Tindivanam Times

Tindivanam Times தெரிந்ததில் இருந்து தெரியாததை கற்போ?

03/06/2022

தலைவர்களும் அவர்களின் சிறப்புப் பெயர்களும் .

இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல்.

இந்தியாவின் நைட்டிங்கேல் - கவிக்குயில் சரோஜினிநாயுடு.

இந்தியாவின் முதும்பெரும் மனிதர் - தாதாபாய் நௌரோஜி.

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை - ராஜாராம் மோகன்ராய்.

லோகமான்யர் - பாலகங்காதர திலகர்.

லோக்நாயக் - ஜெயபிரகாஷ் நாராயணன்.

தேசபந்து - சித்தரஞ்சன் தாஸ்.

தீனபந்து - சி.தி.ஆண்ட்ரூஸ்.

வங்கபந்து - ஷேக் முஜிபுர் ரஹ்மான்.

குருதேவ் - ரவீந்தரநாத் தாகூர்.

மனிதருள் மாணிக்கம் - ஜவஹர்லால் நேரு.

அமைதி மனிதர் - லால்பகதூர் சாஸ்திரி.

தமிழ்த்தென்றல் - திரு.வி.கல்யாண சுந்தரனார்.

தேசபக்தர்களின் தேசபக்தர் - சுபாஷ் சந்திரபோஸ்

தென்னாட்டு பெர்னாட்ஷா - அறிஞர் அண்ணா.

கவிச்சக்கரவர்த்தி - கம்பர்.

திராவிட ஒப்பிலணக்கத்தின் தந்தை - கால்டுவெல்.

மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்.

தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா அண்ணாமலைச் செட்டியார்.

தமிழ் நாவலின் தந்தை - மாயுரம் வேதநாயகம் பிள்ளை

சிறுகதையின் தந்தை - வ.வே.சு.ஜயர்.

தமிழ்நாட்டு பெர்னார்ட்ஷா - மு.வ.

தமிழ்நாட்டின் மாபஸான், சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்.

புதுக்கவிதையின் பிதாமகன் - நா.பிச்சமூர்த்தி.

வைக்கம் வீரர் - ஈ.வே.ரா.

தமிழ்த்தாத்தா - உ.வே.சுவாமிநாதய்யர்.

தமிழ் நாவலின் தந்தை - மாயுரம் வேதநாயகம் பிள்ளை

தமிழ் நாடகத்தின் தலைமையாசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்.

முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்.

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை - மறைமலை அடிகள்.

பைந்தமிழ்த்தேர்ப்பாகன் - பாரதியார்.

கர்மவீரர் - காமராஜர்.

கவியோகி - சுத்தானந்த பாரதியார்.

மூதறிஞர் - ராஜாஜி.

தொண்டர்சீர் பரவுவார் - சேக்கிழார்.

சிலம்புச் செல்வர் - ம.பொ.சிவஞானம்.

30/05/2022

பல வருடங்களுக்குப் பிறகு,
தங்கள்
துறையில்
உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்...

தங்களது விருப்த்திற்
குறிய
முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

வாழ்க்கை
யிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய பேச்சு,
அந்த
நிமிடங்களில் திசை திரும்பியது. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி
இன்றியும்,
மன உளைச்சலைத்
தரக் கூடியதாகவும் உள்ளது எனவும் ஆதங்கப்
பட்டனர்.

திடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர்
சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபியை கொண்டு
வந்து வைத்தார்.

கூடவே காபி குடிப்பதற்காக விதம் விதமான கோப்பை
களையும் கொண்டு வந்தார்.

அவற்றில் ‘வெள்ளி, பீங்கான்’, போன்ற
விலை
உயர்ந்த கோப்பைகள்
முதல்
அலுமினியம்
‘கண்ணாடி பிளாஸ்டிக்,
காகித கப்
போன்ற
சாதாரண கோப்பைகள்
என பல
வகைகள் இருந்தன.

அனைவரையும் அழைத்து கோப்பைகளை ஆளுக்கொன்றாக எடுத்து
கொண்டு
நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேராசிரியர் கூற,

வந்திருந்தவர்கள் விலை
உயர்ந்த கோப்பைகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

மிக விலை உயர்ந்தவை மற்றும் அழகான கோப்பைகள் எடுக்கப்
பட்டுவிட
அடுத்து வந்தவர்களுக்கு சாதாரண கோப்பைகளே கிடைத்தன.

மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்
தெடுக்கப்பட வில்லை.

அனைவருமே தங்களுக்கு கிடைத்த கோப்பையில்
காபியை
எடுத்துக் கொண்டனர்.

இப்போது பேராசிரியர் பேசலானார் ,

உங்கள்
கைகளில் உள்ள கோப்பைகளை பாருங்கள்.

உங்களுக்கு
மிகச் சிறந்தது வேண்டுமென்று விரும்புகிறீர்கள்.

கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததை தேர்ந்
தெடுக்கிறீர்கள்.

அது இயல்பு
தான் என்றாலும் அவை தான்
மன அழுத்தம், ஏமாற்றம்
போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணம்.

இயல்பாக
சிந்தித்துப் பாருங்கள்.

கோப்பை
எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும், அவை
காபியின் தரத்தை மாற்றப் போவதில்லை.

விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறைந்தும் விடப் போவதில்லை.

உண்மையில் சொல்லப் போனால்,

கோப்பை
களுக்கோ
உள்ளே என்ன உள்ளது என்பது கூடத் தெரியாது.

களைத்துப்
போய் இருக்கும் நேரத்தில் நமக்கு காபி தேவை தான்,

ஆனால்
நாமோ கோப்பைக்குத்
தானே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அது
மட்டுமல்ல.

நீங்கள் ஒவ்வொருவருமே அடுத்தவர்
கையில்
என்ன
மாதிரியான கோப்பை இருக்கிறது என்பதையும் கூர்ந்தே பார்த்துக் கொண்டி
ருந்தீர்கள்.

அடுத்தவரிடம் உள்ளது
விலை உயர்ந்தது என்றால்,
நமக்கு அது கிடைக்க
வில்லையே
என்ற வருத்தமும்,
அது சாதரணமானது என்றால்,

உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியும் அடைந்
திருப்பீர்கள்.

ஆக வாழ்க்கையும்
காபி போன்றது தான்.
பதவி பணம் அந்தஸ்து போன்றவை கோப்பை
களாகும்.

அவை வாழ்க்கைக்கு உதவும் வெறும் கருவிகளே. க்ஷ

அவைகளே வாழ்க்கை ஆகி விடாது.

கோப்பையின்
மீது நாம் செலுத்தும்
அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அந்த நேரத்தில் அனுபவிக்கத் தவறி விடுகிறோம்.

கோப்பையை ஒதுக்கி விட்டு
காபியை பாருங்கள்.

மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்
பதில்லை.

மாறாக தாம் பெற்றிருப்பதையே சிறந்ததாகக் கருதுகிறார்கள்.

அதனால்
தான்
அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாகவே நெருங்குவதும்
இல்லை...

இயல்பாக, எதார்த்தமாக ஆழ்மன
திருப்தியுடன்
வாழப்
பழகுங்கள்.

26/05/2022

நண்பர் வெளியூர் செல்ல *Call Taxi* ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் கவனித்தது காரின் பின்னால் ஓட்டியிருந்த ஆங்கில வாக்கியம்.

*Duck or Eagle*
*You decide*

அடுத்து அவர் கவனத்தை
கவர்ந்தது *(Clean and shiny)* பளிச்சென்று சுத்தமாக இருந்த கார்.

*டிரைவர் நல்ல வெள்ளையுடை அணிந்து பளிச்சென்று புன்னகையுடன் இருந்தார்.*

அவரே வந்து கார் கதவை திறந்து நண்பரை அன்போடு அமர சொன்னாராம்.

*அழகான டிரைவிங். கேட்டதற்கு மட்டும் தெளிவான பதில்.*

நண்பர் அந்த ஓட்டுனரின் அழகிய செயல்களால் மிகவும், கவரப்படார்.

பொதுவாக *Call Taxi* டிரைவர்கள் சற்று இறுக்கமாகவே இருப்பார்கள். பயணம் முடிந்தவுடன் அவர் யாரோ? நாம் யாரோ? என்ற கண்ணோட்ட்த்தோடு.

*இந்த டிரைவர் மிகவும் வித்தியாசமாக கண்ணியமாக நட்போடு இருந்தார். பட்டதாரியும் கூட.*

*அவரிடம் எப்போதுமே நீங்கள் இப்படித்தானா?* என்று நண்பர் கேட்டிருக்கிறார்.

இல்லை சார். *நானும் மற்ற டிரைவர்ஸ் போல்தான் இருந்தேன். சத்தம் போட்டு கொண்டு குறை கூறி கொண்டு "* என்றார்.

*எப்படி உங்களை நீங்களே மாற்றி கொண்டீர்கள்?* என்று நண்பர் கேட்டிருக்கிறார்.

ஒரு *Client seminar* ஒன்றிற்கு சென்றார் . சும்மா டாக்ஸியில் அமர்ந்திருப்பதற்கு கேட்கலாமே, என்று உள்ளே நுழைந்தேன். *அந்த seminar என்னை மாற்றி விட்டது"* என்றார்.

என்ன *Seminar?*

*உங்களை நீங்களே உயர்த்திக் கொள்வது எப்படி ?*

*என்ன சொன்னார்கள்?*

பல அறிவுரைகள். என்னை மிகவும் கவர்ந்தது இதுதான்.

*காலையில் எழுந்திருக்கும் போதே இந்த நாள் சரியாக இருக்காது என்று எதிர்மறை சிந்தனையோடு எழுந்தால் அந்த நாள் கண்டிப்பாக நன்றாக இருக்காது."*

இதையே ஆங்கிலத்தில் சொன்னார்கள்.
அப்போதுதான் அதன் ஆழம் புரிந்தது.

*If you get up in the morning expecting a bad day,you will.*

*Don't be a Duck*
*Be an Eagle*

*The ducks only make noise and complaints.*
*The eagles soar above the group*.

அந்த அறிவுரை என்னை
மிகவும் கவர்ந்தது.

என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டேன்.

நான் *Duck* போல இருப்பதை உணர்ந்தேன். ஏன் *Eagle* போல இருக்க கூடாது என்று எண்ணினேன். *என்னை நானே மாற்றி கொண்டேன் என்றார்.*

எல்லா *Customer* இடமும் அன்போடு பணிவாக நடந்து கொள்ள ஆரம்பித்தேன்.

மன அமைதி மட்டுமல்ல. என் வருமானமும் பெருகியது. *Always my taxi busy.* ஒரு முறை பயணம் செய்தவர்கள், என்னையே அழைக்க ஆரம்பித்தார்கள்" என்றார்.

நண்பர் சொன்னபோது எனக்கே அவரை பார்க்க வேண்டும் போல்
இருந்தது.

அவர் சொன்னது உண்மைதான்.

*எந்த வேலையாக இருந்தாலும், நாம் நடந்து கொள்ளும் நடத்தையும், அர்ப்பணிப்பு உணர்வுமே,(behaviour and involvement) நம்மை உயர்த்தும்.*

உயர உயர வாழ்வில்
*Eagle* போல பறக்க வைக்கும்.

இப்பொழுது நம் முன்னால்
இருக்கும் *ஒரே கேள்வி :*

*நாம் எப்படி வாழ வேண்டும்?*
*Duck or Eagle ?*

முடிவு எடுக்க வேண்டியது நாமே.

*நல்ல நண்பனாக, நல்ல சகோதரனாக, நல்ல அப்பாவாக, நல்ல கணவனாக, நல்ல அம்மாவாக, நல்ல மனைவியாக, குறிப்பாக நல்ல குடிமகனாக மாறுவது எல்லாமே நம் கையில்தான்.*

*பயணிக்க போவது சிறிது காலமே. அனைவரிடமும் அன்பை செலுத்துவோம். அன்பை பெறுவோம். நம்மை நாமே உயர் சிந்தனையால் Eagle போல வானத்தை நம் நல்லெண்ண சிறகுகளால் அளப்போம்.*

16/05/2022

++++++++++++++++++++
10th New Book Back
👉 *2.ஒளியியல்*
++++++++++++++++++++
1.A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளிவிலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4எனில் இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது ❓
*A*

2.பொருளின் அளவிற்கு சமமான தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு ❓
*2f*

3.மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது.மின்விளக்கு ஒளியூட்டப் படும்போது,குவி லென்சானது ❓
*இணைக் கற்றைகளை உருவாக்கும்*

4.குவிலென்சின் உருப்பெருக்கம் ஆனது எப்போதும்........... மதிப்புடையது ❓
*நேர்க்குறி (அல்லது) எதிர்க் குறி*

5.ஒரு குவிலென்ஸ் ஆனது மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மை குவியத்தில் உருவாக்கினால்,பொருள் வைக்கப்பட்ட இடம்❓
*ஈறிலாத் தொலைவு*

6.ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு ❓
*-0.25மீ*

7.கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில்,பொருளின் பிம்பமானது------------தோன்றுவிக்கப்படுகிறது ❓
*விழித்திரைக்கு முன்பாக*

8.விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டை சரி செய்ய உதவுவது ❓
*இரு குவிய லென்சு*

9.சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துக்களை படிப்பதற்கு உகந்த லென்சு எது ❓
*5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு*

10.ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும் நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் அலை நீளங்கள் VB,VG,VR எனில் அதன் சமன்பாடு ❓
*VB

09/05/2022

TNPSC வரலாறு
சுங்க வம்சம் - முக்கிய குறிப்புகள்

https://youtu.be/UQ9NhxDUaVo

09/05/2022

சுங்க வம்சம் மற்றும் அதன் அரசர்கள் அவர்களது முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்ளல்

23/11/2021

UNESCO வால் அங்கீகரிக்கப்பட்ட பிரதான சின்னங்கள் - வருடங்கள்:-
👉அஜந்தா குகை - 1983
👉 எல்லோரா குகை - 1983
👉 ஆக்ரா கோட்டை - 1983
👉தாஜ்மகால் - 1983
👉 சூரியனார் கோயில் - 1984
👉 மகாபலிபுரம் கடற்கரை கோயில் - 1984
👉கியோலேடியோ தேசிய பூங்கா - 1986
👉 கஜுராஹோ சிற்பங்கள் - 1986
👉ஃபதேபூர் சிக்ரி - 1986
👉தேவாலயங்கள் மடாலயங்கள் - 1986
👉ஹம்பி நினைவுச் சின்னங்கள் - 1986
👉எலிஃபென்டா குகைகள் - 1987
👉 தஞ்சை பெரிய கோயில் - 1987
👉பட்டாடக்கல் நினைவு சின்னங்கள் - 1987
👉சுந்தரவன பூங்கா - 1987
👉நந்தாதேவி தேசிய பூங்கா - 1988
👉சாஞ்சி புத்த மடாலயங்கள் - 1989
👉ஹுமாயூன் கல்லறை - 1993
👉குதுப்மினார் - 1993
👉இமாலயன் இரயில்வே - 1999
👉புத்தகயா மகாபோதி கோயில் - 2002
👉பிம்பேத்கா குகைவாழிடங்கள் - 2003
👉கங்கை கொண்ட சோழபுரம் கோயில் - 2004
👉ஐராதீஸ்வரர் கோவில் - 2004
👉குஜராத் சாம்பனார்பவகாட் தொல்பொருள் பூங்கா - 2004
👉சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேசன்- 2004
👉நீலகிரி மலை இரயில்வே – 2005

01/10/2021

Address

Tindivanam
604001

Alerts

Be the first to know and let us send you an email when Tindivanam Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category