்ச்சி ஏற்றப்படுகின்றது. பிராணமய கோசத்தின் சக்தி உள்ளடுக்குகள் தூண்டப்படுகின்றன. சுவாதிஷ்டானம் தூண்டப்படும் பொழுது மனோமய கோசத்தில் முழு உடலும் எழுச்சி பெறுகிறது. பிராணமய கோசத்தில் மனோமய கோசத்தில் நடக்கும் நிகழ்வுகள் தோற்றத்திற்கு வருகின்றன. மணிபூரகம் தூண்டப்படும் பொழுது மனோமய கோசத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், நிகழ்ச்சிகளின் காரணங்கள் தெரிய வரும். பிராணமய கோசத்திலும், அன்னமய கோசத்திலும் மனோமய கோசத்தைத் தாக்கும் எல்லா சக்திகளும் அறியப்படும்.

அநாகதம் தூண்டப்படடும் பொழுது மற்றவர்களுடைய மனோமய கோசத்தையும் நம்மால் அறிய முடியும். பிராணாயாமத்தால் மற்றவர்களுடைய இன்ப துன்பங்களை தன் உடலுக்கு மாற்றி அதை சரி செய்து விட முடியும். விசுத்தி தூண்டப்படும் பொழுது மனோமய கோசத்தில் கேள்வி ஞானம் உண்டாகிறது. பிராணாயாயத்தின் பொழுது இன்னிசை கேட்கிறது. ஆக்ஞா தூண்டப்படும் பொழுது மனோமய காட்சிகள் காணப்படுகின்றன. பிராணாயாமத்தில் விழித்திருக்கும் பொழுதே அபூர்வ காட்சிகள் தென்படும். முதல் மூன்று ஆதாரங்களை கடக்கின்ற வரை சாதகருக்கு காமம் போன்ற சரீர சுக எண்ணங்கள் மேலோங்கி இருக்கும். அவற்றை உதாசினப்படுத்த வேண்டும்.

அநாகதம் வந்து விட்டால் கீழ்தரமான இச்சைகள் மறைந்து அன்பு, பரம்பொருள் நாட்டம், ஆன்ம போதம், ப்ரம்ச்சர்யம் போன்ற நற்குணங்கள் ஏற்படும். மேல் நிலை ஆதாரங்களுக்குள் வந்து விட்டால் நாடிகள் வலுப் பெற்று மேதை என்கிற நாடி உருவாகும். ஆத்ம தேஜஸ் எனப்படும் ஞானக் கண் உண்டாகும். கீழ் மூன்றும் கீழ் துருவம் சாதரணமாக எழும்பும். மேல் மூன்றும் மேல் துருவம். சற்று பிரயத்தனப்பட வேண்டியதிருக்கும். தடம் மாறினால் மீண்டும் கீழே இழுத்து விடும். இது தொடர் கதையாக நிகழும். விடா முயற்சி வெற்றியை ஈட்டித் தரும்.

🌹🌹🌹

10/07/2020
09/07/2020

Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.

08/07/2020

I am Umayaraja from Tirunelveli, south Tamilnadu, India. I am always completed the master course in yoga past 14 yrs ago and I am introducing advanced kundalini yoga. That also I am achieved and do well. So, I am trying to serve in the people and the nation. So please accept my thoughts and ideas. Swamiji Vethathiri Maharishis asked the one government in the world concept. But thier students don't get the ideas and launch the program. So I am trying the one government concept. I know the lot of risk having in the launch of this concept. I am try this now and registered all datas and documents in the Indian government NGO act. Anything else call me +91 99762 45021.

எனதருமை அன்பு நெஞ்சங்களே! இந்த அருமையான மாலை வேளையிலே All is one and always one (எல்லாம் ஒன்று எப்போதும் ஒன்று) எனும் உண...
12/06/2020

எனதருமை அன்பு நெஞ்சங்களே! இந்த அருமையான மாலை வேளையிலே All is one and always one (எல்லாம் ஒன்று எப்போதும் ஒன்று) எனும் உணர்வு தத்துவ கோட்பாட்டை விளக்க முற்படுகிறோம்.

இந்த பிரபஞ்சம் முழுவதையும் இயக்கி காத்து அழித்து மீண்டும் புதிதாக உருவாக்கி என பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக இயங்கி கொண்டு இருக்கும் இந்தப் பிரபஞ்ச பேராற்றல் அனைத்து உயிர்களிலும் மையம் கொண்டு வெளியே நிகழ்த்தும் நிகழ்வுகளை உடல் எடுத்த உயிரினுள்ளும் நிகழ்த்துகிறது. இதனை ஆறாம் அறிவினைப் பெற்ற மனிதர்களால் மட்டுமே உணர்ந்து வெளிப்படுத்த முடிகிறது. எல்லாராலும் முடியுமா என்றால் நிச்சயமாக முடியும். ஆனால் அனைவரும் உணர்ந்து உரைக்க முற்படுவதில்லை. ஏன்? என்பதை நம் முன்னோர்கள் காலம் காலமாக விரிவாக எடுத்துரைத்து வந்தனர். தற்போதும் அத்தகைய நற் சொயலினை செய்து வருகின்றனர்.
அனைத்தையும் ஒரே பதிவில் பதிவிடுவது என்பது அதிக கால நேரம் எடுக்கும் என்பதால் தொடர்ச்சியை அடுத்த பதிவில் காண்போம். நன்றி!!

Address

Tirunelveli
627005

Telephone

+919976245021

Website

Alerts

Be the first to know and let us send you an email when All is One and Always One posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to All is One and Always One:

Shortcuts

Share