Sowdhapuram GHSS

Sowdhapuram GHSS This page is being maintained by Alumnis for Sowdhapuram Govt Higher Secondary School functions and activities

Annual Day 2024, House Achievement championship
29/02/2024

Annual Day 2024, House Achievement championship

15/02/2024
*🌹🌹🌹வாழ்த்து செய்தி:*நடந்து முடிந்த TRUST EXAM -ல் (கல்வி உதவித்தொகை தேர்வு) நமது பள்ளியை சார்ந்த 1. தரனீஷ் - 9 - EM2. எ...
09/03/2023

*🌹🌹🌹வாழ்த்து செய்தி:*

நடந்து முடிந்த TRUST EXAM -ல் (கல்வி உதவித்தொகை தேர்வு) நமது பள்ளியை சார்ந்த

1. தரனீஷ் - 9 - EM
2. எழில்ஸ்ரீரங்கம் - 9 - EM
3. மனீஷ் - 9 - EM

ஆகிய மாணவர்கள் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்து வாழ்த்துகிறோம்...

*தலைமை ஆசிரியர்,*
*அ.மே.நி.பள்ளி,*
*செளதாபுரம்.*

*🌹🌹🌹வாழ்த்து செய்தி :*கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கு பெற்று இளையோர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்...
11/02/2023

*🌹🌹🌹வாழ்த்து செய்தி :*

கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் பங்கு பெற்று இளையோர் பிரிவில் இரண்டாமிடம் பிடித்த மாணவி தரணிஸ்ரீ (8-TM) மற்றும் மூத்தோர் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த சோமேஷ்குமார் ( 11-std) ஆகியோரை மனமார வாழ்த்துகிறோம்.

*தலைமை ஆசிரியர்,*
அ.மே.நி.பள்ளி,
செளதாபுரம்,
நாமக்கல் மாவட்டம்.

கலைத்திருவிழா :மாவட்ட அளவில் நமது பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுவ்நாளை திருச்செங்கோடு, வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியில் ந...
15/12/2022

கலைத்திருவிழா :

மாவட்ட அளவில் நமது பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுவ்நாளை திருச்செங்கோடு, வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் விழாவில் முதன்மை கல்வி அலுவலர் அம்மா அவர்களிடம் பரிசினை பெற இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இதில் எட்டாம் வகுப்பு ஆங்கில பிரிவை சார்ந்த அஸ்வந்த் என்ற மாணவன் கதை சொல்லுதல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம் :

1. கதை சொல்லுதல் போட்டி :

அஸ்வந்த்
எட்டாம் வகுப்பு ஆங்கில வழி.
முதலிடம்

2.எதிர்கால கனவை பற்றிய ஓவியம் வரைதல் :

கிரிநாத்
11ஆம் வகுப்பு ஆங்கில வழி
மூன்றாம் இடம்

3. மேற்கத்திய நடனம் தனியாக ஆடுதல் :

நந்தினி
11 ஆம் வகுப்பு ஆங்கில வழி
இரண்டாம் இடம்

4. குழு நடனம்:
மைதிலி டீம்
பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் வழி
இரண்டாம் இடம்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...
💐💐💐💐💐💐💐💐💐

🌹🌹🌹 வாழ்த்துச் செய்தி :2021-2022 ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் செளதாபுரம், அ.மே.நி.பள்ளியை சார்ந...
29/08/2022

🌹🌹🌹 வாழ்த்துச் செய்தி :

2021-2022 ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் செளதாபுரம், அ.மே.நி.பள்ளியை சார்ந்த க.பூமிகா என்ற மாணவி தமிழ் பாடத்தில் 100 க்கு 98 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடமும் , 6 மாவட்டங்கள் அளவில் முதலிடமும் பெற்றமைக்காக தமிழ்நாடு ஃபவுண்டேசன் சார்பில் சென்னையில் நடைபெறும் விழாவில் மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் ரூ.7000/- மதிப்பிலான காசோலையை பெற உள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தமிழாசிரியை திருமதி.வை.ப.தமிழ்ச்செல்வி மற்றும் அனைத்து தமிழ் ஆசிரியைகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தற்போது மண்டல அளவில் நடைபெற்று வருகின்ற குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு செளதாபுரம், அ.மே.நி.பள்ளி மாணவர்கள் ...
27/08/2022

தற்போது மண்டல அளவில் நடைபெற்று வருகின்ற குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு செளதாபுரம், அ.மே.நி.பள்ளி மாணவர்கள் வெற்றிகளை குவித்து வருகின்றனர். தற்போது வரை 17 வயது பிரிவு கபடி போட்டியில் இரண்டாமிடமும், 14 வயது பிரிவு Table Tennis ல் இரண்டாமிடமும் வெற்றி பெற்றிருக்கின்றனர். செப் 13 ம் தேதி வரை இன்னும் குழு போட்டிகள் மற்றும் தடகள (Athletics) போட்டிகள் நடக்க உள்ளன. அதிலும் நமது பள்ளி மாணவர்கள் வெற்றிகளை குவித்து வருவார்கள் என வாழ்த்துகிறோம்.

இது வரை இல்லாத அளவில் விளையாட்டு போட்டிகளிலும் நமது பள்ளி மாணவர்கள் வெற்றி பெற உறுதுணையாக இருந்து மிகச்சிறப்பாக பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் திருமதி. தேவி மற்றும் திரு. சந்திரசேகர் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மகிழ்ச்சியான காலங்கள் என்றவொன்று வாழ்விற்கு இருக்குமானால், அது நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ந்திருந்த பள்ளி காலங்கள்  என்ப...
21/08/2022

மகிழ்ச்சியான காலங்கள் என்றவொன்று வாழ்விற்கு இருக்குமானால், அது நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ந்திருந்த பள்ளி காலங்கள் என்பதாகவே நிச்சயம் இருக்கும். 🙂

*🌹🌹🌹 அன்பளிப்பு :*செளதாபுரம், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வளாக சுத்தம் செய்வதற்காகவும், பள்ளியின் எழில் மிகு தோற்றத்திற்கா...
18/07/2022

*🌹🌹🌹 அன்பளிப்பு :*

செளதாபுரம், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வளாக சுத்தம் செய்வதற்காகவும், பள்ளியின் எழில் மிகு தோற்றத்திற்காகவும் ரூ.7,000 மதிப்பிலான களக்கருவிகள் மற்றும் செடிகள் ஆகியவற்றை பள்ளிக்கு அன்பளிப்பாக அளித்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திரு. கண்ணன், திரு. யோகராஜ், பரணிதரன் மற்றும் மெளலீஸ்வரன் ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

*தலைமை ஆசிரியர்,*
*ஆசிரிய ஆசிரியைகள்,*
*அ.மே.நி.பள்ளி,*
*செளதாபுரம்.*

அன்பளிப்பு :செளதாபுரம், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.12,000 மதிப்பிலான  CCTV கேமிரா பார்க்கக்கூடிய LED TV மற்றும் பள்ளிய...
06/07/2022

அன்பளிப்பு :

செளதாபுரம், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.12,000 மதிப்பிலான CCTV கேமிரா பார்க்கக்கூடிய LED TV மற்றும் பள்ளியின் கரும்பலகையை மேம்படுத்துவதற்காக ரூ.4000 த்தையும் வெப்படையை சேர்ந்த திரு.கார்த்திக் அன்பளிப்பாக வழங்கினார். அவருக்கு தலைமை ஆசிரியர் சார்ப்பாகவும், ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைமை ஆசிரியர்,
அ.மே.நி.பள்ளி,
செளதாபுரம்.

Address

Sowdhapuram
Tiruchengodu
638008

Alerts

Be the first to know and let us send you an email when Sowdhapuram GHSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sowdhapuram GHSS:

Shortcuts

Share

Category