Rajesh Narasimman

Rajesh Narasimman S.G.T.Teacher

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த TET தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. தாள் ஒன்றில் 103 மதிப்பெண்களும் தாள் இரண்டில் 82 மதி...
31/01/2026

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த TET தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. தாள் ஒன்றில் 103 மதிப்பெண்களும் தாள் இரண்டில் 82 மதிப்பெண்களும் பெற்று இரண்டிலும் தேர்வாகியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நவம்பர் 23 புதுமனை புகுவிழா என்ற விசேஷத்தை வைத்துக்கொண்டு இருந்ததனால் நவம்பர் 15,16 தேர்வுகளுக்கு படிப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை. இரண்டிற்கும் தலா ஒரே நாள்தான் படித்தேன். மகிழ்ச்சியுடன் ராஜேஷ் நரசிம்மன் ஆசிரியர் தானங்குப்பம். ஒலக்கூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம். தேர்வு முடிவுகளுக்கான இணைய பக்கம் https://trb.tn.gov.in/more_notification_details.php?id=MN-999

03/01/2026

ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டது ஓய்வூதியம் அறிவித்து ஒல்காப்புகழ் பெற்றார் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின். ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்று விட்டார். நன்றி நன்றி நன்றி

01/11/2024

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்று சொன்னால் பதிலுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்று சொல்லப் பழகுவோம். Same to you என்று சொல்லும் போது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என்று கேட்டதின் மகிழ்ச்சி வெளிப்படவில்லை. ராஜேஷ் நரசிம்மன்.

தமிழன் திருந்தவே மாட்டானா?
29/10/2024

தமிழன் திருந்தவே மாட்டானா?

ஜாலி ஃபோனிக்ஸ்  முறையில் ஆங்கிலம் சிறப்பாக கற்பித்ததை   பாராட்டி வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் சிறு பரிசு. வெற்றிக்கு கா...
19/10/2024

ஜாலி ஃபோனிக்ஸ் முறையில் ஆங்கிலம் சிறப்பாக கற்பித்ததை பாராட்டி வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் சிறு பரிசு. வெற்றிக்கு காரனமானவர்களுடன் ஒரு புகைப்படம். நன்றி ஜாலி போனிக்ஸ் குழுவினருக்கு.

18/10/2024

உலகமே இருண்டாலும் இல்லத்தரசிகளுக்கு ஒரே கவலைதான். துணி தோய்ச்சா காயுமா?

அனைவருக்கும் வணக்கம். ஒரே பதிவு தான் போட்டேன். பதிவை முழுமையாக படித்து உணராமல் மேம்போக்காக படித்து பல பின்னூட்டங்கள் இடப...
18/09/2024

அனைவருக்கும் வணக்கம். ஒரே பதிவு தான் போட்டேன். பதிவை முழுமையாக படித்து உணராமல் மேம்போக்காக படித்து பல பின்னூட்டங்கள் இடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக விடை அளிக்க என்னால் இயலாத காரணத்தினால் ஒரு பதிவாக விடை அளிக்க முடிவு செய்துள்ளேன். உலக மக்களை இறை ஏற்பார்கள் இறை மறுப்பாளர்கள் என்று இருவகையாக பிரிக்கலாம். இதில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் இறை ஏற்பவர்களே. இறைவனை வணங்குவது என்பது தற்போது மிகப்பெரிய குற்றமாக இறை மறுப்பாளர்களால் கருதப்படுகிறது. ஒரு ஆசிரியர் எப்படி சாமி கும்பிடலாம். இப்படி ஒரு சார்பாக பேசலாமா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இங்கே 99 சதவீத ஆசிரியர்கள் மட்டுமல்ல 99 சதவீத மக்கள் இறை ஏற்பாளர்களே. நான் சொல்றது என்னன்னா நான் சாமி கும்பிடுறேன் உனக்கு சாமி பிடிக்கலையா கும்பிடாத. இல்ல வேற சாமி பிடிக்குதா கும்பிட்டு போ நீ கும்பிடுற சாமி சரி இல்ல நீ கும்பிடுற சாமி சரியில்லன்னு ஏன் புலம்பின்னு கிடக்குற. பெரியார் அண்ணா இதுவரையும் கூறியது நீங்கள் உயர்வாக மதிக்கின்ற ஒருவரை பிறர் தாழ்த்தி பேசினால் உங்கள் மனது எப்படி புண்படுமோ என்ற உதாரணம் காட்டவே. மற்றபடி நான் இருவரையும் மதிக்கிறேன். கடவுள் மறுப்பை தவிர பெரியார் கொள்கைகளை பெரும்பாலும் ஏற்பவன் நான். இதைப் பதிவிலேயே குறிப்பிட்டு உள்ளேன் அதைப் படிக்காமல் பெரியாரைப் குறை சொல்றியா அண்ணாவை குறை சொல்றியானு புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கே அவரவர்கள் அவரவர் கடவுளை வழிபட உரிமை உண்டு. ஒரு மதத்தவர் விவகாரத்தில் மற்றொரு மதத்தவர் குறுக்கிடுவது தவறாகும். அப்படியே ஒருவரின் இறை நம்பிக்கையை மற்றொருவர் குறை கூறி சொல்வது தவறாக நான் கருதுகிறேன். அரசுப் பள்ளி ஆசிரியர் இறை நம்பிக்கையுடன் இருக்கலாமா என்று கேட்கிறீர்களே. அரசு விநாயகர் சதுர்த்திக்கு லீவு விடலாமா?. அரசு இந்து அறநிலையத்துறை மூலம் கும்பாபிஷேகம் நடத்தலாமா. அதை பெருமையாக கூறிக் கொள்ளலாமா முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தலாமா இதையெல்லாம் ஏன் செய்கிறார்கள் என்றால் அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. அதை மதிப்போம் என்பதே. இறை நம்பிக்கை உடையவர்கள் மனதை ஏன் புண்படுத்துகிறீர்கள் வேண்டாமே என்று சொன்னால் கூட்டமாக வந்து மீண்டும் புண்படுத்த தொடங்கி விட்டார்கள்.. இறைவனை ஏன் ஏற்க வேண்டும்? இதற்கு கேள்வி பதில்களாக விடை அளிக்கிறேன் இறை ஏற்பாளர்கள் இந்த கேள்விகளுக்கு இப்படியாக விடையளிப்பார்கள் இறை மறுப்பாளர்கள் எப்படியாக விடை அளிப்பார்கள் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும். 1.நான் என் நன்மை செய்ய வேண்டும்? பிறருக்கு உதவ வேண்டும்?.பதில் பிறருக்கு நன்மை செய்யும் போது நீ நன்மை பெறுவாய். பிறருக்கு தீமை செய்யும் போது நீ தீமை பெறுவாய். அப்படியாயின் இதை யார் முன் நின்று நடத்துவது? அவர்தான் இறைவன். உலகின் முதல் சிசிடிவி கேமராவாக இறைவனையே பெரியோர்கள் நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். மேலே இருந்து அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் நீ செய்கின்ற பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப உனக்கு பலன் கிடைக்கும். இந்த பதிலால் அடையும் பலன் தான் என்ன யாரும் பார்க்கவில்லையே என்று நினைத்து தவறு செய்யாமல் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என நினைத்து தவறு செய்வது தடுக்கப்படும். தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்றால் இறைவனை அவர்கள் முழுமையாக ஏற்க வில்லை என்ற அர்த்தம். முழுமையாக ஏற்காத போதே இந்த நிலை என்றால் இறையே இல்லை என்றால் எதற்கும் அஞ்சாமல் தீவினை செய்யத் தலைப்படுவார்கள்2.. நான் எந்த பிறவியில் எந்த தவறும் செய்யவில்லையே எனக்கேன் இந்த தீவினை வந்து சேர்ந்தது? நீ முற்பிறவியில் செய்த பாவங்களுக்கே இப்பிறவியில் பலன் அனுபவிக்கிறாய். எனவே இப்பிறவியில் பாவம் செய்யாதே 3. நான் இந்த பிறவியில் எவ்வளவோ தவறுகள் செய்துள்ளேன் ஆனால் எந்த தண்டனையும் அனுபவிக்கவில்லையே? இதற்கான பலன் உனக்கு அடுத்த பிறவியில் காத்திருக்கிறது.
திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஔவையார், பாரதி இவர்களின் இறை ஏற்பை தவிர்த்து விட்டு தமிழ்ப்பாடம் நடத்தி விடுவீர்களா?. சிறு குழந்தைகளுக்கு பாடம் நடத்துபவன் நான். அவர்களிடத்தில் எந்நேரமும் இறைவனைப் பற்றி சொல்லிக் கொண்டிருப்பது என் வேலை அல்ல. எண்ணும் எழுத்தும் கற்பிப்பது என் பணி. இறை மறுப்பாளர்கள் என்று நீங்கள் குழந்தைகளுக்கு எதை எல்லாம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நாங்கள் தான் கவலைப்பட வேண்டும். சென்ற பதிவின் நோக்கமே அவரவர் பாதையில் அவரவர் செல்வோம் அடுத்தவர் மனதை புண்படுத்தாமல் என்பதே. அதை இனியாவது கடைபிடிப்போம் என நம்புவோமாக....

18/09/2024

பகுத்தறிவு நண்பர்களுக்கு, பெரியார் அண்ணா இருவரையும் மதிக்கிறேன். அவர்கள் இந்த சமுதாயத்திற்கும் எனக்கும் என்ன செய்துள்ளார்கள் என்பதை உணர்ந்தே உள்ளேன். பெரியார் அண்ணா பிறந்த நாட்கள் வந்தன. இந்த நேரத்தில் இவர்களைப் பற்றிய மாற்றுக் கருத்துக்களை பதிவிட்டு யாரேனும் மீம்ஸ் போட்டால் உங்கள் மனம் எப்படி புண் படுமோ, அப்படியே எங்கள் பண்டிகைகள் போது உங்கள் மீம்ஸ்களால் இறை நம்பிக்கையாளர்கள் ஆன எங்கள் மனமும் புண் படும். இவ்வுலகில் அனைவரும் வாழ்வது சிறிது காலம் தான். உங்கள் பகுத்தறிவு உங்களுக்கு. எங்கள் நம்பிக்கை எங்களுக்கு. அவரவர் வழியில் செல்வோம் அடுத்தவர் மனதை புண்படுத்தாமல். அன்புடன் உங்கள் நண்பன் ராஜேஷ் நரசிம்மன்

08/09/2024

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும். சிலப்பதிகாரம்

08/09/2024

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து. -வள்ளுவர்

புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மத்திய ...
24/08/2024

புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை தொடர்பாக மேஜர் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதாவது, ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டம் (UPS) என்ற திட்டத்திற்கு மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

இந்த யுபிஎஸ் ஒய்வுதிய திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒய்வூதியம், குடும்ப பென்ஷன் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகியவை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தின்படி, ஒய்வு பெறுவதற்கு முன்பாக கடைசி 12 மாதங்கள் வாங்கிய அடிப்படை சம்பளத்தின் சராசரியின் 50 சதவிகிதம் வழங்குவதை உறுதி செய்கிறது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு இது கிடைக்கும்.

குடும்ப ஓய்வூதியம் என்பது, அரசு ஊழியர் இறந்ததற்கு பின் அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவிகிதம் குடும்பத்திற்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த புதிய திட்டம் 2004 முதல் ஓய்வு பெற்ற, புதிய ஒய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

Address

Tindivanam
604001

Telephone

9524015201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajesh Narasimman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category