14/08/2026
தேசிய நூலகர் தின விழா அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
திருச்செங்கோடு, அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூலகத்துறை, வாசகர் வட்டம் மற்றும் நிறுவன புத்தாக்கச் சபையும் (IIC) இணைந்து தேசிய நூலகர் தின விழாவானது 12.08.2026 அன்று கல்லூரிக் கருத்தரங்கக் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தையாகப் போற்றப்படும் பத்மஸ்ரீ பேராசிரியர் முனைவர் எஸ். ஆர். ரங்கநாதனின் 134-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, “Connecting Knowledge Digitally: E-Resources and the Future of Libraries in the AI Era” என்னும் தலைப்பில் கருத்தரங்கு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயிலின் உதவி ஆணையரும், கல்லூரியின் செயலருமான திரு. மா. சின்னதுரை தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர்
கி. வெங்கடாசலம் தலைமை உரையாற்றினார்.
வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளரும்,
நிறுவன புத்தாக்கச் சபையின் தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பாளரும், கல்லூரி நூலகருமான முனைவர் பா.ஜெகன் வரவேற்புரை
ஆற்றினார்.வாசகர் வட்டச் செயலரும்,
நிறுவன புத்தாக்கச் சபையின் அறிவுசார் சொத்துரிமை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்துறைத் தலைவருமான முனைவர் மா. வசந்தகுமாரி, நிறுவன புத்தாக்கச் சபைத் தலைவரும், கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவருமான முனைவர் செ. பிரேமா,
நிறுவன புத்தாக்கச் சபை ஒருங்கிணைப்பாளரும், கணிதத்துறைத் தலைவருமான முனைவர் சி.நளினி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வாசகர் வட்ட உறுப்பினரும், நிறுவன புத்தாக்கச் சபையின் தொழில்பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறைத் தலைவருமான முனைவர் பா.சரவணன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் நூலகர் முனைவர் ஜெ. ஆறுமுகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) காலத்தில் மின்னணு வளங்கள், டிஜிட்டல் அறிவு மற்றும் எதிர்கால நூலகங்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.விழாவின் நிறைவாக, வாசகர் வட்ட உறுப்பினரும், நிறுவன புத்தாக்கச் சபையின் துணைத் தலைவரும், வணிக நிர்வாகவியல் துறைத் தலைவருமான முனைவர்
மோ. மெய்ஞானம் நன்றியுரை வழங்கினார். மேலும் இவ்விழாவில் மாணவ, மாணவியர்கள், அனைத்துத்
துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பணியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
இவ்விழா, மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம், மின்னணு வளங்களைப் பயன்படுத்தும் திறன் மற்றும் நவீன நூலகங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.